போதை வழக்கில் கைதான சீரியல் நடிகை ..விசாரணை வளையத்தில் நடிகர்கள்.. நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

சென்னை: சுந்தரி சீரியல் நடிகை மீனா போதை பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், அவரது போனை போலீசார் தீவிரமாக அலசி ஆராய்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து சென்னை எழும்பூர் நீதிமன்றம் நீதிமன்ற காவல் விதித்து உத்தரவிட்டது.

தமிழ் நாட்டை போதை இல்லா நாடாக உருவாக்க அனைத்து கல்வி நிலையங்களிலும் போதைப் பொருட்களை எதிர்க்கும் வகையில் தன்னார்வ குழுக்களை உருவாக்கி மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். தமிழ்நாடு காவல்துறை மற்றும் போதைப்பொருள் நுண்ணறிவு தடுப்புப் பிரிவு போதைப் பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

sundari serial meena puzhal jail

போதைப் பொருள் சப்ளை: போதை பொருள் தடுப்பு பிரிவுக்கு வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் சென்னை ராயப்பேட்டை யில் உள்ள ஒரு தனியார் வணிக வளாகத்தில் போலீசார் மீனா என்பவரை சோதனை செய்த போது அவரிடம் இருந்து 5 கிராம் மெத்தம்பேட்டமைன் போதைப் பொருள் இருந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் மருத்துவமனை பரிசோதனைக்காக அழைத்து சென்றனர். அவரிடம் நடத்திய விசாரணையில், அவரின் பெயர் மீனா என்பதும், அவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியலான சுந்தரி நடித்து வருவதாகவும். அதுமட்டுமில்லாமல் நடிகர் ஆர்யா நடித்த டெடி படத்திலும் நடித்திருப்பதாகவும் கூறினார். இதைத்தொடர்ந்து போலீசார் நடிகை மீனாவின் செல் போனை ஆய்வு செய்ததில்,போதைப் பொருளுக்காக வாட்ஸ் அப் குரூப் மூலம் சக நடிகர்களுக்கு போதை பொருட்களை விற்று வந்திருப்பது தெரியவந்துள்ளது.

விசாரணை வளையத்தில் நடிகர்கள்: ஒரு கிராம் மெத்தம்பேட்டமைனை 2 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கி அதை 3 ஆயிரத்திற்கு விற்பனை செய்து இருப்பது தெரியவந்துள்ளது. இந்த மெத்தம்பேட்டமைனை இவர் யாரிடமிருந்து வாங்குகிறார், யாருக்கு விற்பனை செய்கிறார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இவரிடம் தொடர்பில் இருந்த நடிகர்கள் யார், அவர்களுக்கும் இந்த போதை பொருள் பயன்பாட்டில் எதாவது தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையடுத்து, போலீசார் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதை அடுத்து நீதிபதி நடிகை மீனாவுக்கு 15 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து உத்தரவிட்டார். இதையடுத்து நடிகை மீனா புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அவரிடம் போதைப்பொருள்கள் நெட்வொர்க் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தப்பட உள்ளது. இது, சின்னத்திரை வட்டாரத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X