பெண்களுக்கு கற்புனு ஒன்று இல்லவே இல்ல..மன்சூர் அலிகான் சொன்னதுல என்ன தப்பு.. ரேகா நாயர் பேட்டி!

சென்னை: மன்சூர் அலிகான் சொன்னதுல என்ன தப்பு என்று நடிகை ரேகா பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

நடிகை ரேகா நாயர்: இது குறித்து பிரபல ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள நடிகை ரேகா நாயர், இன்றைக்கு சோஷியல் மீடியாவில் எதை சொன்னால் வைரலாகும் என்பதை தெரிந்து கொண்டு அதை வைரலாக்கி வருகிறார்கள். அவர் மீது இத்தனை குற்றச்சாட்டுகளை சொல்லும் சமூகவலைத்தளங்கள் யாராவது மன்சூர் அலிகான் பேசிய முழு வீடியோவை பார்த்தாங்களா.

Serial actress Rekha nair bold interview about Actor Mansoor Ali Khan trisha controversy

பெரியதாகி விட்டது: சினிமாவில் இன்று முதல் முதலாக மன்சூர் அலிகான் தான் இப்படி பேசி இருக்கிறாரா, சினிமா ஆரம்ப காலத்தில் இருந்தே இந்த பிரச்சனை இருக்கிறது. ஆனால், இப்போது சோஷியல் மீடியா வளர்ந்து உள்ளதால் சின்ன சின்ன விஷயத்தைக் கூட பெரிதாக்கி விடுகிறார்கள் இதுதான் மன்சூர் அலிகான் விஷயத்தில் நடந்துள்ளது.

பிரச்சனை பெரியதாக்கியது யார்: மன்சூர் அலிகான் பேசியதால் காயப்பட்ட திரிஷா, இனி மேல் அவருடன் சேர்ந்து நடிக்கமாட்டேன் என்று ஒரு ட்வீட் போட்டுள்ளார். அவ்வளவு தான் இந்த பிரச்சனை முடிந்துவிட்டது. ஆனால், இதை பெரிதாக்கியது யார். அதே போல லியோ படத்தின் இயக்குநர் மன்சூர் அலிகானுக்கு போன் பண்ணி என்ன அண்ணா இப்படி பேசிட்டீங்க, திரிஷா மேடம்கிட்ட பேசுங்கனு சொன்னா பிரச்சனை முடிந்து இருக்கும் அதை அவர் செய்யாமல் பொது வெளியில் கண்டனம் தெரிவிக்கிறார்.

கற்புனு இல்லவே இல்ல: ஆண் பிரச்சனையோ, பெண் பிரச்சனையோ இதில் பாதிக்கப்படுவது பெண் தான், அவள் உடல் ரீதியாக பாதிக்கப்படுவாள், பெண்களுக்கு கற்புனு ஒன்று இல்லவே இல்ல, பாலியல் ரீதியாக துன்புறுத்தல் என்பதுதான் அதற்கு சரியான பொருள், பாலியல் ரீதியாக உண்மையாக துன்புறுத்தப்படுபவர்களுக்கு தூக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்பது என் கருத்து. இங்கு வதந்தியாக பேசப்படுபவை உண்மை இல்லை என்பதை பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X