ரூ.15 லட்சம் அபேஸ்..பல நாட்களாக இழுத்தடிப்பு...சீரியல் நடிகை மகாலட்சுமி கணவர் இப்படி செய்யலாமா?
சென்னை: சீரியல் நடிகை மகாலட்சுமியின் கணவரும் தயாரிப்பாளருமான ரவீந்தர் அமெரிக்காவைச் சேர்ந்த இளைஞர் ஒருவரிடம் ரூ.15 லட்சத்தினை வாங்கிவிட்டு ஏமாற்றியதாக புகார் எழுந்துள்ளது.
தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளர்களில் ஒருவர் ரவீந்தர் சந்திரசேகர். லிப்ரா புரொடக்ஷன் என்ற நிறுவனம் மூலம் திரைப்படங்களைத் தயாரித்து வருகிறார்.
இவர் கடந்தாண்டு சீரியல் நடிகை மகாலட்சுமியை திடீரென திருமணம் செய்து கொண்டதை அடுத்து சோஷியல் மீடியாவில் மிகப்பெரிய அளவில் பிரபலமானார்.

ஜாலியான வாழ்க்கை: இவர்கள் இருவரும் உருவக்கேலிக்கு ஆளாகி பல கருத்துக்களை எதிர்கொண்டாலும் மகிழ்ச்சியாக ஜோடியாக வாழ்ந்து வருகின்றனர். புது கார் வாங்குவது, ஓட்டலுக்கு செல்வது என, ஜாலியான வாழ்க்கை வாழ்ந்து வருவதை புகைப்படமாக எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அப்லோடு செய்து வருகின்றனர்.
பண மோசடி புகார்: இந்நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த விஜய் என்பவரிடம் தயாரிப்பாளர் ரவீந்தர் கடந்த ஆண்டு மே மாதம் 8ம் தேதி, நடிகர் ஒருவருக்கு அட்வான்ஸ் என 20 லட்சம் ரூபாய் பணம் கேட்டுள்ளார். இதற்கு அமெரிக்காவைச் சேர்ந்த விஜய், என்னிடம் 20 லட்சம் இல்லை 15 லட்சம் தான் இருக்கிறது. அதை தான் இரண்டு தவனையாக அனுப்புவதாக கூறி முதலில் 10 லட்சமும், அடுத்த நாள் 5 லட்சம் பணத்தை ரவீந்தர் வங்கி கணக்கிற்கு அனுப்பி உள்ளார்.
பணம் தராமல் இழுத்தடிப்பு: விஜய்யிடம் இருந்து பணத்தை பெற்றுக்கொண்ட ரவீந்தர், பணத்தை 16 லட்சமாக ஒரே வாரத்தில் திருப்பிக் கொடுத்துவிடுவதாக கூறியுள்ளார். ஆனால், ரவீந்தர் சொன்னபடி பணத்தை தராமல் இழுத்தடித்துள்ளார். ரவீந்தரிடம் பணம் விஷயமாக கேட்டதற்கு, வங்கி விடுமுறை என்றும், செக் அனுப்பிருக்கேன் என்று விதவிதமான கதைகளை சொல்லி ஒரு கட்டத்தில் அமெரிக்க நபர் விஜய்யின் செல்போன் நம்பரை பிளாக் செய்துள்ளார்.
ரவீந்தர் மீது புகார்: இதனால் விஜய்யின் மனைவி, ரவீந்திரனை தொடர்பு பணத்தை கேட்டபோது, அவரை தகாதவார்த்தையால் பேசி இருக்கிறார். இதனால், ஆத்திரம் அடைந்த விஜய் ஆன்லைன் மூலம் அமெரிக்காவிலிருந்து ரவீந்திரன் பணம் கேட்டதற்கான ஆதாரம், அவர் பணம் கேட்டு பேசி ஆடியோ போன்றவற்றை வைத்து சென்னை கமிஷ்னருக்கு புகார் ஒன்றினை அளித்துள்ளார்.
ரவீந்தரின் கூல் பதில்: இந்த புகார் குறித்து ரவீந்தரிடம் கேட்டபோது, தான் விஜய்யிடம் இருந்து 15 லட்சம் வாங்கியது உண்மை தான் என்றும்,ஆனால் இந்த பணத்தினை வெளிநாட்டிலிருந்து இங்கு கொண்டுவருவதற்கு முடியாமல் விஜய் தன்னிடம் கொடுத்து வைத்ததாகவும்,விஜய்யின் உறவினர்கள் வந்தால் தான் செக்கை கொடுத்துவிடுவேன் என்று கூலாக பதில் அளித்துள்ளார். இந்த விவகாரம் தற்போது சோஷியல் மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications











