அவ்வளவு மோசமான உடை.. ஆண்களை கெடுப்பதே அவங்க தான்.. ரிஹானா பகீர்!
சென்னை: பெண்கள் மோசமான உடை அணிவதால் தான், ஆண்கள் மோசமாக பார்க்கிறார்கள். பெண்கள் ஆபாசமில்லாத உடைகளை அணிய வேண்டும் என்று பேசி உள்ளார். இந்த பேட்டி இணையத்தில் டிரெண்டான நிலையில், இணையவாசிகள் அவரை கடுமையாக திட்டி தீர்த்து வருகின்றனர்.
கேரளாவில் ஹேமா கமிஷன் அறிக்கை வெளியாகி பெரும் புயலை கிளப்பி இருக்கும் நிலையில், தமிழ் சினிமாவிலும் பெண்களுக்கு இதுபோன்று நடக்கிறது என்று முன்னணி நடிகையான ராதிகா சரத்குமார் கூறியிருந்தார். அவரைப்போல நடிகை குஷ்பு, ரோகிணி, லட்சுமி ராமகிருஷ்ணன் என பல நடிகைகள் குரல் கொடுத்து வருகின்றனர்.

ரிஹானா பேட்டி: இதுகுறித்து யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த நடிகை ரிஹானா, அட்ஜெஸ்ட்மெண்ட் என்பது சினிமாவில் மட்டுமில்ல எல்லா இடத்திலும் இருக்கிறது. ஆனால், சினிமாவில் வெளிப்படையாக தெரிகிறது. யாரும் நேரடியாக எந்த பெண்கிட்டையும் வரியானு கேட்க மாட்டார்கள். அப்படி கேட்டால் அந்த பெண் செருப்பால் அடிப்பாள். இதனால், ஆடிசன் வெச்சி அவர்களை அழைத்து, பட வாய்ப்பு தருகிறேன் என்று சொல்லி ஆசைகாட்டி, சில உப்புமா கம்பெனிகள் அழைக்கின்றனர். இப்படிப்பட்டவர்கள் படம் எடுக்க வேண்டும், சாதிக்க வேண்டும் என்பதற்காக வரவில்லை. இதற்காகவே வருகிறார்கள்.
உப்புமா கம்பெனி: இவர்களை போன்றவர்களால், ஒட்டுமொத்த சினிமாவிற்குமே கேட்ட பெயர், ஏதோ ஒரு இடத்தில் நடக்கும் தவறுக்காக ஒட்டுமொத்த சினிமாவையும் குறை சொல்ல முடியாது. இங்கு சினிமா தான் வாழ்க்கை என்று அதற்காக கஷ்டப்படுபவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். பல வலிகளை கடந்த அந்த பெண் வளர்ந்து வந்தாலும், இந்த சமுதாயம் அவளை தப்பான பார்வையில் தான் பார்க்கிறது. ஒரு பெண்ணின் திறமை, இவளின் வலியை புரிந்து கொள்ளாமல் தவறாக பேசுவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
பெண்கள் தான் காரணம்: ஒருத்தன் கூப்பிடுறான் என்றால், அவன் ஏன் கூப்பிடுகிறான், நான் பெண்களைத்தான் தவறாக சொல்லுவேன், அவர்கள் தான் ஆண்களை கெடுக்கிறார்கள். ஆபாசமான உடைகளை அணிந்து வருகிறார்கள். எந்த உடை அணிந்து வந்தாலும் அதில் ஆபாசமில்லாதபடி பெண்கள் உடை அணிய வேண்டும் என்று பேசி இருந்தார். இவரின் இந்த பேச்சு இணையத்தில் வைரலான நிலையில், நெட்டிசன்கள் அவரை திட்டி தீர்த்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











