அட்ஜெஸ்ட்மெண்ட் போனியா? கேள்வி கேட்ட ரிஹானாவை கிழிகிழியென கிழித்த நடிகை பானுமதி!
சென்னை: சீரியல் நடிகையான பானுமதி விஜய் தொலைக்காட்சியில் சின்ன மருமகள் என்கிற சீரியலில் ஒரு முக்கிய ரோலில் நடித்து வருகிறார். யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள இவர் அட்ஜெஸ்ட்மெண்ட் போய் இருக்கீங்களா என ரிஹானா கேட்ட கேள்விக்கு, சரியான பதிலடி கொடுத்து ரிஹானாவை கிழி கிழியென கிழித்துள்ளார்.
அந்த பேட்டியில் நடிகை பானுமதி, நான் சினிமாவில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு வரவில்லை. சாப்பாடு சாப்பிட ஏதாவது ஒரு வேலை செய்ய வேண்டும் என்பதற்காக நடிக்க வந்தேன். முதலில் கூட்டத்தோடு கூட்டமாக ஜீனியர் நடிகையாக 500 ரூபாய் சம்பளத்திற்கு வேலை பார்த்தேன். இப்போது பல சீரியல்களில் நடித்து வருகிறேன். இப்போது தான், இந்த துறையில் எதாவது சாதிக்க வேண்டும் என்கிற ஆசை வந்துள்ளது என்றார்.

நடிகை பானுமதி: இதைத்தொடர்ந்து ரிஹானா நீங்க அட்ஜெஸ்ட்மெண்ட்டுக்கு போய் இருக்கீங்களா? என்று கேள்வி கேட்டார். இந்த கேள்விக்கு பதில் அளித்த பானுமதி, இந்த கேள்விக்கு நான் பதிலளிக்க விரும்பவில்லை, இதற்கு நான் பதில் சொல்லுவதால், இந்த துறைமாறப்போவதில்லை, ரிஹானா இந்த கேள்வியை கேட்பதால் இது மாறிவிடப்போவது இல்லை. ஏன் என்றால், எனக்குள்ளும் மீரா மிதுன், வனிதா விஜயகுமார் இருக்கிறார்கள். ஆனால் நான் பானுமதியாகத்தான் வெளியில் தெரியவிரும்புகிறேன்.
இது ஒருகேள்வியா: இவன் என்னை கூப்பிட்டான், அவன் என்னை கூப்பிட்டான் என்று சொல்வதால், இந்த துறை மாறப்போவது இல்லை. அப்படி இருக்கும் போது எல்லா நடிகைகளிடமும் ஏன் இந்த கேள்விகளை கேட்குறீங்க? இந்த ஷோவின் இயக்குநர் இந்த கேள்வியை கேட்க சொல்கிறார் என்பதற்காக நீ எப்படி இந்த கேள்வியை கேட்பீங்க, நீயும் ஒரு பெண், நானும் ஒரு பெண் அப்படி இருக்கும் போது இந்த கேள்வியை கேட்பது தவறு என்று தெரியவில்லையா? இதுபோன்ற கேள்வியை கேட்டு கேட்டுத்தான் ஒட்டுமொத்த மீடியாவும் கெட்டுப்போய் இருக்கிறது.
திக்குமுக்காடிய ரிஹானா: அட்ஜெஸ்ட்மெண்ட் பற்றி பேசித்தான் நான் பிரபலமாக வேண்டும் என்கிற அவசியம் எனக்கு இல்லை. நீங்கள் அட்ஜெஸ்ட்மெண்ட் பற்றி பேசி பிரபலமாகி இருக்கலாம். அதற்காக நான் பதில் சொல்லவேண்டுமா... சமூகத்தை சீர்திருத்த வந்த ரிஹானா இப்படி கேட்கலாமா? இத்தனை கேமரா முன்னாடி, இத்தனை பேர் முன்னாடி, ஒரு பெண்ணின் கேரக்டரை அசிங்கப்படுத்தும் கேள்வியை ஏன் கேட்க வேண்டும் என்று கேள்வி மேல் கேள்வி கேட்டு ரிஹானாவை திக்குமுக்காட வைத்துவிட்டார் பானுமதி.
ரிஹானா சொல்லுவதெல்லாம் பொய்: அதுமட்டுமில்லாமல், எத்தனையோ பேர் பேப்பரை கையில் எடுத்த ரிஹானாவின் பேப்பரை நான் கையில் எடுக்கட்டுமா. எல்லாமே கேமராக்காக சொல்லும் பொய், அப்படித்தான் கேமிரா முன்னாடி நீங்க அமர்ந்து பல பொய்களை பேசி பேசி பிரபலமாகி இருக்கீங்க நான் பேச ஆரம்பித்தால் யாரும் தாங்கமாட்டீங்க என்று அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டார்.


Click it and Unblock the Notifications











