மகாலட்சுமியின் கணவர் ரவீந்தர் மருத்துவமனையில் அனுமதி.. அப்ப தலை தீபாவளி கொண்டாட்டம்?

சென்னை : பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர் சமீபத்தில் சின்னத்திரை நடிகை மகாலட்சுமியை மணந்துக் கொண்டார்.

கடந்த செப்டம்பர் 1ம் தேதி இவர்களின் திருமணம் எளிமையாக கோயிலில் நடத்தப்பட்டது.

இந்தத் திருமணம் குறித்து தகவல் வெளியானது முதல் இவர்கள் இருவரும் ட்ரெண்டாக்கப்பட்டனர்.

பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர்

பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர். இவர் தனது லிப்ரா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் மூலம் சுட்டக்கதை, நட்புன்னா என்னன்னு தெரியுமா, முருங்கைக்காய் சிப்ஸ் உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார். தற்போது இவரது தயாரிப்பில் விடியும் வரை காத்திரு படம் உருவாகி வருகிறது.

பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர்

பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர்

பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர். இவர் தனது லிப்ரா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் மூலம் சுட்டக்கதை, நட்புன்னா என்னன்னு தெரியுமா, முருங்கைக்காய் சிப்ஸ் உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார். தற்போது இவரது தயாரிப்பில் விடியும் வரை காத்திரு படம் உருவாகி வருகிறது.

ரவீந்தர் -மகாலட்சுமி திருமணம்

ரவீந்தர் -மகாலட்சுமி திருமணம்

ரவீந்தரும் சின்னத்திரை நடிகை மகாலட்சுமியும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதி இருவரும் எளிமையான முறையில் கோயிலில் சில நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்துக் கொண்டனர். இதை தன்னுடைய சமூக வலைதளப்பக்கத்தில் ரவீந்தர் சில புகைப்படங்களுடன் வெளியிட்டிருந்தார்.

பணத்திற்காக திருமணம்?

பணத்திற்காக திருமணம்?

இதுதான் தாமதம் என்று இவர்கள் இருவரையும் பிடித்துக் கொண்டனர் மீடியாவினர். மிகவும் குண்டாக இருந்த ரவீந்தரை பணத்திற்காகத்தான் மகாலாட்சுமி திருமணம் செய்தாரா என்பது உள்ளிட்ட பல கேள்விகளை எதிர்கொண்டார் மகாலட்சுமி. ஆனால் தங்களது திருமணத்திற்கு காதல் மட்டுமே காரணம் என்று இருவரும் கூறினர்.

மருத்துவமனையில் ரவீந்தர் சிகிச்சை

மருத்துவமனையில் ரவீந்தர் சிகிச்சை

இருவருக்கும் இது இரண்டாவது திருமணம் என்றாலும் ரவீந்தர் மிகவும் தெளிவாக மற்றவர்களின் கேள்விகளை எதிர்கொண்டார். இவர்கள் இருவருக்கும் நாளைய தினம் தலை தீபாவளி. இந்நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக தற்போது ரவீந்தர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

தலை தீபாவளி கொண்டாட்டம்?

தலை தீபாவளி கொண்டாட்டம்?

ரவீந்தருக்கு என்ன ஆயிற்று என்பது குறித்து அவர்கள் தகவல்கள் எதுவும் தெரிவிக்கவில்லை. இதனிடையே, மிகவும் சிறப்பான ஜோடியாக கருதப்படும் இவர்கள் நாளைய தினம் தங்களது தலை தீபாவளியை கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஃபேட்மேன் என்று அழைக்கப்படும் ரவீந்தர் தொடர்ந்து இரு தினங்களுக்கு முன்புகூட பிக்பாஸ் குறித்த கருத்துக்களை பேசி வந்த நிலையில் தற்போது அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X