Preethi Sanjeev: நீயெல்லாம் ஒரு பிராமினா? மோசமான கமெண்ட் வருது.. மனம் நொந்து போன ப்ரீத்தி சஞ்சீவ்!
சென்னை: சின்னத்திரை பிரபலமான ஜோடிகள் நிஜ வாழ்க்கையில் இணைவது வழக்கமான ஒன்று தான். அப்படி ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ஒரு ஜோடி தான் சஞ்சீவ் மற்றும் ப்ரீத்தி ஜோடி. சில ஆண்டுகள் நடிக்காமல் இருந்த ப்ரீத்தி இப்போது பிஸியாக சீரியல்களில் நடித்து வருகிறார். அண்மையில் இவர் அளித்த பேட்டியில், சோசியல் மீடியாவில் கண்டபடி கமெண்ட் அடிக்கிறார்கள். அதைப்பார்க்கும் போது மனதிற்கு கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது என பதிவிட்டுள்ளார்
சின்னத்திரை நடிகையாக இல்லத்தரசிகளுக்கு ப்ரீத்தி சஞ்சீவ் ரொம்பவே நெருக்கமானவர். 'கண்ணான கண்ணே', 'பொம்மலாட்டம்' என பல சீரியல்களில் நடித்தவர் இப்போது சன் டிவியில் 'ஆனந்த ராகம்' சீரியலில் பிஸி. அன்பான அம்மா, பொறுப்பான மாமியார் என நடித்துக் கொண்டிருந்தவரிடம் பேசினோம். அண்மையில் யூடியூப் சேனலுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், நடிப்புத் துறைக்குள் நுழைந்தாலும் படிப்பு முக்கியம் என்பதில் நடிப்புத் துறையில் எப்படி ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்று அம்மா எனக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறார். அதனால்தான் என்னால் நன்றாக படிப்பும் முடித்து, இப்போது நடிப்பு, குடும்பம் என சரியாக பேலன்ஸ் செய்ய முடிகிறது.

ப்ரீத்தி சஞ்சீவ்: சினிமாவை சார்ந்த குடும்பம் என்பதால், ஒரே துறை சேர்ந்தவரை திருமணம் செய்தால் நல்லபுரிதல் இருக்கும் என்று நினைத்தேன். இதனால், வீட்டில் பார்த்த மாப்பிளை எல்லாம் வேண்டாம் வேண்டாம் எனச் சொல்லிக் கொண்டிருந்தேன். அப்போது தான் சஞ்சீவுடன் நல்ல நட்பு உருவாகி அது காதலானது. அவருடைய முதல் ரசிகை நான்தான். கணவன் - மனைவி எல்லோருக்குள்ளும் இருப்பதுபோல எங்களுக்கும் சண்டை வருவது வழக்கம்தான் என்றார்.
நீயெல்லாம் பிராமினா: இதைத்தொடர்ந்து பேசிய ப்ரீத்தி, சோசியல் மீடியாவில் முகம் தெரியாது என்பதற்கான பலரும் பலவிதமான கருத்துக்களைபகிர்ந்து வருகின்றனர். அதில் என்னை கஷ்டப்படுத்திய விஷயம், நீயெல்லாம் பிராமினா.. பிராமினாக இருந்து கொண்டு மாமிசத்தை தொடலாமா, உனக்கு அசிங்கமா இல்லையா என்று கேட்பார்கள். நான் எதை பின்பற்றுகிறேன் என்பது எனக்குத் தெரியும். இது எதுவுமே தெரியாமல் கமெண்டில் சிலர் வாய்க்கு வந்ததை பேசுகிறார்கள். ஒரு நெகட்டிவ் கமெண்டா இருக்கட்டும், பாராட்டா இருக்கட்டும், என் முகத்தை கண்ணாடியில் பார்த்துவிட்டு, இதற்கு தகுதியானவளா என்பதை நான் முதலில் யோசித்துக்கொள்வேன் என்றார்.


Click it and Unblock the Notifications











