பிக்பாஸ் 9 போட்டியாளர்கள்.. நாத்தம் அடிக்கும் குப்பை.. சீரியல் நடிகை இந்த கிழி கிழிக்கிறாங்களே

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒன்பதாவது சீசன் தொடங்கி நடந்துவருகிறது. இந்த சீசனில் இதுவரை நந்தினி, பிரவீன் காந்தி, அப்சரா உள்ளிட்டோர் வீட்டிலிருந்து வெளியேறியிருக்கிறார்கள். எந்த சீசனும் இல்லாத அளவுக்கு இந்த சீசன் கடுமையான எதிர்ப்புகளை சந்தித்துவருகிறது. இந்நிலையில் சீரியல் நடிகை லட்சுமி பிக்பாஸ் போட்டியாளர்களை கடுமையாக விமர்சனம் செய்து பேசியிருக்கிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒன்பதாவது சீசனில் மொத்தம் 20 போட்டியாளர்கள் கலந்துகொண்டார்கள். வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர், அரோரா, எஃப்ஜே, விஜே பார்வதி, துஷார், கனி, சபரி, பிரவீன் காந்தி, கெமி, ஆதிரை, ரம்யா, கானா வினோத், வியானா, பிரவீன், சுபிக்‌ஷா, அப்சரா, நந்தினி, விக்கல்ஸ் விக்ரம், கம்ருதீன், கலையரசன் ஆகியோர் கலந்துகொண்டார்கள். எந்த முறையும் இல்லாத அளவுக்கு இந்த முறை சோஷியல் மீடியா இன்ஃப்ளூயன்ஸர்கள் அதிகம் ஆக்கிரமித்திருக்கிறார்கள்.

நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியவர்கள்: முதல் ஆளாக நந்தினி சுய விருப்பத்தின் அடிப்படையில் வீட்டிலிருந்து வெளியேறினார். அதனையடுத்து பிரவீன் காந்தி, அப்சரா உள்ளிட்டோர் எவிக்ட் செய்யப்பட்டிருக்கிறார்கள். நிகழ்ச்சி ஆரம்பித்திலிருந்தே பிரவீனும், அப்சராவும் பெரிதாக ஈர்க்காததால்தான் அவர்கள் வீட்டிலிருந்து உடனடியாக எவிக்ட் செய்யப்பட்டிருக்கிறார்கள் என்பது பெரும்பாலானோரின் கருத்து.

Serial Actress Lakshmi Blasts Bigg Boss Season 9 Contestants Calls It the Worst Season Ever
Photo Credit:

இந்த முறை டல்தான்: இது ஒருபக்கம் இருக்க முதல் நாளிலிருந்தே நிகழ்ச்சி சுவாரஸ்யம் இல்லாமல் சென்றுகொண்டிருப்பதாக பேச்சு பரவலாக ஓடிக்கொண்டிருக்கிறது. விஜய் சேதுபதியும் ரொம்ப ஸ்ட்ரிக்ட்டாக இருந்தாலும் அதுவே ஓவர் டோஸ் ஆகி அவருக்கு எதிராகவும் விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. இயக்குநர் பிரவீன் காந்திகூட வெளியே வந்த பிறகு அளிக்கும் பேட்டிகளில் சேதுவை அட்டாக் செய்தே பேசிவருகிறார்.

வலுக்கும் எதிர்ப்புகள்: அனைத்துக்கும் உச்சக்கட்டமாக பிக்பாஸே போட்டியாளர்களிடம் இந்த சீசன் ஒழுங்கீனத்தால் ஃபேமஸ் ஆகியிருக்கிறது என்று வருத்தப்படும் அளவுக்கு நிலைமை சென்றிருக்கிறது. அதேபோல் வீட்டுக்குள் இருக்கும் போட்டியாளர்களோ எல்லை மீறியே நடந்துகொள்கிறார்கள். விஜே பாருவை முதலில் தங்கை என்று அழைத்த வாட்டர் மெலன் ஸ்டார் போக போக தன்னுடைய செயலில் மாற்றத்தை காண்பித்தார். மேலும் எஃப்ஜே, அரோரா, ஆதிரை உள்ளிட்டோர் முகம் சுளிக்கும்படி நடந்துகொள்வதாக குரல்கள் எழுந்திருக்கின்றன. இதனால் எதிர்ப்புகளும் வலுத்திருக்கின்றன.

லட்சுமி காட்டம்: இந்நிலையில் சீரியல் நடிகை லட்சுமி அளித்த பேட்டியில், "பிக்பாஸ் நிகழ்ச்சி கேவலத்தின் உச்சக்கட்டமாக இருக்கிறது. உங்கள் வீட்டு குழந்தைகள் பார்க்கிறார்களா இல்லையா. கொஞ்சமேனும் சமூக அக்கறை இருக்கிறதா?.. இந்த கன்றாவியை ஒளிபரப்பி என்ன சாதிக்கப்போகிறீர்கள். உள்ளே இருக்கும் போட்டியாளர்கள் நாத்தமடிக்கும் குப்பைகள். அவர்களை வெளியே தூக்கி போட்டு சுத்தம் செய்ய வேண்டும். மாதர் சங்கத்தினர் ஏதோ ஒரு பாடலில் தவறான வரி இருந்தால் கொடி பிடித்துக்கொண்டு வருவர்கள். இவ்வளவு அசிங்கம் நடக்குது. இப்போ எங்கே சென்றார்கள். அசிங்கமா பேசுபவர்களை விஜய் சேதுபதி கன்ட்ரோல் செய்ய வேண்டும்" என்றார்.

More from Filmibeat

Read more about: bigg boss tamil 9
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X