நாலு பேர் கூட போனு சொன்னாரு.. ஏன் இப்படி மாறுனாருனு தெரில.. வாழ்கையே போச்சு.. கலங்கிய சீரியல் நடிகை!
சென்னை: சன் தொலைக்காட்சியில் ஆனந்த ராகம் சீரியல் மூலம் பிரபலவமானவர் நடிகை ரீஹானா, பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் நடித்துவந்த நிலையில் அதில் இருந்து விலகினார். தற்போது ஜீ தமிழின் மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் நடித்து வரும் இவர், தனது வாழ்க்கையில் கடந்து வந்த கசப்பான அனுபவம் குறித்து கண்கலங்கி பேட்டி அளித்துள்ளார்.
அவர் அளித்துள்ள பேட்டியில், என் குடும்பம் ஏழ்மையான குடும்பம் என்பதால 16 வயசிலேயே கல்யாணத்துக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க, 16 வயசுல எங்கேஜ்மென்ட் ஆச்சு 18 வயசுல கல்யாணம், 19 வயதில் குழந்தை. 24 வயசுக்குள் ரெண்டு குழந்தைங்களுக்கு அம்மா. இப்படி திரும்பி பார்ப்பதற்குள் வாழ்க்கையில அனைத்துமே முடிஞ்சு போச்சு. என்னுடைய வீட்டுக்காரரு ரொம்ப நல்ல மனுஷன் எந்தவிதமான கெட்ட பழக்கமும் அவருக்கு கிடையாது. எந்தப் பெண்கள் கிட்டயும் அவர் பேசினது இல்ல, என் வீட்டுக்கு என்னுடைய தங்கச்சி வந்தாலும், அவர்களிடம் பேச மாட்டாரு. அப்படியே திடீர் என்று வீட்டுக்கு லேடிஸ் வந்துட்டா, கூட ரூமுக்குள்ளேயே தான் இருப்பாரு அவங்க போன பிறகு தான் வருவாரு அப்படி ஒரு நல்ல மனுஷன்.

சீரியல் நடிகை ரீஹானா: அப்படி ஒரு நல்ல குணம் கொண்ட மனுஷன் ஏன் திடீர்னு அப்படி மாறினார் என்று தெரியல, அவருக்கு யாரு என்ன சொல்லி கொடுத்தாங்கன்னு தெரியல. நான் சினிமாவில் சின்ன சின்ன ரோலில் நடித்த போது, மாமியார் வீட்டில் இருந்து சப்போர்ட் வந்தது. அதுவே, தாலி போட்டு, பொட்டு வைத்துக்கொண்டு, ஜோடியாக நடித்த போது, என் கணவர் எதிர்ப்பு தெரிவித்தார்.இது எல்லாம் தேவையில்லை பார்ப்பவர்கள் கேவலமாக பேசுகிறார்கள் என்று சொன்னார். அந்த விஷயத்தில் எனக்கும் கணவருக்கும் பிரச்சனை வந்தது. ஆனால் என்னோட படிப்புக்கு ஒரு இடத்தில வேலைக்கு போனா 15,000 ரூபாய் தான் சம்பளமா தருவாங்க. இப்போ, என்னோட படிப்புக்கு மீறி சினிமால நடிப்பதால் எனக்கு இரண்டு மடங்கு சம்பளம் அதிகமாக கிடைக்குது. இது என்னுடைய குடும்ப தேவைக்கு பயன்படுத்துவதற்கு உதவியா இருக்கு
வாழ்க்கையே போச்சு: ஆடம்பரமாக வாழ வேண்டும், அது வாங்கணும், இதை வாங்க வேண்டும் என்பதற்காக நான் சினிமால நடிக்க வரல, என்னுடைய குழந்தைகளை கஷ்டப்படாம வளர்க்க வேண்டும். அவங்களை நல்லா படிக்க வைக்க வேண்டும் என்பதற்காக நடிக்க வந்தேன். ஆனால், என் கணவர் அதை புரிந்து கொள்ளாமல், என்னை கஷ்டப்படுத்தும் வகையில் பேசிவிட்டார். நாலு பேர் கூட போய் சம்பாதினு சொன்னாரு அந்த வார்த்தைக்கு பிறகு எல்லாமே முடிந்துவிட்டது.இப்போ நான், என் குழந்தை அம்மாவுடன் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன் என்று ஷகிலாவிற்கு அளித்த பேட்டியில் கண்கலங்கி பேசி உள்ளார் ரிஹானா,


Click it and Unblock the Notifications











