குண்டா இருக்கேன்னு பாடி ஷேமிங் பண்றாங்க.. 8000 பேர பிளாக் பண்ணிட்டேன்.. சீரியல் நடிகை அதிரடி!

சென்னை: தன்னை பாடி ஷேமிங் செய்த 8000 பேரை பிளாக் செய்து விட்டதாக பாக்கியலட்சுமி சீரியல் நடிகை தெரிவித்துள்ளார்.

சின்னத்திரை நடிகர் நடிகைகளும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ளனர். அவர்களுக்கும் வெள்ளித்திரை நட்சத்திரங்களுக்கு இருப்பது போல் பெரிய ஃபேன் பேஸ் உள்ளது.

சினிமா நட்சத்திரங்களை எந்த அளவுக்கு கொண்டாடுகிறார்களோ அந்தளவுக்கு விமர்சனமும் செய்து வருகிறார்கள். அதிலும் பிரபலங்களை பாடி ஷேமிங் செய்யும் விஷயமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

நெகட்டிவ் கமெண்ட் செய்பவர்கள்

நெகட்டிவ் கமெண்ட் செய்பவர்கள்

அந்த வகையில் தன்னை பாடி ஷேமிங் செய்த 8000 பேரை சின்னத்திரை நடிகை ஒவர் பிளாக் செய்துள்ளார். மேலும் தன்னை பற்றி நெகட்டிவ் கமெண்ட் செய்பவர்களையும் ஃபாலோயர்ஸ் லிஸ்ட்டில் இருந்தே தூக்கியிருக்கிறார் அந்த பிரபல சீரியல் நடிகை.

பாக்கியலட்சுமி சீரியல் நடிகை

பாக்கியலட்சுமி சீரியல் நடிகை

அதாவது, நடிகை ராதிகா சரத்குமாரின் வாணி ராணி, சித்தி 2, பாக்கியலட்சுமி தொடர் என பிரபலமான சீரியல்களில் நடித்து, ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானவர் நடிகை நேஹா மேனன். இந்நிலையில் தான் எவ்வாறு உருவ கேலியை கடந்து வந்தேன் என்பதை சமூக வலைதள ஸ்டோரியில் தெரிவித்துள்ளார்.

இன்ஸ்டாவுக்கு வந்த பிறகு உருவ கேலி

இன்ஸ்டாவுக்கு வந்த பிறகு உருவ கேலி

அதாவது, தான் இன்ஸ்டாகிராம் பயன்படுத்த தொடங்கிய பிறகுதான் உருவ கேலி என்கிற விஷயம் தனக்குத் தெரிய வந்ததாக தெரிவித்துள்ளார் நேகா மேனன். ஒவ்வொரு கமென்ட்டை பார்க்கும்போதும் ஆரம்பத்தில் மிகவும் வேதனை அடைந்ததாக கூறியுள்ள நேகா மேனன். தன்னை பாடி ஷேமிங் செய்வது குறித்து தனது அம்மாவிடம் தான் தன் வேதனைகளைக் கொட்டி தீர்ப்பதாகவும் கூறியுள்ளார்.

என்னென்ன பிரச்சனைகள் என்று தெரியாது

என்னென்ன பிரச்சனைகள் என்று தெரியாது

மேலும் தான் வேதனைப்படும் போது தனக்கு மிகவும் உறுதுணையாக இருந்தது தன் அம்மா தான் என்றும், நம்மைப் பற்றி கமெண்ட் செய்பவர்களுக்கு நாம் எதனால் எடை போட்டோம், அதனால் என்னென்ன பிரச்சனைகளைச் சந்தித்து வருகிறோம் என்பதெல்லாம் தெரியாது என்றும் கூறியுள்ளார் நடிகை நேகா மேனன்.

மெஸேஜ்களைளை அழித்தால் தான் நிம்மதி

மெஸேஜ்களைளை அழித்தால் தான் நிம்மதி

மேலும் ஏதாவது நெகட்டிவ் கமெண்டுகளை பார்த்தால், அவர்களுடைய கணக்கை பிளாக் செய்துவிடுவேன் என்றும் அதுபோல கிட்டத்தட்ட 8000 கணக்குகளை பிளாக் செய்திருக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார். மெசேஜுகளை பார்த்து விட்டு அத்தனையையும் அழித்துவிடுவேன். தனக்கு வரும் நெகட்டிவ் மெஸேஜ்களைளை அழித்தால் தான் தனக்கு நிம்மதியாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

மன அழுத்தத்திற்கு ஆளாகி விட்டேன்

மன அழுத்தத்திற்கு ஆளாகி விட்டேன்

அந்த மெஸேஜ்களையெல்லாம் அழிக்கும் அளவிற்கு மனஅழுத்தத்திற்கு ஆளாகி விட்டதாகவும் அதில் இருந்து மீண்டு வர ஒரு வருடம் ஆனது என்றும் கூறியுள்ளார் நடிகை நேகா மேனன் மேலும் நம் மேல் முதலில் நாம் அன்பு காட்டவேண்டும் என்பதைப் புரிந்துகொண்டேன் என்றும் நான்கு நல்ல விதமான கமென்ட் வந்தாலும் அதனை பாசிட்டிவ்வாக ஏற்றுக்கொள்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

இப்போ பயப்படுறது இல்ல

இப்போ பயப்படுறது இல்ல

மேலும் தனக்காக நேரம் செலவழிக்க கற்றுக்கொண்டேன் என்றும் முன்பெல்லாம் தன்னைத் தப்பாகப் பேசுபவர்களைக் கண்டு பயப்படுவேன். ஆனால், இப்போது அப்படி அல்ல. மனக்குழப்பத்தை தகர்த்தியுள்ளேன் என்றும் தெரிவித்துள்ளார் நேகா மேனன். அதோடு தன்னை போன்று குண்டாகவும் உயரம் குறைவாகவும் இருப்பவர்கள் எப்படி உடை உடுத்த வேண்டும் என்பது குறித்தும் டிப்ஸ் கொடுத்துள்ளார் நடிகை நேகா மேனன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X