சன் டிவியில் அடுத்த சீரியலுக்கு தயாராகும் சித்தி 2 நாயகி ப்ரீத்தி ஷர்மா.. விரைவில் துவக்கம்!
சென்னை : சன் டிவியின் சித்தி 2 சீரியல் மூலம் ஏராளமான ரசிகர்களை கட்டிப் போட்டவர் ப்ரீத்தி ஷர்மா.
தன்னுடைய வெண்பா கேரக்டர் மூலம் சித்தியின் வளர்ப்பு மகளாக நடித்து ஏராளமான ரசிகர்களை இந்த சீரியல் மூலம் பெற்றார் ப்ரீத்தி ஷர்மா.
இந்நிலையில் சன் டிவியில் விரைவில் துவங்கவுள்ள புதிய சீரியலில் ப்ரீத்தி ஷர்மா தற்போது கமிட்டாகியுள்ளார்.

சீரியல் நடிகை ப்ரீத்தி ஷர்மா
சன் டிவியின் சித்தி சீரியல் மிகவும் பிரபலமானது. ராதிகாவின் நடிப்பு மற்றும் தயாரிப்பில் உருவான அந்த சீரியல் சிறப்பான வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, அதன் இரண்டாவது பாகமும் வெளியானது. அந்தத் தொடரிலும் சாரதா கேரக்டரிலேயே ராதிகா நடிக்க அவரது வளர்ப்பு மகளாக வெண்பா என்ற கேரக்டரில் நடித்திருந்தார் ப்ரீத்தி ஷர்மா.

சித்தி 2 சீரியல்
கலர்ஸ் தமிழின் திருமணம் என்ற சீரியல் மூலம் சீரியல் உலகில் என்ட்ரி கொடுத்த அவருக்கு சித்தி 2 சிறப்பான வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. சாரதாவையே தன்னுடைய உலகம் என்று எண்ணி வாழ்ந்துக் கொண்டிருந்த அவருக்கு, அவர் தன்னுடைய வளர்ப்புத் தாய் என்பது தெரியவந்தவுடன் அதற்கு அவர் கொடுத்த பர்பார்மென்ஸ் ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது.

மீண்டும் ரீ-என்ட்ரி
தொடர்ந்து அந்த சீரியல் விரைவிலேயே முடிவுக்கு வந்தது. இதையடுத்து தமிழில் வாய்ப்புகள் இல்லாததால் தெலுங்கு சீரியலில் நடிக்கத் துவங்கினார் ப்ரீத்தி ஷர்மா. இதனால் தமிழில் அவரது ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். இந்நிலையில் அவர் மீண்டும் தமிழ் சீரியலில் ரீ-என்ட்ரி கொடுக்கவுள்ளார்.

மலர் தொடர்
சன் டிவியில் விரைவில் ஒளிபரப்பாகவுள்ள மலர் என்ற தொடரில்தான் ப்ரீத்தி ஷர்மா நடிக்கவுள்ளார். இதுகுறித்த புதிய ப்ரமோ வெளியாகியுள்ளது. மலர் என்ற சீரியலில்தான் ப்ரீத்தி ஷர்மா நடிக்கவுள்ளார். இதன் ப்ரமோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ப்ரீத்தி வெளியிட்டுள்ளார். புதிய ஆரம்பம் என்றும் அவர் கேப்ஷனில் தெரிவித்துள்ளார்.

புதிய ப்ரமோ
இந்த ப்ரமோவில் தன்னுடைய அக்காவிற்காக அவருக்கு சிறப்பான வாழ்க்கை அமைவதற்காக கோயிலில் சிறப்பான பிரார்த்தனைகளை செய்கிறார் மலர். மேலும் மண் சோறும் சாப்பிடுகிறார். இந்த பிரார்த்தனைகளை அவர் தனக்காக செய்கிறார் என்று நினைக்கும் வேளையில், அவர் தன்னுடைய அக்காவிற்காக செய்வதாக அந்த ப்ரமோவில் காணப்படுகிறது.

விரைவில் ஒளிபரப்பு
சித்தி 2 சீரியலில் தன்னுடைய துறுதுறு நடிப்பால் அனைவரையும் கவர்ந்த ப்ரீத்தி ஷர்மா, இந்தத் தொடரிலும் சிறப்பான கவனத்தை பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதை உறுதி செய்யும் வகையில் இந்தப் ப்ரமோ காணப்படுகிறது. எந்த ஸ்லாட்டில் இந்த தொடர் ஒளிபரப்பாகும் என்பது விரைவில் தெரியவரும்.


Click it and Unblock the Notifications