என்ன கண்மணி ஓகேவா.. பர்மிஷன் கேட்டு தாலி கட்டிய அஷ்வத்.. டிரெண்டாகும் வீடியோ!
சென்னை: சீரியல் நடிகை கண்மணி மனோகரன் மற்றும் அஸ்வத்தின் திருமண வீடியோ இணையத்தில் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. நீண்ட நாட்களாக காதலித்து வந்த இவர்களுக்கு ஜூன் மாதம் நிச்சய தார்த்தம் நடந்த நிலையில் இன்று திருமணம் கோலாகலமாக நடந்தது.
விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா சீரியலில், அஞ்சலி என்ற முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார் நடிகை கண்மணி மனோகரன். 2019ம்ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த தொடர், இல்லத்தரசிகளுக்கு மிகவும் பிடித்தமான தொடராக மாறியதை அடுத்து கிட்டத்த ஆறு ஆண்டு ஒளிபரப்பாகி, கடந்த ஆண்டு நிறைவடைந்தது. பாரதி கண்ணம்மா சீரியல் முடிந்ததை அடுத்து, ஜீ தமிழ் தொலைக்காட்சிக்கு சென்ற கண்மனி, அமுதாவும் அன்னலட்சுமியும் என்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

கண்மணி மனோகரன்: சீரியலில் பிஸியாக நடித்து வரும் இவர், இன்ஸ்டாகிராமில் விதவிதமான போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வந்த நிலையில், திடீரென தனது காதலுடன் இருக்கும் போட்டோவை ஷேர் செய்து காதலிப்பதை உறுதிப்படுத்தினார். இவர்களுக்கு ஜூன் மாதம் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது.

தடபுடல் கல்யாணம்: கண்மணி மனோகரின் காதல் கணவர் வேறு யாரும் இல்லை பிரபல தொலைக்காட்சியான சன் தொலைக்காட்சியில், வணக்கம் தமிழா போன்ற சில ஸ்பெஷல் நிகழ்ச்கிகளை தொகுத்து வழங்கி வரும் அஷ்வத் தான். இருவரும் நீண்ட நாள் காதலித்து வந்ததை அடுத்து காதலை பெற்றோரிடம் சொல்லி திருமணத்திற்கு ரெடியானார்கள். கடந்த இரண்டு மாதமாக இவர்களின் திருமண வேலை தடபுடலாக நடந்தது. இவர்கள் தங்களின் திருமண பத்திரிக்கையை நடிகர் விஜய் சேதுபதிக்கும்,சூப்பர் ஸ்டார் வீட்டுக்கு சென்று லதா ரஜினிகாந்திடமும் கொடுத்து ஆசிர்வாதம் பெற்றனர். இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் ஹல்தி கொண்டாட்டம் கோலாகலமாக நடந்தது. இதைத்தொடர்ந்து நேற்று ரிசப்ஷன் நடைபெற்றது.

காதல் திருமணம்: இதைத்தொடர்ந்து இன்று கண்மணி மனோகரனுக்கும் தொகுப்பாளர் அஷ்வத்திற்கும் பெற்றோர் முன்னிலையில் தடபுடலாக திருமணம் நடைபெற்றது. காலையில் இருந்து திருமணம் குறித்த எந்த போட்டோவும் வெளியாகாத நிலையில், தற்போது கண்மணி தனது இன்ஸ்டாகிராமில் திருமண வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், கோல்டன் ஸ்பேரோ... என் நெஞ்சில ஏரோ பாடல் ஒலிக்க, என்ன கண்மணி ஓகேவா... என பர்மிஷன் கேட்டு தாலி கட்டுகிறார் அஷ்வத். திருமண பந்தத்தில் இணைந்துள்ள இந்த தம்பதிகளுக்கு பலர் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.



Click it and Unblock the Notifications











