“செருப்பால யாரை அடிப்பீங்க“…நடிகை ரேகா நாயரின் அதிரடியான பதில்!

சென்னை : சின்னத்திரை நடிகை ரேகா நாயர் பல சீரியல்களில் நடித்துள்ள இவர் சில படங்களிலும் குறிப்பிடத்தகுந்த கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார்.

Recommended Video

“நான் டிரெஸ் போடாம நடிச்சா உனக்கென்ன..” பயில்வான் ரங்கநாதனை நடுரோட்டில் பந்தாடிய இரவின் நிழல் நடிகை

மறைந்த விஜே சித்ராவின் தோழியான ரேகா நாயர், சித்ரா குறித்தும் ஹேமந்த் குறித்தும் பல்வேறு திடுக்கிடும் தகவல்களை கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார்.

ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த ரேகா நாயர், பல ஏடாகூடமான கேள்விக்கு அதிரடியாக பதிலளித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

ரேகா நாயர்

ரேகா நாயர்

சன் டிவியின் பூவே உனக்காக வம்சம் உள்ளிட்ட சீரியல்களிலும், விஜய் டிவியின் பகல் நிலவு, நாம் இருவர் நமக்கு இருவர் உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்துள்ளவர் ரேகா நாயர். இவர் பார்த்திபன் இயக்கிய இரவின் நிழல் படத்தில் ராணி என்ற கதாபாத்திரத்தில் ஒரு காட்சியில் மேலாடை இன்றி அரைநிர்வாணமாக நடித்திருக்கிறார். இதில் எந்த கதாபாத்திரம் முகம் சுளிக்கும் அளவுக்கு ஆபாசமாக இல்லை என பலரும் பாராட்டினார்கள்.

பயில்வானுடன் சண்டை

பயில்வானுடன் சண்டை

ஆனால், சினிமா பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன், ரேகா அரைநிர்வாணமாக நடித்ததற்கு கடுமையாக விமர்சித்து இருந்தார். இதையடுத்து, பயில்வான் ரங்கநாதன் உடற்பயிற்சிக்காக பீச்சிற்கு வந்திருந்த போது, ரேகா நாயர் அவரை வெளுத்து வாங்கினார். சினிமா நடிகைகளை கேவலாக பேசி அதில் பிழைப்பு நடத்துற, அடுத்தவர்களை பற்றிபேசும் நீ, உன் மகன் என்ன பண்றானு தெரியுமா என பயில்வானை அடிக்க பாய்ந்தார். இது இணையத்தில் மிகப்பெரிய அளவில் பரபரப்பானது.

அதிரடியான பதில்

அதிரடியான பதில்

இந்நிலையில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள நடிகை ரேகா நாயரிடம் பல ஏடாகூடமான கேள்வி கேட்கப்பட்டன அதற்கு மிகவும் துணிச்சலுடன் பதில் அளித்தார். அதில், திருமணத்திற்கு முன் செக்ஸ் வைத்து கொள்வது குறித்த கேள்விக்கு அவரது மனநிலையை பொருத்தது என்றார். மேலும், செருப்பால அடிக்கனும்னா யாரை அடிப்பீங்க என்ற கேள்விக்கு அயோக்கியதனம் செய்பவர்கள் அனைவரையும் செருப்பால் அடிக்கனும் என்றார். பாலியல் தொல்லை எனக்கு வந்தது கிடையாது, நானும் பண்ணதில்லை, விழிப்புணர்வுக்காக நிர்வாணமாக இருப்பீற்களா என்றதற்கு, இல்லை என்பது போல அசால்டாக பதிலளித்தார்.

திட்டி வருகின்றனர்

திட்டி வருகின்றனர்

மேலும், என் முதல் காதலன் என் கணவர் தான், அவர் பெயரை என் உடல் முழுக்க பச்சை குத்தி இருக்கிறேன். எனக்கு எய்ட்ஸ்,சித்ராவின் கணவர் ஹேமந்தின் காதலி என்று பல கிசுகிசுக்கள் வந்துள்ளன ஆனால், எதை பற்றி எனக்கு கவலை இல்லை என்றார். விவகாரமான பல கேள்விக்கு நேரடியாக பதிலளித்த ரேகாவை பலர் பாராட்டினாலும், சிலர், வெளிப்படையாக பேசுவதாக நினைத்து படுகேவலமாக பேசியதாக பலர் திட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X