அட்ஜெஸ்ட்மெண்ட் செய்திருந்தால் எங்கேயோ போயிருப்பேன்.. சீரியல் நடிகை ஓபன் டாக்
சென்னை: சின்னத்திரையோ, வெள்ளித்திரையோ அதில் பெண்களுக்கு அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்னை கடந்த பல வருடங்களாகவே இருந்துவருகிறது. அதுகுறித்து பலரும் மௌனம் காத்துவந்த நிலையில் கடந்த சில காலமாகவே போல்டாகவும், ஓபனாகவும் பேசிவருகின்றனர். அந்தவகையில் சீரியல் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி பேசியிருக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. ரேஷ்மா ஒரு சில படங்களிலும், ஏகப்பட்ட சீரியல்களிலும் நடித்துவருகிறார்.
சினிமா என்றாலே அது ஆண்கள் கோலோச்சும் துறை என்ற நிலைதான் பல காலமாக இருந்தது. திரைத்துறையில் பெண்களை பொறுத்தவரை அவர்களை கவர்ச்சி பொருளாக மட்டுமே பார்த்துவருகிறார்கள். அதனையும் மீறி பெண்கள் திரைத்துறையில் சாதித்துதான் வருகிறார்கள். ஆனால் அவர்கள் அப்படி சாதிப்பது ஒன்றும் அவ்வளவு எளிது இல்லை. அதற்காக அவர்கள் பல தடைகளை தாண்டி வர வேண்டும். அப்படிப்பட்ட தடைகளில் முதல் தடைதான் அட்ஜெஸ்ட்மெண்ட்.

அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்னை: காலங்காலமாக சினிமாவில் அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்னை இருந்துவருகிறது. முக்கியமாக நடிகைகளுக்கு அது நிழல் போல தொடர்ந்தே வருகிறது. அதுபற்றி அவர்கள் இத்தனை காலமும் வாய் திறக்காமல் இருந்திருக்கிறார்கள். ஆனால் காலங்கள் மாற மாற காட்சிகளும் மாறும் என்பதற்கேற்ப சமீப காலமாக அவர்கள் அட்ஜெஸ்ட்மெண்ட் பற்றி ஓபனாகவே பேசிவருகிறார்கள். அது பலரிடமும் வரவேற்பையும் பெற்றுவருகிறது.
நயன் முதல் வரலட்சுமிவரை: லேடி சூப்பர் ஸ்டார் என்று இப்போது ரசிகர்களால் கொண்டாடப்படும் நயன்தாராவுக்குக்கூட அட்ஜெஸ்ட்மெண்ட் அப்ரோச் சென்றிருப்பதாக அவரே சொல்லியிருக்கிறார். அதேபோல் சினிமாவில் பெரிய நடிகராக வலம் வந்தவர் சரத்குமார். அவரது மகள் வரலட்சுமியிடமும் அட்ஜெஸ்ட்மெண்ட் அப்ரோச் சென்றிருக்கிறது. இவர்கள் தவிர்த்து சீரியல் நடிகைகள், சினிமாவில் நடிக்கும் பல நடிகைகளுக்கு இந்த பிரச்னை நிகழ்ந்திருக்கிறது. இதனாலேயே பெண்கள் சினிமாவுக்கு வர பயப்படுகிறார்கள் என்பதே உண்மை.
ரேஷ்மா பசுபுலேட்டி பேட்டி: இந்நிலையில் சீரியல் மற்றூம் சில சினிமாக்களில் நடித்திருக்கும் ரேஷ்மா பசுபுலேட்டி அளித்த பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. அந்தப் பேட்டியில் பேசிய அவர், சமூக வலைதளத்தில் ரசிகர் ஒருவர் என்னிடம், நீங்கள் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்திருக்கிறீர்களா என்று கேட்டார். அதற்கு நானோ, 'நான் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்தது இல்லை. அதனை மட்டும் செய்திருந்தேன் என்றால் நான் எங்கேயோ போயிருப்பேன் ' என்று பதிலளித்ததாக கூறினார்.
இதுவே போதும்: மேலும் பேசிய அவர், "ஒருநாளைக்கு நான் லட்சங்களில் சம்பளமாக வாங்குகிறேன். எனக்கு இதுவே போதும். எனது உதவியாளரே மாதம் 75,000 ரூபாய் சம்பளம் வாங்குகிறார். என்னுடன் நடித்த நடிகர் ஒருவருடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தேன். இப்போது இல்லை. என்னை ஆண்ட்டி அழைப்பவர்களை பற்றி நான் கவலைப்பட்டதே இல்லை" என்றார்.
யார் இந்த ரேஷ்மா?: ரேஷ்மா பசுபுலேட்டி வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் புஷ்பா கேரக்டரில் நடித்து புகழ் பெற்றவர். அதுதவிர்த்து கோ 2, வணக்கம் டா மாப்பிள்ளை, ஹைவே, சத்ய சோதனை, பேய் மாம உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். விமல் நடித்து சூப்பர் ஹிட்டான விலங்கு வெப் சீரிஸில் கிளாமர் ரோலில் நடித்திருந்தார் ரேஷ்மா. சினிமா தவிர்த்து பாக்கியலட்சுமி, சீதாராமன் உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்துவருகிறார் அவர். அதுமட்டுமின்றி பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் போட்டியாளராகவும் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











