Reshma: முதலிரவில் நான் பட்ட கஷ்டம்.. வெளிப்படையாக பேசிய சீரியல் நடிகை ரேஷ்மா!

By Staff

சென்னை: சீரியல்களில் இழுத்து போர்த்திக் கொண்டு மாமியாராக வலம் வரும் நடிகை ரேஷ்மா பசுப்புலெட்டி, இன்ஸ்டாகிராமில் படுகவர்ச்சியான வீடியோ மற்றும் போட்டோக்களை ஷேர் செய்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார். அது மட்டுமில்லாமல், மிர்ச்சி பிளஸ் ஆப் இணையதளத்தில் ஒளிபரப்பாகும் அந்தரங்கம் அன்லிமிடெட்டில் தாம்பத்தியம் வெளிப்படையாக பேசி உள்ளார். இது பலரை முகம் சுளிக்க வைத்துள்ளது.

தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் பிரசாத் பசுபுலேட்டியின் மகளான இவர்,அமெரிக்காவில் படித்துவிட்டு ஆங்கில சேனல் ஒன்றில் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தார். பின் இந்தியா வந்த இவர் சன் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்தார். அப்போது தான் வம்சம் சீரியலில் இவருக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த சீரியலில் நடித்ததைத் தொடர்ந்து, மரகத வீணை, சுந்தரகாண்டம், ஆண்டாள் அழகர் போன்ற சீரியலில் நடித்து வந்தார். அதைத்தொடர்ந்து, மசாலா படத்தில் ஹீரோயினாக நடித்தார்.

Reshma Pasupuleti Vijay tv

ரேஷ்மா பசுபுலேட்டி: பின் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்தன் மூலமாக பிரபலமான நடிகை ரேஷ்மா பசுப்புலேட்டி. தொடர்ந்து சீரியல்களிலும், படங்களிலும் நடித்து வருகிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா என்கிற ரோலில் நடித்து வருகிறார். அப்பாவி பெண்ணான ராதிகாவை கோபி ஏமாற்றி திருமணம் செய்து கொண்டு, இரண்டு பொண்டாட்டிகளுடன் ஒரே வீட்டில் வாழ்ந்து வருகிறார். இதுதான் அந்த சீரியலின் கதை, இந்த சீரியலைத் தொடர்ந்து, அபி டெய்லர், சீதா ராமன், கார்த்திகை தீபம் போன்ற தொடர்களில் நடித்து வருகிறார். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில், மூன்ற பெண்களுக்கு அம்மாவாகவும், மாமியாராகவும் சாமுண்டீஸ்வரி என்ற ரோலில் நடித்து வருகிறார்.

விவகாரமான பேச்சு: சீரியல்களில் புடவை கட்டிக்கொண்டு வரும், நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி இன்ஸ்டாகிராமில் படு கவர்ச்சியாக போட்டோக்களை பதிவிட்டு ரசிகர்களை உசுப்பேத்துவதை வாடிக்கையாக வைத்து வருகிறார். இதுமட்டுமில்லாமல், மிர்ச்சி பிளஸ் ஆப் இணையதளத்தில் ஒளிபரப்பான அந்தரங்கம் அன்லிமிடெட்டில் தாம்பத்தியம் சம்மந்தமான சந்தேகங்களுக்கு பதில் அளித்து வருகிறார். அந்த வகையில் தாம்பத்திய உறவில் ஆண்களுக்கு பொறுமை மிகவும் முக்கியம், பெண்ணை பார்த்தவுடன் காஞ்ச மாடு கம்பங்காட்டில், பாய்வது போல நடந்த கொள்ளக்கூடாது. அப்படி நடந்து கொள்ளும் ஆண்களை பெண்களுக்கு பிடிக்காது, பெண்களிடம் பேசி, அவர்களின் மனதை புரிந்து கொண்டு, ஆசைகளை புரிந்து கொண்டு, பின் ஆண் தனது திறமையை காட்ட வேண்டும். அப்போது தான் குடும்ப வாழ்க்கையும் நன்றாக இருக்கும் என்றார்.

நான் பட்ட கஷ்டம்: மேலும், என் முதல் திருமணத்தின் போது முதலிரவில் நான் கஷ்டப்பட்டேன், அவரிடம் பொறுமையே இல்லை. எனக்கு நடந்த அந்த அனுபவத்தை வைத்துதான், நான் உங்களுக்கு அட்வைஸ் கொடுக்கிறேன். அந்த விஷயத்தில் ஆண்களுக்கு பெருமை என்பது மிகவும் முக்கியம், அப்போது தான் ஒரு பெண்ணை மகிழ்ச்சி படுத்த முடியும் என்பதை மறந்துவிடார்கள் இது ரேஷ்மா கொடுக்கும் அட்வைஸ் என, தாம்பத்திய உறவு குறித்து வெளிப்படையாக பேசி உள்ளார். இந்த வீடியோவை பார்த்த பலர் முகத்தை சுளித்தாலும், சிலர் இவரின் அறிவுரையை கேட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X