தொழில் அதிபரை ஏமாற்றி ரூ10 லட்சம், கார் பறிப்பு ..தலைமறைவான சீரியல் நடிகை.. கரூர் போலீஸ் வலைவீச்சு!

சென்னை: தொழில் அதிபரிடம் 10 லட்சம் ரொக்கம், சொகுசு காரை ஏமாற்றி மோசடியில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் சீரியல் நடிகை ராணி, அவரது கணபர் பாலாஜி, கணவரின் நண்பர் என 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆனால், சீரியல் நடிகை தற்போது தலைமறைவாகி இருப்தபால், கரூர் போலீசார் வலை வீசி தேடிவருகின்றனர்.

தனியார் தொலைக்காட்சியில் சிகரம், அலைகள், சொந்தம், அத்திப்பூக்கள், வள்ளி, குலதெய்வம் போன்ற பல சீரியல்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை ராணி. சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரோஜா தொடரில் அவரின் வில்லத்தனமான நடிப்பு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. நல்ல திறமையான நடிகை என பெயர் எடுத்த இவர் மீதும், இவரின் கணவர் பாலாஜி மற்றும் பாலாஜியின் நண்பர் புருஷோத்தமன் மீதும் கரூர் ஹோட்டல் அதிபர் ஒருவர் புகார் அளித்துள்ளார்.

Serial Actress Rani Cheating
Photo Credit:

நடிகை மீது புகார்: நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த தினேஷ் ராஜ், கரூரில் ஓட்டல் நடத்தி வருகிறார். இவருக்கு தொழில் ரீதியாக பணத்தேவை இருந்ததால், சென்னை, வளசரவாக்கத்தை சேர்ந்த நடிகை ராணியின் கணவர் பாலாஜி என்பவர் அறிமுகமாகி உள்ளார். பாலாஜி தனக்கு கரூரில் நண்பர்கள் இருப்பதாக கூறி வடிவேலு என்பவரை அறிமுகம் செய்துவைத்துள்ளார். அவர்கள் அனைவரும் கலந்து பேசி ஒப்பந்தம் செய்துள்ளனர். அப்போது தினேஷ் ராஜ் பத்து லட்ச ரூபாய், 50 லட்ச ரூபாய் மதிப்புள்ள பிஎம்டபிள்யூ கார், ஐந்து சவர நகையையும் கடந்த மே மாதம் கொடுத்துள்ளார். பணத்தை கொடுத்து பல மாதங்கள் ஆனநிலையில், பணம், நகையை திருப்பி கேட்ட போது, பாலாஜி, பணத்தை தராமல் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

நடிகை தலைமறைவு: இதுகுறித்து ராணியின் கார் ஓட்டுனரிடம் விசாரித்த போது, ராணியும் அவரது கணவர் பாலாஜியும் பணத்தை வாங்கிக் கொண்டு ஏமாற்றுவதை வாடிக்கையாக வைத்து இருப்பதாக கூறியுள்ளார். அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் தினேஷ் ராஜ், கரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், நடிகை ராணி, அவரது கணகர் பாலாஜி, கணவரின் நண்பர் புருஷோத்துமன் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விஷயம் தெரிந்த அனைவரும் செல்போனை ஸ்விட்ச்ஆப் செய்து விட்டு தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது. கரூரில் இருந்து சென்னை விரைந்த போலீசார், ராணி மற்றும் அவரது கணவர், கணவரின் நண்பர் ஆகியோரை தீவிரமாக தேடி வருகின்றனர்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X