விவாகரத்து பிரச்சனை..இரண்டாவது திருமண கிசுகிசு..பிக் பாஸ் சீசன் 6ல் நுழையும் ரச்சிதா மகாலட்சுமி!
சென்னை : விவாகரத்து பிரச்சனை இரண்டாவது திருமண சர்ச்சையில் சிக்கிய சீரியல் நடிகை ரச்சிதா மகாலட்சுமி பிக் பாஸ் சீசன் 6ல் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
பல எதிர்பார்ப்புகளுடன் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி இன்று மாலை 6.30 மணிக்கு கோலாகலமாக தொடங்க உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் யார் யார் எல்லாம் கலந்து கொள்கிறார்கள் என்பதை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

பிக் பாஸ்
பிக் பாஸ் வீட்டில் வெளியுலக தொடர்பு இல்லால், போஃன் இல்லாமல், குடும்ப உறுப்பினர்களை பார்க்காமல் நூறு நாட்கள் வீட்டில் இருக்க வேண்டும். அந்த வீட்டில் இருப்பவர்கள் தான் 100 நாளைக்கு சொந்த பந்தம் எல்லாமே. இந்த நிகழ்ச்சியில் சண்டை, அழுகை, நட்பு,காதல், பாசம் என அனைத்தும் இருக்கும்.

அமீர், பாவ்னி காதல்
கடந்த பிக் பாஸ் சீசன் 5ல் காதல் கிசுகிசுவில் சிக்கிய அமீர் மற்றும் பாவ்னி இன்று காதல் ஜோடிகளாக வலம் வருகின்றனர். அதேபோல நண்பர்களாக இருந்த அக்ஷரா மற்றும் வருண் இன்று வரையும் அந்த நட்பை பேணி காத்து வருகின்றனர். வெளியில் எவ்வளவு பிரபலமாக இருந்தாலும் வீட்டில் இருப்பவர்களின் மனதையும், மக்களின் மனதிலும் இடம் பிடித்தால் தான் டைட்டிலை வெல்ல முடியும்.

கணவருடன் பிரச்சனை
இந்த நிலையில் பிக் பாஸ் சீசன் 6ல் சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பிரபலமான ரச்சிதா மகாலட்சுமி கலந்து கொள்ள இருக்கிறார். இவர் சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்து வருகிறார். இவர் சீரியல் நடிகர் தினேஷ் என்பவரை கடந்த 2015ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதி சில பிரச்சனைகளால் கருத்து வேறுபாடு காரணமாக, தனித்தனி வீட்டில் வாழ்த்து வருகின்றனர்.

இரண்டாவது திருமண சர்ச்சை
ரச்சிதாவின் விவகாரம் சர்ச்சையான நிலையில், இவர் இயக்குனர் ஒருவரை காதலித்து வருவதாகவும், விரைவில் அவரை இரண்டாவது திருமணம் செய்துகொள்ள ரச்சிதா திட்டமிட்டு இருப்பதாகவும் சமூகவலைத்தளத்தில் கிசுகிசுக்கப்பட்டது. ஆனால், அந்த இயக்குனர் யார் என்கிற தகவல் வெளியாகவில்லை. தற்போது பிக் பாஸ் வீட்டிற்குள் நுழையும் ரச்சிதா வீட்டில் என்னென்ன பிரச்சனைகளை எதிர்கொள்ளப்போகிறார், டைட்டிலை வெல்வாரா என்பதை பொருத்து இருந்து பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











