பீச்சில் காதலருடன் செம ரொமான்ஸ்.. முதன் முதலாக எடுத்த போட்டோக்களை ஷேர் செய்த சீரியல் நடிகை!
சென்னை: பீச்சில் காதலருடன் ஜோடியாக எடுத்த போட்டோக்களை தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் நடிகை நக்ஷத்ரா நாகேஷ்.
தந்தி டிவி, சன் டிவி, விஜய் டிவி என பல தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக பணியாற்றியவர் நக்ஷத்ரா நாகேஷ்.
பின்னர் சீரியல்களில் நடிக்கத் தொடங்கினார் நக்ஷத்ரா. குஷ்புவின் லட்சுமி ஸ்டோர்ஸ், நாயகி உள்ளிட்ட சில சீரியல்களில் லீடிங் ரோலில் நடித்துள்ளார்.

திருமண நிச்சயதார்த்தம்
மேலும் பல படங்களிலும் சிறு சிறு கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார் நக்ஷத்ரா. இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை தனது காதலரான ராகாவுடன் நக்ஷத்ராவுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

லைஃப் பார்ட்னர்
அதற்கு முன்பாகவே காதலரின் மடியில் அமர்ந்திருக்கும் போட்டோக்களை வெளியிட்டு, இவர் தான் தன்னுடைய லைஃப் பார்ட்னர் என்று அறிமுகப்படுத்தினார். இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மேலும் சில போட்டோக்களை ஷேர் செய்துள்ளார்.

முந்தாணையை இழுத்து
இந்த போட்டோக்கள் பீச்சில் எடுக்கப்பட்டவையாக உள்ளது. அதில் வெளிர் நீல நிற புடவையில் உள்ள நக்ஷத்ராவை அவரது காதலரான ராகவ் கட்டியணைத்து தூக்கி வைத்துள்ளார். இதேபோல் மற்றொரு போட்டோவில் நக்ஷத்ராவின் முந்தாணையை இழுத்து பிடித்துள்ளார் ராகவ்.

முதன் முதலாக ஜோடியாக
இந்த போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ள நக்ஷத்ரா, இனிமேலும் இவற்றை போஸ்ட் செய்ய காத்திருக்க முடியாது தானும் ராகவும் முதன் முதலில் ஜோடியாக சேர்ந்த எடுத்த போட்டோக்கள் இவை என பதிவிட்டுள்ளார்.

சுத்தி போட சொல்லுங்க
இதேபோல்இருவரும் கட்டியணைத்த நெருக்கமாக இருக்கும் மேலும் சில போட்டோக்களையும் ஷேர் செய்துள்ளார் நக்ஷத்ரா. இந்த போட்டோக்களை பார்த்த ரசிகர்கள், கண்ணு பட்டுட போகுது சுத்தி போட சொல்லுங்க என்று அக்கறையுடன் பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











