Reshma: மாமியாரான பின்னும் படுக்கையறையில் டவுசருடன் ஆட்டம்.. ரேஷ்மாவை கலாய்க்கும் ஃபேன்ஸ்!
சென்னை: டிவி நிகழ்ச்சி, சீரியல், சின்னத்திரை என படுபிஸியாக இருக்கும் ரேஷ்மா பசுபுலெட்டி தற்போது உடல் எடையை குறைத்து கதாநாயகிகளுக்கே டஃப் கொடுக்கும் அளவிற்கு அழகாக மாறி இருக்கிறார். உடல் உடையை குறைத்ததும் அம்மணி ஏகத்திற்கும் ஏடாகூட உடை அணிந்து அட்டகாசம் செய்து வருகிறார். தற்போது இவர் படுக்கை அறையில் டவுசருடன் அமர்ந்துள்ள வீடியோவை வெளியிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்களை அவரை ட்ரோல் செய்து வருகின்றனர்.

தொலைக்காட்சியில் தொகுபாளினியாக சின்ன சின்ன நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த ரேஷ்மா பசுபுலேட்டி, விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். அந்த சீரியலில் ராதிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அப்பாவி பெண்ணான ராதிகாவை கோபி ஏமாற்றி திருமணம் செய்து கொண்டு, இரண்டு பொண்டாட்டிகளுடன் ஒரே வீட்டில் வாழ்ந்து வருகிறார். இரண்டு பொண்டாட்டி கதை அம்சத்தை கொண்ட இந்த சீரியலில் இல்லத்தரசிகளின் பேவரைட் சீரியலாக உள்ளது

கார்த்திகை தீபம் சீரியல்: இந்த சீரியலை தொடர்ந்து நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி, சினிமாவிலும் அவ்வப்போது தலைகாட்டி வருகிறார். தற்போது இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில் சாமுண்டீஸ்வரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அந்த சீரியலில் நான்கு பெண்களின் அம்மாவாகவும், ஆண்களை அடக்கி ஆளும் தைரியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ரேஷ்மா. அந்த சீரியலில், ரேவதி, கார்த்திக்கின் திருமணம் நடக்க இருக்கிறது. இவர்களின் திருமணத்திற்கு பின், கார்த்திக்கின் மாமியாராக மாற இருக்கிறார் ரேஷ்மா.

மாமியார் இப்படி ஆடலாமா? ரேஷ்மா உடல் எடையை குறைத்து சிக்குனு மாறி இருக்கிறார். அதற்காகவே தனது instagram பக்கத்தில் அவ்வப்போது விதவிதமான போட்டோக்களையும் வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார். தற்போது இவர் தனது instagram-யில் சட்டை பாட்டனை கழட்டிவிட்டு, டவுசருடன் படுக்கையில், கசமுசா பாட்டுக்கு ஆட்டம் போட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த இணையவாசிகள் சீரியலில் மாமியார்.. சோசியல் மீடியாவில் கவர்ச்சி ஆட்டமா என கேட்டு வருகின்றனர். மேலும் கார்த்திகை தீபம் சீரியல் ரசிகர்கள், சீரியலில் மாமியாராக நடித்த பின்னும் டவுசரில் ஆட்டம் போடலாமா ரேஷ்மா என கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். எது எப்படி இருந்தாலும் அம்மணியின் ஆட்டம் சூப்பர் என சிலர் லைக்குகளை குவித்து வருகின்றனர்.



Click it and Unblock the Notifications











