25 வயது பெண்ணை திருமணம் செய்த பப்லு..பல்லு இருக்கிறவன் பக்கோடா சாப்பிடுகிறான்..கலாய்த்த நடிகை!
சென்னை : 25 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்ட பப்லுவை சீரியல் நடிகை பங்கமாக கலாய்த்து உள்ளார்.
நடிகர் பப்லு சினிமாவில் என்ட்ரி கொடுத்து கிட்டத்தட்ட நாற்பது வருடங்களுக்கு மேலாகிறது. அதோடு இவர் பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து இருக்கிறார்.
இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம் என பிற மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார். இவர் இதுவரை 200 படங்களுக்கு மேல் நடித்து இருக்கிறார்.

நடிகர் பப்லு
தமிழ் சினிமா உலகில் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும், வில்லன் கதாபாத்திரங்களிலும் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் பப்லு என்கிற பிரித்திவிராஜ். இவர் நடிகர் எம் ஜி ஆர், சிவாஜி போன்றவர்களின் படங்களில் குழந்தை நட்சத்திரமாகவும் பல முன்னணி நடிகர்களின் படங்களில் வில்லனாகவும் நடித்துள்ளார்.

இரண்டாவது திருமணம்
பப்லுவுக்கு சினிமாவில் வாய்ப்பு குறைந்ததை அடுத்து மர்மதேசம், அரசி,வாணி ராணி, கண்ணான கண்ணே பல சின்னத்திரை சீரியல்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பப்லு, உடல் நலம் குறித்து பேசினார். மேலும், என்னை ஆரோக்கியமாக கவனித்து கொள்வது என் மனைவி தான் என அருகில் இருந்த இளம் பெண்ணை அறிமுகப்படுத்தி அனைவருக்கும் ஷாக் கொடுத்தார். அந்த பெண்ணிற்கு 25 வயது தான் ஆகிறது. இவருக்கோ 55 வயதாகிறது.

இந்த வயதில் தேவையா இது
இணையத்தில் இந்த செய்தி காட்டுத்தீ போல பரவியதை அடுத்து நெட்டிசன்கள் பலர் இந்த வயதில் திருமணம் தேவையா? என்றும், அதுவும் 25 வயது பெண்னை திருமணம் செய்திருக்கிறீர்கள் இணையத்தில் பல்வேறு கமெண்டுகள் பரவியது. இதையடுத்து, நடிகை காஜல் பசுபதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,பல்லு இருக்குறவன் பக்கோடா சாப்பிடுகிறான்... உங்களுக்கு என்னய்யா பிரச்சனை, பொறாமை பிடிச்ச உலகம் என்று கருத்துக்களை பகிர்ந்து இருந்தார்.

மலேசியாவைச்சேர்ந்த பெண்
நடிகர் பப்லுவுக்கு ஏற்கனவே திருமணமாகி 25 வயதில் வயதில் ஒரு மகன் இருக்கிறார். இவருக்கு மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். நடிகர் பப்லுக்கு மலேசியாவை சேர்ந்த ஒரு பெண்ணுடன் நட்பு ஏற்பட்ட நிலையில், முதலில் இந்த பெண் பப்லுக்கு தொழில் ரீதியாக தான் உதவியாளராக இருந்தார். பின் சில மாதங்களுக்கு முன்பு தான் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள் என்ற தகவல்கள் வெளியானது.


Click it and Unblock the Notifications











