பிக் பாஸ் சீசன் 6 : டிப்பம் டப்பம் பாடலுடன் என்ட்ரியான ரச்சிதா..களைகட்டும் நிகழ்ச்சி!
சென்னை : பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் 9வது போட்டியாளராக சீரியல் நடிகை ரச்சிதா மகாலட்சுமி என்ட்ரி கொடுத்தார்.
விஜய் டிவியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் வரும் அக்டோபர் 9 ஆம் தேதியான இன்று 6 மணி முதல் கோலாகலமாக தொடங்கி உள்ளது.
இதுவரை ஒளிபரப்பான 5 சீசன்களும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் கடந்தாண்டு ஓடிடி தளத்திற்கென பிரத்யேகமாக பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி ஒளிபரப்பானது.

பிக்பாஸ் சீசன் 6
பிக்பாஸ் என்றாலே நினைவுக்கு வருவது பிரமாண்ட வீடு தான். இந்த முறையில் பிக் பாஸ் வீடு மிகவும் பிரம்மாண்டமாக இருந்தது. நிகழ்ச்சி தொடங்கியதும் கமல் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்து, வீட்டை ரசிகர்களுக்கு சுற்றிகாட்டினார். கடந்த இரண்டு சீசன்களில் வீட்டில் நீச்சல் குளம் இல்லாத நிலையில், இந்த முறை நீச்சல் குளம் வைக்கப்பட்டுள்ளது.

ஜிபி முத்து
நிகழ்ச்சியில் முதல் போட்டியாளராக யூடியூப் பிரபலர் ஜிபி முத்து வந்தார். வந்ததும் வராததுமாக உங்க வட்டார மொழியில் பேசக்கூடாது என்று ஒரு சிறிய அட்வைஸ் கொடுத்தார் கமல். இதையடுத்து, சீரியல் நடிகர் அஸிம்,நடிகை அயிஷா,நடனக்கலைஞர் ராபர்ட், மாடல் ஷரின் ஆகியோர் தற்போது வரை என்ட்ரி கொடுத்துள்ளனர்.

ரச்சிதா மகாலட்சுமி
இதையடுத்து,பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் 9வது போட்டியாளராக சீரியல் நடிகை ரச்சிதா மகாலட்சுமி டிப்பம் டப்பம் பாடலுடன் கலக்கலாக ஆட்டம் போட்டு வந்தார். கர்நாடகாவில் பிறந்த எனக்கு இவ்வளவு பெரிய வாய்ப்பு கிடைத்ததை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன். நிச்சயம் மக்கள் மனதில் இடம் பிடிப்பேன் என்றார்.

இரண்டாவது திருமணம்
சீரியல் நடிகர் தினேசை 2015ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்ட இவர், சில கருத்து வேறுபாடு காரணமாக, தனித்தனி வீட்டில் வாழ்த்து வருகின்றனர். ரச்சிதாவின் விவகாரம் சர்ச்சையான நிலையில், இவர் இயக்குனர் ஒருவரை காதலித்து வருவதாகவும், விரைவில் அவரை இரண்டாவது திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் கிசுகிசுக்கப்பட்டது. பிக் பாஸ் டைட்டிலை பெற அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்


Click it and Unblock the Notifications











