Don't Miss!
- News
ஓ தமிழகத்தில் 9ஆம் தேதி வரை இப்படித்தான் வானிலை இருக்குமா.. சென்னை வானிலை மையம் முக்கிய அப்டேட்
- Finance
PF கணக்கு வைத்துள்ளீர்களா..? பட்ஜெட்டில் முக்கியமான அறிவிப்பு.. வரி சலுகை..!
- Lifestyle
இந்த 5 ராசிக்காரங்க வாழ்க்கை முழுவதும் பழிவாங்க துடிப்பார்களாம்... இவங்கள எப்பவும் நம்பாதீங்க...!
- Technology
பார்வை இழந்தவர்களுக்கான புது சூப்பர் Smartwatch.! இந்தியாவில் உருவான அசத்தல் கண்டுபிடிப்பு.!
- Travel
இனி திருப்பதியில் உண்டியல் பணம் கணக்கிடும் போது கண்ணாடி சுவர்கள் வழியே நீங்களும் பார்க்கலாம்!
- Sports
பார்டர் கவாஸ்கர் கோப்பை - அதிக போட்டிகளில் வென்றது யார்? அதிக ரன்கள் அடித்தது யார்.. முழு விவரம்
- Automobiles
ஹீரோ ஸுமால இத்தன மாடலுக்கு பாதிப்பா! டிவிஎஸ் ஜுபிடர், ஹோண்டா ஆக்டிவா, டியோனு எல்லாத்துக்குமே ஆப்புதான்...
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
வாழ்க்கை மிகவும் அழகானது.. கணவருடன் புகைப்படம் வெளியிட்டு மகாலட்சுமி நெகிழ்ச்சி!
சென்னை : கடந்த ஆண்டில் நடைபெற்ற நயன்தாரா -விக்னேஷ் சிவன் திருமணத்தை காட்டிலும் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது ரவீந்தர் -மகாலட்சுமி திருமணம்.
இவர்களின் திருமணம் எளிமையாக நடைபெற்ற நிலையில் பல்வேறு சர்ச்சைகளையும் விமர்சனங்களையும் ஏற்படுத்தியது.
ஆனால் இதையெல்லாம் சிறப்பான வகையில் எதிர்கொண்டு, பலருடைய விமர்சனங்களுக்கும் பதிலளித்து வந்தது இந்த ஜோடி.
ரவீந்தர் இல்லாமல் ப்ரௌனிக்களாக வெட்டிய மகாலட்சுமி.. ஏன் மேடம் உங்களுக்கு டயட் எல்லாம் இல்லையா?

ரவீந்தர் -மகாலட்சுமி ஜோடி
கடந்த ஆண்டில் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் மற்றும் பிரபல சின்னத்திரை சீரியல் நடிகை மகாலட்சுமி இருவருக்கும் கோயிலில் எளிமையான வகையில் திருமணம் நடைபெற்றது. இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்த இந்த ஜோடி நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் செய்துக் கொண்டது. இருவருக்குமே இது இரண்டாவது திருமணம்.

சர்ச்சைகளை ஏற்படுத்திய திருமணம்
கடந்த செப்டம்பர் மாதத்தில் இவர்கள் இருவரும் திருமணம் செய்த நிலையில், இவர்களது திருமணம் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது. பணத்திற்காகத்தான் மகாலட்சுமி, ரவீந்தரை திருமணம் செய்ததாக விமர்சிக்கப்பட்டது. இந்த விமர்சனங்களை இருவரும் இணைந்தே எதிர்கொண்டனர். தொடர்ந்து இவர்களின் பேட்டிகள் மற்றும் விளக்கங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

ரொமாண்டிக் பதிவுகள்
இவர்கள் இருவரும் இத்தகைய விமர்சனங்களை எதிர்கொண்ட நிலையில், ஒருபுறம் சமூக வலைதளங்களில் தங்களது ரொமாண்டிக் புகைப்படங்களையும் தொடர்ந்து வெளியிட்டு அனைவரையும் கவர்ந்து வருகின்றனர். இவர்களை சமூக வலைதளங்களில் ஏராளமானோர் பின்தொடர்ந்து வருகின்றனர். திருமணத்திற்கு பிறகு இந்த எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

கணவர் குறித்து மகாலட்சுமி
இந்நிலையில் தற்போது மகாலட்சுமி புதிய பதிவை பகிர்ந்துள்ளார். ரவீந்தருடன் அவுட்டிங் சென்ற புகைப்படத்தை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். வாழ்க்கை மிகவும் அழகாக செல்வதாகவும், அப்படித்தான் ரவீந்தரும் என்று அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார். இந்தப் பதிவிற்கு ஏராளமானோர் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

சீரியல் தயாரிப்பில் மகாலட்சுமி
தற்போது பிரபல சேனல்களில் சீரியல்களில் கவனம் செலுத்தி வருகிறார் மகாலட்சுமி. ரவீந்தர் தற்போது படங்களின் தயாரிப்பில் பிசியாக உள்ள நிலையில், விரைவில் மகாலட்சுமி சீரியல்களில் நடிப்பதை விட்டுவிட்டு சீரியல் தயாரிப்பில் ஈடுபட உள்ளதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின. மேலும் ரவீந்தரின் தயாரிப்பு பணிகளில் இவர் உறுதுணையாக இருக்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.