கண்ணகி ஆங்கிலத்தில் பேசலாமா? சுஹாசினியை மறைமுகமாக தாக்கிய.. எதிர்நீச்சல் சீரியல் நடிகை!
சென்னை: கோவாவில் நடைபெற்ற இந்திய சர்வதேச திரைப்பட விழாவில், சிலப்பதிகாரம் குறித்து நடந்த நாடக நிகழ்ச்சியில், கண்ணகி கதாபாத்திரத்தில் நடிகை சுஹாசினி நடித்திருந்தார். இது இணையத்தில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வரும் நிலையில், எதிர்நீச்சல் சீரியல் நடிகை சுஹாசினியை முறைமுகமாக தாக்கி இணையத்தில் பதிவிட்டுள்ளார்.
நடிகை, தயாரிப்பாளர், இயக்குனர், தொகுப்பாளர் என பன்முகத் தன்மை கொண்ட நடிகை சுஹாசினி. கோவாவில் நடைபெற்ற இந்திய சர்வதேச திரைப்பட விழாவில், கண்ணகி கதாபாத்திரத்தில் நடித்த போது, கையில் வாட்ச் அணிந்து நடித்திருந்தார். அதோடு மட்டுமில்லாமல், கண்ணகி நாடகத்தில் வரும் அந்த உணர்ச்சிபூர்வமான வசனத்தை சுஹாசினி எப்படி பேசப்போகிறார் என அனைவரும் ஆர்வத்துடன் காத்திருந்த நிலையில், சுஹாசினி அந்த வசனத்தை ஆங்கிலத்தில் பேசி அனைவரையும் ஒரு நிமிடம் அதிர்ச்சி அடைய செய்துவிட்டார்.

சுஹாசினி: கண்ணகி நாடகத்தில் கண்ணகி பேசும் வசனம் மிகவும் உணர்ச்சி பூர்வமானதாக இருக்கும். அதை ஆங்கிலத்தில் பேசி அந்த உணர்ச்சை சுஹாசினி கொன்றுவிட்டார் என அனைவரும் அவரை ட்ரோல் செய்து வந்தனர். ஆனால், சிலர், அனைவருக்கும் புரிய வேண்டும் என்பதற்காகத்தான் சுஹாசினி துல்லியமான அந்த வசனத்தை ஆங்கிலத்தில் பேசினார். அதை நாம் அனைவரும் பாராட்ட வேண்டும் என்றும் சிலர் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். எது எப்படியாக இருந்தாலும், அந்த நாடகத்தில் கண்ணாகி தமிழில் தான் பேசி இருக்க வேண்டும் என பலர் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
சக்தி வாய்ந்த வசனம்: இந்நிலையில், எதிர்நீச்சல் சீரியலில் ரேணுகா கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை பிரியதர்ஷினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கலைஞர் தொலைக்காட்சியில் கண்ணகி கதாபாத்திரத்தில் நடித்ததை பதிவிட்டுள்ளார். மேலும், அதில், பூம்புகாரில் வந்த கண்ணகி காட்சியை நிகழ்த்தியதற்கு நன்றி, நான் இன்னும் உற்சாகத்தில் இருக்கிறேன்! கலைஞர் கருணாநிதியின் சக்திவாய்ந்த வார்த்தைகள் இன்னும் ஆழமாக எதிரொலிக்கின்றன. அவரது எழுத்து உண்மையிலேயே புகழ்பெற்றது. அவர் வார்த்தைகளை உணர்ச்சிகளில் பின்னிய விதம் ஒப்பிடமுடியாதது. இந்த நாடகக் காட்சியை நிகழ்த்தியதை ஒரு மறக்க முடியாத அனுபவமாகும் என பதிவிட்டு , சுஹாசினி ஆங்கிலத்தில் வசனத்தை பேசியதை மறைமுகமாக தாக்கிய உள்ளார்.


Click it and Unblock the Notifications