நுரையீரலில் இன்ஃபெக்ஷன்.. ரவீந்தருக்கு என்ன ஆச்சு? ஐசியூவில் இருந்தும் இப்படியா? விளாசும் நெட்டிசன்ஸ்!
சென்னை: தயாரிப்பாளர் ரவீந்திரன் லிப்ரா புரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் நட்புனா என்னனு தெரியுமா, முருங்கைக்காய் சிப்ஸ் போன்ற படங்களை தயாரித்துள்ளார். அவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியை விமர்சனம் செய்து வந்த நிலையில், தற்போது உடல் நிலை மோசமாக மருத்துவமனையில் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
ரவீந்தரும் சின்னத்திரை நடிகை மகாலட்சுமியும் 2 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் இருவரும் எளிமையான முறையில் திருப்பதி கோயிலில் சில நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்துக் கொண்டனர். இதை தன்னுடைய சமூக வலைதளப்பக்கத்தில் ரவீந்தர் சில புகைப்படங்களுடன் வெளியிட்டு இருந்தார்.

அந்த புகைப்படம் வெளியானது தான் தாமதம் இருவரையும் பிடித்துக் கொண்ட மீடியாவினர். மிகவும் குண்டாக இருக்கும் ரவீந்தரை பணத்திற்காகத்தான் மகாலட்சுமி திருமணம் செய்து கொண்டார் என்று கடுமையான விமர்சனத்தை முன்வைத்தனர். ஆனால் தங்களது திருமணத்திற்கு காதல் மட்டுமே காரணம் என்றும், இருவரும் இரண்டு வருடமாக காதலித்து வந்ததாகவும், பெற்றோரின் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்து கொண்டதாகவும் பல ஊடகங்களில் ஜோடியாக அமர்ந்து பேட்டி அளித்தனர்.
பண மோசடி புகார்: திருமணம் செய்து கொண்டு ஜாலியாக இருவரும் ஊர் சுற்றிய நிலையில் மோடி புகார் ஒன்றில் தயாரிப்பாளர் ரவீந்திரனை போலீசார் கைது செய்தனர். சென்னையைச் சேர்ந்த பாலாஜி என்பவரிடம் கழிவுகளை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் திட்டம் தொடங்க பங்குதாரராக சேர்த்துக் கொள்வதாக கூறி 16 கோடி ரூபாய் பெற்று ஏமாற்றி விட்டதாக தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்திருந்தார். அந்த புகார் உறுதியானதை அடுத்து, போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

நிபந்தனை ஜாமீன்: இதையடுத்து, ரவீந்தர் சந்திரசேகர் இரண்டு முறை ஜாமீன் மனு தாக்கல் செய்த நிலையில் அது தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், ரூ.5 கோடிக்கான உத்தரவாதத்தை ரவீந்தர் சந்திரசேகர் செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டதை அடுத்து ரவீந்திரன் தற்போது பிணையில் உள்ளார். இவர், பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியை விமர்சனம் செய்து வருகிறார்.

நுரையீரலில் இன்ஃபெக்ஷன்: இந்த நிலையில், அண்மையில் பிக்பாஸ் நிகழ்ச்சியை விமர்சனம் செய்துகொள்ள வந்தபோது மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால், மூக்கில் ஆக்ஸிஜன் டியூப் உடன் அவர் நிகழ்ச்சியை விமர்சனம் செய்தார். இதையடுத்து அவருக்கு நுரையீரலில் இன்ஃபெக்ஷன் ஏற்பட்டு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதாகவும் அதன் காரணமாக ஒரு வாரம் ஐசியூவில் சிகிச்சை பெற்ற தகவலை வெளியிட்டார் ரவீந்தர். இதைக்கேள்விப்பட்ட ரசிகர்கள் கடுப்பாகி உடல் நலன் தான் முக்கியம், இதற்கு இப்படி ரிஸ்க் எடுக்குறீங்க, இது தேவையான கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











