சாவித்ரி போல போஸ் கொடுத்த சீரியல் நடிகை… கீர்த்தி சுரேஷ்க்கே டஃப் கொடுப்பாங்க போல !
சென்னை : மாடல், தொகுப்பாளினி, நடிகை என பல திறமைகளைக் கொண்டவர் ரேஷ்மா வெங்கடேஷ். இவர் ஒரு சில விளம்பரங்களில் மாடலாக நடித்துள்ளார்.
ஆதித்யா தொலைக்காட்சியில் ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி உள்ளார்.
மேலும், ரேஷ்மா, சீரியல் கில்லர் மற்றும் மதுரை பையன் Vs சென்னை பொண்ணு என்ற வெப் தொடரிலும் நடித்துள்ளார்.

ப்ரஜின்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி இல்லத்தரசிகளின் மனங்களை வென்ற சீரியல் அன்புடன் குஷி. இதில், ப்ரஜின் முதன்மை கதாபாத்திரத்திலும் குஷி கதாபாத்திரத்தில் முதலில் மான்சி ஜோஷி நடித்து வந்தார். பின்னர் அவர் அந்த தொடரிலிருந்த வெளியேறினார்.

வெளியேறினார்
இதைடுத்து, குஷி கேரக்டரில் ரேஷ்மா வெங்கடேஷ் நடித்து வந்தார் சமீபத்தில் அவரும் அந்த தொடரிலிருந்துவெளியேறினார். தற்போது அந்த கதாபாத்திரத்தில் ஷ்ரேயா அஞ்சன் நடித்து வருகிறார். ரேஷ்மா வெங்கடேஷ் எதற்காக அந்த தொடரிலிருந்து வெளியேறினார் என்பது தெரியவில்லை.

சாவித்ரி கெட்டப்பில்
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ரேஷ்மா வெங்கடேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சாவித்ரி கெட்டப்பில் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் அந்த புகைப்படத்தில் எனது குரு சாவித்ரி அம்மா கெட்டப்பில் இருப்பதற்கு பெமைப்படுகிறேன் என்றும் சாவித்ரி அம்மாவை இந்த தலைமுறைக்கு கொண்டு வந்த நடிகை கீர்த்தி சுரேஷூக்கு நன்றி என்று தெரிவித்துள்ளார்.

பல லைக்குகள்
மேலும், வாராயோ வெண்ணிலாவே என்ற பாடலுக்கு சாவித்ரி போல முக பாவத்துடன் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். கறுப்பு வெள்ளை இருக்கும் அந்த வீடியோவில் அச்சு அசல் சாவித்ரி போலவே இருக்கிறார் ரேஷ்மா வெங்கடேஷ் இணையத்தில் வெளியான இந்த வீடியோ பல லைக்குகளை பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications











