நாங்க அப்பா அம்மா ஆகபோறோம்.. கர்ப்பத்தை அறிவித்த கன்னிகா சினேகன்!
சென்னை: தமிழ் சினிமாவின் பாடல் ஆசிரியரான சினேகன், சீரியல் நடிகை கன்னிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னும் இவர்கள் காதல் ஜோடியாகவே வலம் வந்து கொண்டிருந்த இவர்களுக்கு என்றே தனி ரசிகர்கள் இருக்கும் நிலையில் தற்போது இவர்கள் மகிழ்ச்சியான செய்தி ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளனர்.
பாடலாசிரியரான சினேகன் 2500க்கு மேற்பட்ட பாடல்களை எழுதி இருக்கிறார். அதிலும் தமிழ் சினிமாவில் சூப்பர் ஹிட் கொடுத்திருக்கும் பாடல்கள் இவர் எழுதியது தான். இருந்தாலும் இவரை பிரபலமாக்கியது விஜய் டிவியில் ஒளிபரப்பாக பிக் பாஸ் நிகழ்ச்சி தான். பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக சினேகன் கலந்து கொண்ட பின், தான் பட்டி தொட்டி எங்கும் இவரின் முகம் பரீட்சயமானது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சினேகன் கமலின் கட்சியில் இணைந்தார்.

காதல் திருமணம்: இதையடுத்து பாடலாசிரியர் சினேகன், பத்து ஆண்டுக்கும் மேலாக காதலித்து வந்த சீரியல் நடிகை கன்னிகாவை கமல்ஹாசன் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார். பல ஆண்டுகளாக இவர்கள் காதலித்தபோதும் அது யாருக்கும் தெரியாமல் வைத்து பின் பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். கன்னிகா சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த 'கல்யாண வீடு' என்ற தொடரில் நடித்துள்ளார். வெள்ளித்திரையிலும், கன்னிகா தேவராட்டம், அடுத்த சாட்டை போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

குட் நியூஸ்: திருமணத்திற்கு பிறகு, சினேகா மற்றும் கன்னிகா இருவருமே இணையத்தில் மிகவும் ஆக்டிவாக உள்ளனர். குறிப்பாக இவர்கள் இருவரின் காதல், ரொமான்ஸ் வீடியோக்களுக்கு என்றே தனி ரசிகர்கள் இருக்கிறார்கள். கடந்த ஜூலை மாதம், மூன்றாவது திருமண நாளை கொண்டாடிய இவர்கள், இருவரும் நாங்கள் குழந்தை பெற்றுக்கொள்ள தயார் ஆகிட்டோம் என கூறியிருந்தனர். தற்போது அதை உறுதிப்படுத்தும் வகையில் கன்னிகா தனது இன்ஸ்டாகிராமில், நாங்க அப்பா அம்மா ஆகபோறோம்... உங்கள் எல்லோருடைய அன்பும் வாழ்த்தும் வேண்டும் என பதிவிட்டுள்ளார்.இதற்கு ரசிகர்கள் பலரும் இணையத்தில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.



Click it and Unblock the Notifications











