Rachitha: ஒரே ஒரு பாடல்.. மொத்த மானமும் போச்சு..ரச்சிதாவை விளாசும் நெட்டிசன்ஸ்!

சென்னை: சோசியல் மீடியாவில் எந்த பக்கம் பார்த்தாலும் ரச்சிதா மகாலட்சுமி பற்றியும், அவர் நடித்த ஃபயர் படத்தின் பாடல் பற்றியும் தான் பேசுபொருளாக இருக்கிறது. இந்த படத்திலிருந்து ஒரு போட்டோ வெளியான போதே, அவரின் ரசிகர்கள், ரச்சித்தாவா இப்படி என்று வாயை பிளந்த நிலையில், தற்போது அந்த படத்தில் இருந்து பாடல் வீடியோ ஒன்று வெளியாகி ரச்சித்தாவின் மொத்த இமேஜையும் டேமேஜ் ஆக்கி உள்ளது.

சீரியலில் அழகு பதுமையாக தழைய தழைய புடவை கட்டிக்கொண்டு அறிமுகமானவர் தான் ரச்சிதா மகாலட்சுமி. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்ற சரவணன் மீனாட்சி தொடரில் தங்க மீனாட்சி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த கதாபாத்திரம் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்ததை அடுத்து, பல சீரியல்களில் நடித்து பெயர் எடுத்தார். இவர் சீரியலில் நடித்து கொண்டு இருந்த போதே, பிரிவோம் சந்திப்போம் சீரியலில் தன்னுடன் நடித்த தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், இந்த திருமண வாழ்க்கை சில ஆண்டுகள் கூட நீடிக்கவில்லை.

rachitha mahalakshmi fire song

ரச்சித்தா மகாலட்சுமி: இதைத்தொடர்ந்து, பிக்பாஸ் நிகழ்ச்சியில் என்ட்ரி ஆனார், அந்த வீட்டில் எப்போதும் புடவையில் வலம் வந்த ரச்சித்தா மகாலட்சுமிக்கு என தனி ரசிகர்கள் உருவானார்கள். வீட்டிற்குள் யாரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும், அடுத்தவர் மீது எப்படி அன்பு காட்டுவது என ரச்சித்தா நடந்து கொண்ட விதம் அனைவருக்கும் பிடித்தது. அந்த வீட்டிற்குள் ராபர்ட் மாஸ்டர், தன்பின்னால் சுற்றுகிறார் என்று தெரிந்தும், அவரை கண்டுகொள்ளாமலே இருந்தார் ரச்சித்தா. இப்படி அவர் நடந்து கொண்ட விதத்தைப் பார்த்து, ரசிகர்களுக்கு இவரை பிடித்துபோக இவரை ஓட்டுபோட்டு இறுதி வரை வீட்டில் இருக்க வைத்தனர்.

rachitha mahalakshmi fire song

ஃபயர் படத்தில்: பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த ரச்சித்தா, இயக்குநர் ஜே எஸ் கே சதீஷ் இயக்கத்தில் ஃபயர் திரைப்படத்தில் நடித்தார். இந்த படத்தில் பாலாஜி முருகதாஸ், சாந்தினி தமிழரசன், சாக்‌ஷி அகர்வால், காயத்ரி ஷான், சிங்கம்புலி மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தில் இருந்து, மெதுமெதுவாய் என்கிற பாடலின் டிரைலர் வெளியானது. அதில் ரச்சித்தா மகாலட்சுமி, வெறும் சட்டை மட்டுமே அணிந்து கொண்டு இருக்க, பாலாஜி முருகதாஸ் அவரை கண்ட இடத்தில் தொடுவது போல காட்சி இருந்தது இதைப்பார்த்த ரசிகர்கள் வாயடைந்து போனார்கள்.

rachitha mahalakshmi fire song

மொத்தமானமும் போச்சு: இதைத்தொடர்ந்து ஃபயர் படத்தில் இருந்து, மெதுமெதுவாய் பாடலின் முழு வீடியோ வெளியானது. அதில் ரச்சித்தா, சொட்ட சொட்ட மழையில் நனைந்தபடி பாலாஜியுடன் நடனமாடி விட்டு, முட்டி வரை சேலையை தூக்கிக்கொண்டு மாடிக்கு சென்று, பின் சட்டை மட்டுமே அணிந்து இருக்க, பாலா அவரை கட்டிப்பிடித்து, கண்ட இடத்தில் தொடுகிறார். இந்த காட்சி அப்பட்டமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. சிலர் ரச்சித்தாவின் அழகை பாராட்டி லைக்குகளை குவித்து வந்தாலும், ரச்சித்தாவா இப்படி... சீரியல் அம்மணி... சினிமாவில் திறந்தமேனியா... பட வாய்ப்புக்காக ரச்சித்தா இப்படி நடித்து இருக்கக்கூடாது என்று கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். ஒரே ஒரு பாடலில் மொத்த மானமும் போச்சு, இதுதேவையா என ரசிகர்கள் ரச்சித்தாவை திட்டிதீர்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X