கட்டிப்புடிச்சி ஓட்டு கேட்டீங்க.. கொந்தளித்த சீரியல் நடிகை ரவீனா!

சென்னை: சின்னத்திரை நடிகர் சங்கத்தின் தலைவராக இருந்த சிவன் சீனிவாசனும் பொதுச்செயலாளராக இருந்த போஸ் வெங்கட்டின் பதவிக்காலமும் முடிவடைந்ததைத் தொடர்ந்து, சின்னத்திரை நடிகர் சங்கத்திற்கான தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. இதில் வாக்களிக்கும் உரிமை பறிக்கப்பட்டதாக நடிகை ரவீனா வேதனை உடன் தெரிவித்துள்ளார்.

சின்னத்திரை நடிகர் சங்கத்திற்கான தேர்தல் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. இதில், கடந்த 22 ஆம் தேதியிலிருந்து வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டு, பிரச்சாரம் செய்யப்பட்டது. இதில் சிவன் சீனிவாசன் தலைமையிலான வசந்தம் அணி, நடிகர் தினேஷ் தலைமையிலான உழைக்கும் கரங்கள் அணி, நடிகர் பரத் தலைமையிலான சின்னத்திரை வெற்றி அணி என மூன்று அணிகள் களத்தில் குதித்துள்ளன. இன்று விருகம்பாக்கத்தில் சின்னத்துரை நடிகர் சங்க தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Raveena Daha chinnathirai nadigar sangam
Photo Credit:

சின்னத்திரை நடிகர் சங்கத்தேர்தல்: இன்று காலையில் இருந்தே, நடிகர் நடிகைகள் வாக்களித்து வரும் நிலையில் நடிகை ரவீனாவிற்கு வாக்குரிமை பறிக்கப்பட்டதாக வேதனையுடன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். அதில், நான் சீரியலில் நடிக்க கூடாது என ரெட் கார்ட் கொடுத்து இருக்கிறார்கள். எதற்காக எனக்கு ரெட் கார்ட் கொடுத்தார்கள் என்பதெல்லாம் இப்போது நாம் பேச வேண்டாம். ஏனென்றால், அதைப் பற்றி பேசினால் அது பெரிய கதையாக இருக்கும். இப்போது எனக்கு ஏன் போட்டு உரிமை பறிக்கப்பட்டது என்பது குறித்து மட்டும் நான் பேசுகிறேன்.

எனக்கு ஏன் ரெட் கார்ட்: எனக்கு ரெட் கார்டு கொடுத்து ஒரு வருடத்திற்கு எந்த சீரியலிலும் நடிக்க கூடாது என கூறியிருந்தார்கள். இது தொழில் ரீதியான பிரச்சனை என்பதால் நானும் அதை ஏற்றுக் கொண்டேன். இருந்தாலும் எனக்கு ரெட் கார்ட் கொடுத்ததை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதனால், என்னை போல பாதிக்கப்பட்டவர்களுக்கு தீர்வு கிடைக்க வேண்டும் என்பதற்காக நானும் ஒரு கமிட்டி உறுப்பினராக தேர்தலில் நிற்க வேண்டும் என்று கூறினேன். ஆனால், ரெட் கார்ட் கொடுத்து இருப்பதால் கமிட்டி நம்பராக நிற்க முடியாது என கூறிவிட்டார்கள். இதைத்தொடர்ந்து நான் பைலாவை பார்த்தபோது வழக்கு இருக்கும்போது தேர்தலில் நிற்க முடியாது என்று தான் இருந்தது. வேறு சில பைலாவை பார்த்தபோது நிற்கலாம் என கூறினார்கள். இருந்தாலும், இவர்கள் நிற்க வேண்டாம் என்று சொன்னதால் நான் கமிட்டி உறுப்பினராக தேர்தலில் நிற்கவில்லை.

கட்டிப்பிடித்தார்: இன்று தேர்தல் நடப்பதால் ஓட்டு போடுவதற்காக வந்தேன். ஆனால், ரெட் கார்டு கொடுத்து இருப்பதால், நான் ஓட்டு போடக்கூடாது என்று சொல்லிவிட்டார்கள். ரெட் கார்ட் என்பது தொழில் ரீதியாக கொடுக்கப்பட்ட தடைதானே தவிர, அது எப்படி என்னுடைய ஓட்டு உரிமையை அவர்கள் பறிக்க முடியும். இதை செய்தது யார் என்று விசாரித்த போது, பரத் அண்ணா டீமில் இருக்கும் தேவ் ஆனந்த், தான் நான் ஓட்டுப்போடக்கூடாது என அப்ஜக்ஷன் தெரிவித்து கடிதம் கொடுத்து இருக்கிறார். ஆனால், அவர் என்னை பார்த்த போது, என்னை கட்டிப்பிடித்து எங்கள் அணிக்கு ஓட்டு போட்டு விடு என்று சொன்னவர், எப்படி எனக்கு எதிராக அப்ஜக்ஷன் லெட்டர் கொடுத்தார் என்று எனக்கு தெரியவில்லை.

பெண்கள் ஏதாவது ஒரு விஷயத்தை துணிந்து வந்து முன் நின்று சொன்னால் அவர்களுக்கு ரெக் கார்ட் கொடுத்து அவரை அமுக்கி விடுவது எந்த வகையில் நியாயம். என்னால், தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்பட்டது என்றால், அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். என்னை சீரியலில் நடிக்க கூடாது என தடை செய்வதால் இவர்களுக்கு என்ன லாபம் கிடைத்துவிடப் போகிறது என நடிகை ரவீனா ஆதங்கத்துடன் பேசினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X