கட்டுப்பாட்டை இழந்த கார்… விபத்தில் சிக்கிய சீரியல் நடிகை.. சம்பவ இடத்திலேயே பலி!

சென்னை: பிரபல சீரியல் நடிகை பவித்ரா ஜெயராம் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அவருக்கு வயது 35.ஆந்திர மாநிலம் மெகபூபா நகர் அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து பேருந்தில் மோதியதில், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இவரின் திடீர் மறைவு திரைத்துறையினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

தொலைக்காட்சியில் பல சீரியல்களில் நடித்து தனக்கென தனி இடத்தைப் பிடித்தவர் நடிகை பவித்ரா ஜெயராம். இவர் கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் உள்ள ஹனகெரேவுக்கு சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்தபோது, ஷெரிப்பள்ளி கிராம் அருகே கார் வந்து கொண்டிருந்த போது, கட்டுப்பாட்டை இழந்த கார் டிவைடரில் மோதியது. அப்போது, ​​ஹைதராபாத்தில் இருந்து வனபர்த்தி நோக்கி வந்த பேருந்து, காரின் வலது பக்கம் மோதி விபத்துக்குள்ளானது. இதில் கார் நொறுங்கியது.

Serial Actress Pavitra Jayaram passed away in a road accident

சீரியல் நடிகை மரணம்: இதில் பவித்ரா ஜெயராமின் உறவினர் அபேக்ஷா, டிரைவர் ஸ்ரீகாந்த், சக நடிகர் சந்திரகாந்த் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் பலத்த காயமடைந்த பவித்ரா ஜெயராம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது உடலை மீட்டு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

Serial Actress Pavitra Jayaram passed away in a road accident

பிரபலங்கள் இரங்கல்: பிரபல சீரியல் நடிகை விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளது அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு செய்து, விபத்திற்கான காரணத்தை விசாரித்து வருகின்றனர். காயமடைந்தவர்கள் மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதால், அவர்கள் ஓரளவு குணமடைந்தபின் விசாரணை மேற்கொள்ள உள்ளனர். நடிகை பவித்ராவின் மறைவுக்கு நடிகர் சமீப் ஆச்சார்யா இரங்கல் தெரிவித்துள்ளார், அவர் சமூக ஊடகங்களில் தனது வருத்தத்தை வெளிப்படுத்தி உள்ளார். அதில், நீங்கள் இப்போது இல்லை என்ற செய்தியை என்னால் நம்ப முடியவில்லை. இது நம்பமுடியாதது. என் முதல் திரை அம்மா, நீங்கள் எப்போதும் சிறப்பு வாய்ந்தவராக இருப்பீர்கள் என பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X