60 வயசு கிழவன் என்னை கூப்பிட்டான்.. 17 வயதில் நடந்த கொடுமை.. சீரியல் நடிகை கண்ணீர் பேட்டி!
சென்னை: சீரியலில் பிஸியாக நடித்து வரும் நடிகை ரிஹானா, விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் 2வில் மாரி என்ற ரோலில் நடித்து வந்தார். அதிலிருந்து சொந்த காரணத்திற்காக விலகி அவர், தற்போது இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் நடித்து வருகிறார். நடிகை ரிஹானா தனது வாழ்க்கையில் கடந்து வந்த கசப்பான அனுபவத்தை பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
அதில், என்னுடைய முதல் திருமணம் முறிந்து போனது அனைவருக்கும் தெரியும், நான் நல்லா படிப்பேன். ஆனா, எங்க குடும்ப சூழல் காரணமா படிப்பை பாதியிலேயே நிறுத்திட்டு வேலைக்கு போயிட்டேன். சீக்கிரமா கல்யாணமாகி குழந்தைகளும் பிறந்தாங்க. அந்தக் கல்யாண வாழ்க்கையும் பாதியிலேயே போயிடுச்சு. சினிமாவிலாவது நல்ல இடத்திற்கு வரவேண்டும் என்று ரொம்பவே கஷ்டப்பட்டேன்.

60 வயசு கிழவன் கூப்பிட்டான்: நான் திருமணத்திற்கு முன் ஹோம் நர்ஸ் ஆக இருந்தப்ப பல கஷ்டத்தை அனுபவித்தேன், அப்போது ஒரு வீட்டிற்கு ஹோம் நர்ஸ் ஆக சென்றேன். அந்த வீட்டில் இருந்த 60 வயது முதியவர் என்னிடம் எதற்கு இந்த வேலைக்கு வருகிறாய் என்று கேட்டார். நான் என் திருமணத்திற்கு நகை வாங்க சீட்டு போடுகிறேன், அதற்காக இந்த வேலைக்கு வருகிறேன் என்றேன். அப்போது அந்த முதியவர், நீ இப்படி எல்லாம் கஷ்டப்பட வேண்டாம், என்னை அனுசரித்து நடந்து கொண்டால் , உன் திருமணத்திற்கான அனைத்து செலவையும் நான் பார்த்துக்கொள்கிறேன் என்றார்.
மோசமான அனுபவம்: அதைக்கேட்டு நான் அதிர்ந்து போய் விட்டேன், அப்போ எனக்கு 17 வயசு தான் ஆச்சு. என்ன செய்வது என்றே தெரியவில்லை. அவரிடம் பாதுகாக்க இருக்க வேண்டும் என்று ஒரு அறைக்குள் சென்று பூட்டிக்கொண்டு அலுவலகத்திற்கு தகவல் கொடுத்து இந்த வீட்டில் வேலை செய்ய மாட்டேன் என்று கூறி வேறு இடத்தை கேட்டு வாங்கினேன். இதுபோன்ற சில மோசமானவர்களும் இருக்கிறார்கள். நிறைய முதியவர்கள் என்னை ஆசிர்வாதம் பண்ணியிருக்காங்க. அவங்களுடைய ஆசிர்வாதம் என்று ஒரு இடத்திற்கு வந்து இருக்கிறேன்.
இரண்டாவது திருமணம்: தொடர்ந்து பேசிய அவர், அண்மையில் தான் எனக்கு விவாகரத்து ஆனது. அது தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் தற்போது தான் என் கைக்கு கிடைத்து இருக்கிறது. எனக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். எனக்கென்று ஒரு வாழ்க்கை வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருக்கிறது. விதவையானாலும், விவாகரத்து ஆன பெண்ணாக இருந்தாலும், இரண்டாவது திருமணம் செய்து கொண்டால். அவர்களை இந்த சமுதாயம் தப்பாகத்தான் பார்க்கிறது. ஆனால், கணவன் இல்லாமல் வாழும் பெண்ணுக்கு பல வகையில் பிரச்சனைகள் வரும் இதனால், நிச்சயம் இரண்டாவது திருமணம் செய்து கொள்வேன் என்றார்.


Click it and Unblock the Notifications











