வயிற்றில் குழந்தையுடன் க்யூட் ரியாக்ஷனை காட்டிய… நந்தினி சீரியல் நடிகையின் வைரல் வீடியோ !
சென்னை : சன் டிவியில் ஒளிபரப்பான நந்தினி சீரியலில் நடித்து பிரபலமானவர் கீர்த்தி.
இவர், தமிழ், தெலுங்கு என பல தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துள்ளார்.
கீர்த்தி தன்னுடன் நடித்த ஜெய்தனுஷ் என்பதை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது கர்ப்பாக இருக்கும் இவர் வயிற்றில் குழந்தையுடன் ஒரு க்யூட் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

ரசிகர்கள் ஏராளம்
சன் தொலைக்காட்சியில் மிகவும் பரபரப்பாக விறுவிறுப்பாக இருந்த தொடர் நந்தினி. நாகினி தொடருக்கு அடுத்த படியாக இந்த சீரியலில் பெரிய பாம்பு வருவதும், மந்திரம்,மாந்திரீகம் வருவதும் ரசிக்கும் படியாக இருக்கும். இதனால் இந்த தொடருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருந்தனர்.

பிரபலமானார்
இந்த தொடரை நடிகை குஷ்பு தயாரித்தார். இயக்குனர் சுந்தர் சி இயக்கினார். இதில், ராகுல் ரவி கதாநாயகனாகவும், நித்யா ராம், மாளவி வேல்ஸ் இருவரும் ஹீரோயினாக நடித்திருந்தனர். இதில் மாயா என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார் நடிகை கீர்த்தி.

ஜெய் தனுஷ்
கீர்த்தி தற்போது கல்யாண பரிசு என்ற தொடரில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் ஜெய்தனுஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவரும் ஒரு நாடக நடிகர் தான் சன்டிவியில் ஒளிபரப்பாகி வரும் சந்திரலேகா தொடரில் சஞ்சய் பரந்தாமன் என்னும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
ரியாக்ஷனை காட்டி
நடிகை கீர்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வளைகாப்பு நிகழ்ச்சியில் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு இருந்தார். இந்த தம்பதிகளுக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வந்தனர். இந்நிலையில், சமூகவலைத்தள பக்கத்தில் வயிற்றில் குழந்தையுடன் அழகான உடையில் குட்டி குட்டி ரியாக்ஷனை காட்டி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











