ரகசிய திருமணம்னு சொல்லாதீங்க.. கொன்னுடுவேன்.. பிரியங்கா காட்டம்!
சென்னை : ரோஜா சீரியல் மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர் பிரியங்கா நல்காரி. இவர் சில படங்களிலும் நடித்துள்ளார்.
இவர் ராகுல் என்பவரை 5 ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்து சமீபத்தில் திருமணம் செய்துள்ளார். இவர்களது திருமணம் கடந்த சில தினங்களுக்கு முன்பு கோயிலில் எளிமையாக நடைபெற்றது.
இந்த திருமணம் ரகசியமாக நடைபெற்றதாக அனைவரும் கமெண்ட் செய்த நிலையில், அதை மறுத்துள்ளார் பிரியங்கா நல்காரி.\

நடிகை பிரியங்கா நல்காரி
நடிகை பிரியங்கா நல்காரி குழந்தை நட்சத்திரமாக தெலுங்கு படவுலகில் அறிமுகமானவர். தொடர்ந்து தமிழிலும் தீயாய் வேலை செய்யணும் குமாரு படத்தில் என்ட்ரி கொடுத்திருந்தார். ராகவா லாரன்ஸ் இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியான காஞ்சனா 3 படத்திலும் சிறிய வேடத்தில் நடித்திருந்தார். ஆனால் சினிமாவில் அவருக்கு போதிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஆனால் சின்னத்திரை அவரை வாரி அணைத்துக் கொண்டது.

ரோஜா தொடர்
சன் டிவியில் 5 ஆண்டுகளாக ஒளிபரப்பான ரோஜா தொடரில் லீட் கேரக்டரில் நடித்து ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ளார் பிரியங்கா. தான் எதிர்பார்த்த புகழையும் பெயரையும் சினிமா தராத நிலையில், சின்னத்திரையில் அதை ஏராளமாக பெற்றுள்ளார். அந்த சீரியலில் அர்ஜுன் சார் என்று சிபு சூர்யனை, பிரியங்கா கூப்பிடும் அழகிற்காகவே அந்த சீரியலை ஏராளமானவர்கள் பார்த்து ரசித்தனர். தொடர்ந்து சில நேரம் ரசிகர்களின் பொறுமையை சோதித்தபோதிலும், டிஆர்பியில் எந்த சோதனையும் இல்லாமல் முன்னணியில் தொடர்ந்தது ரோஜா சீரியல்.

சீதாராமன் தொடரில் பிரியங்கா
தற்போது அந்த சீரியல் நிறைவடைந்த நிலையில், அடுத்ததாக சீதாராமன் சீரியலில் நடித்து வருகிறார் பிரியங்கா. இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு ராகுல் என்பவருக்கும் பிரியங்காவிற்கும் இடையில் மலேசியாவில் உள்ள முருகன் கோயிலில் எளிமையாக திருமணம் நடந்து முடிந்துள்ளது. இதையடுத்து பிரியங்கா யாருக்கும் சொல்லாமல் ரகசியமாக திருமணம் செய்துவிட்டதாக விமர்சனங்கள் எழுந்தன.

ரகசிய திருமணம் இல்லை
இந்நிலையில் திருமணத்திற்கு பிறகு லைவில் வந்த பிரியங்கா, அந்த தகவலை மறுத்துள்ளார். தன்னுடைய திருமணம் குடும்பத்தினர் ஒப்புதலோடுதான் நடந்தது என்றும் ஆனால் ராகுல் வீட்டில் இந்த திருமணத்தை ஏற்காத நிலையில், அவர்கள் ஏற்றவுடன் அனைவரும் இணைந்து இந்த திருமணத்தை கொண்டாடுவோம் என்றும் அவர் கூறியுள்ளார். இந்தத் திருமணத்தை ரகசிய திருமணம் என்று சில மீடியாக்கள் கூறுவதாகவும் அதை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ள பிரியங்கா, தன்னுடைய திருமணத்தை ரகசிய திருமணம் என்று கூறினால் கொன்றுவிடுவேன் என்று தன்னுடைய க்யூட் குரலில் தெரிவித்துள்ளார்.

பிரியங்கா -ராகுல் பிரேக்அப்
ராகுலும் தெலுங்கு படங்களிலும் டிவியிலும் நடித்து வந்தவர் என்ற நிலையில், கடந்த 2018ம் ஆண்டிலேயே இவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதையடுத்து இருவரும் தங்களது கமிட்மெண்ட்களில் பிசியாக, திருமணத்தை எப்போது நடத்துவது என்பதில் இருவருக்கும் கருத்து மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து, சினி பீல்டே வேண்டாம் என்று கோபித்துக் கொண்டு மலேசியா சென்ற ராகுல், அங்கு ஒரு நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்துள்ளார்.

திருமணத்திற்கு பிறகு பிரிவு
இதையடுத்து கோபத்தில் பிரியங்காவின் போனையும் எடுக்காமல் இருந்துள்ளார். இந்நிலையில் அவர்களின் பிரேக் அப் எல்லாம் சரியாகி தற்போது இருவரின் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. தற்போது ராகுல் மலேசியாவில் இருக்க, பிரியங்கா சீதாராமன் சீரியலில் நடிப்பதற்காக இந்தியா வந்துள்ளார். திருமணமானவுடனேயே தங்களின் கமிட்மெண்ட்டிற்காக பிரிந்தது குறித்தும் பிரியங்கா கவலை தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











