நான் குழந்தையை அவரிடமிருந்து பிரிக்கவில்லை..முன்னாள் கணவர் குறித்து பேசிய மகாலட்சுமி!

சென்னை : தயாரிப்பாளர் ரவீந்திரனை திருமணம் செய்து கொண்ட மகாலட்சுமி முதன்முறையாக தனது முன்னாள் கணவர் குறித்து பேசியுள்ளார்

லிப்ரா புரொடக்ஷன்ஸ் சுட்டக்கதை, முருங்கைக்காய் சிப்ஸ் உள்ளிட்ட பல படங்களை தயாரித்தவர் ரவீந்தர் சந்திரசேகரன். இவர் சொந்தமாக யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார்.

வீஜேவாக பணியாற்றிய சின்னத்திரையில் பல சீரியல்களில் நாயகியாக நடித்து வரும் மகாலட்சுமியை கடந்த செப்டம்பர் 1ந் தேதி திருமணம் செய்து கொண்டார்.

ரவீந்திரன் மகாலட்சுமி திருமணம்

ரவீந்திரன் மகாலட்சுமி திருமணம்

சோஷியல் மீடியாவில் ஹாட் டாப்பிக்காக இருப்பது ரவீந்திரன் மகாலட்சுமி திருமணம் பற்றிய செய்திதான். இவர்களின் திருமணம் திருப்பதியில் நடைபெற்றதால், குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இந்த புது ஜோடிக்கு இணையவாசிகள் பலர் வாழ்த்து தெரிவித்தாலும், ஒரு சில நெட்டிசன்ஸ், மகாலட்சுமி, ரவீந்திரனை பணத்திற்காகத்தான் திருமணம் செய்து கொண்டார் என மோசமாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

அலப்பறை

அலப்பறை

யார் என்ன சொன்னா என்ன நான் ஜாலியா இருப்பேன் என்பது போல, இந்த ஜோடி மகாபலிபுரத்தில் உள்ள இண்டர்காண்டினென்டல் ரிசாட்டில் ஹனிமூனை கொண்டாடினர். அதோடு மட்டும் இல்லாமல், ஜூன்ஸ், டிஷர்டில் மஞ்சள் தாலி தெரியும்படி போட்டோவை போட்டு, வாழ்க்கை அழகானது அதை நீ செய்து விட்டாய் என் புருஷா என்று பதிவிட்டு இருந்தார். பதிலுக்கு ரவீந்திரனும் வாழ்க்கைக்கு காதல் தேவை, காதலுக்கு மகாலட்சுமி தேவை. ஐ லவ் யூ பொண்டாட்டி என பதிவு செய்து இருந்தார்.

தினமும் ஒரு சேனலுக்கு பேட்டி

தினமும் ஒரு சேனலுக்கு பேட்டி

இவர்களின் திருமணம் பான் இந்தியா திரைப்படம் போல மிகப்பெரிய ஹாட்டாப்பிக்காக உருவானத்தை அடுத்து, அனைத்து செய்தி சேனல்களும் நான், நீ என்று போட்டி போட்டி எடுக்கத்தொடங்கினர். இந்த ஜோடியும், என்னமோக ஹானிமூனுக்கு கிளப்பி போற மாதிரி தினமும் ஒரு சேனலுக்கு பேட்டி கொடுத்து வருகின்றனர்.

கட்டாயப்படுத்தவில்லை

கட்டாயப்படுத்தவில்லை

இந்நிலையில், ஊடகம் ஒன்றுக்கு இருவரும் பேட்டி அளித்திருந்தனர். அதில், ரவீந்திரன் உங்களை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து கொண்டாரா என கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த மகாலட்சுமி, இது கட்டாயத்திருமணம் இல்லை, தங்கள் இருவரும் காதலித்தோம், ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டுதான் திருமணம் செய்து கொண்டார். காதலித்த போது மீடியாவுக்கு தெரியாமல் பார்த்துக்கொண்டோம். வெளியில் சென்றால் தான் கிசுகிசு வரும் நாங்கள் வெளியில் சென்றாதே இல்லை என்றார்.

மனம் திறந்த மகாலட்சுமி

மனம் திறந்த மகாலட்சுமி

மேலும், என் முன்னாள் கணவர் அனிலிடமிருந்து குழந்தையை பிரிந்து கொண்டுவந்ததாக தகவல்கள் வருகின்றன. அப்படி எல்லாம் இல்லை எங்களுக்கு விவாகரத்து ஆகிவிட்டது. அப்போதிலிருந்து என் மகன் என்னுடன் தான் இருக்கிறான். அதுமட்டுமில்லாமல், அனில், ஒரு வருடத்திற்கு முன்பே திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார். அதன் பிறகுதான் இப்போது நாங்கள் திருமணம் செய்து கொண்டோம். இந்த திருமணத்தில் என் மகனிடமும் அனுமதி கேட்டேன் என மகாலட்சுமி கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X