மெசேஜை பார்த்து சந்தேகம்..தினமும் சண்டை..விவாகரத்துக்கு காரணம் இதுதான்..சீரியல் நடிகை சந்தியா வேதனை!
சென்னை: சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வம்சம் என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகை சந்தியா. ரம்யா கிருஷ்ணன், விஜயகுமார் லீடு ரோலில் நடிக்க சந்தியா இரண்டாவது ஹீரோயினாக பூமிகா என்ற கேரக்டரில் நடித்திருந்தார். கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் இவர், திருமண வாழ்க்கையில் சந்தித்த கஷ்டம் குறித்து பேசி உள்ளார்.
சீரியல் நடிகை சந்தியா: பெங்களூரை பூர்வீகமாக கொண்ட சந்தியா அத்திப் பூக்கள், சந்திரேலா போன்ற முக்கியமான சீரியல்களில் நடித்து பிரபலமானார். இவருக்கு திருமணமாகி இரண்டே ஆண்டுகளில் விவாகரத்தும் பெற்றிருக்கிறார். நிச்சயதார்த்தம் அன்றே எங்களுக்குள் சில பிரச்சனை வந்தது. ஆனால் திருமணத்திற்கு பிறகு எல்லாம் சரியாகிவிடும் என்று அவர் அம்மா சொல்ல திருமணம் செய்து கொண்டார். ஆனாலும் எந்தவொரு சந்தோஷத்தையும் அனுபவிக்காமல் இரண்டு இரண்டு ஆண்டுகளில் விவாகரத்து செய்திருக்கிறார்.

மெசேஜை பார்த்து சந்தேகம்: இந்த நிலையில், யூடியூப் சேனல் ஒன்றில் தனது திருமண வாழ்க்கை குறித்து பேசி உள்ளார். அதில், நிச்சயதார்த்தம் முடிந்ததுமே எங்களுக்குள் பிரச்சனை வர ஆரம்பித்தது. அவர் என் போனை செக் பண்ணி அதில், ஏதோ பார்க்கக்கூடாததை பார்த்துவிட்டது போல நடந்து, கொண்டார். ரசிகர் ஒருவர் சீரியல் பார்த்தேன் ரொம்ப நல்ல இருந்தது. அழகாக இருக்கீங்க, என்று சொல்லி இருந்தார். அந்த மெசேஜுக்கு நான் பதில் கூட அனுப்பவில்லை. இதைப்பார்த்துவிட்டு ஏதோ பெரிய தவறு செய்துவிட்டது சண்டை போட்டார். உடனே இதெல்லாம் நம்ப மேல இருக்குற லவ்ல பண்றாரு, கல்யாணம் ஆன சரியாகிவிடும் என்று நினைத்தேன்

தினமும் சண்டை: அதன்பிறகு 2009ம் ஆண்டு திருமணம் நடந்தது, 2010க்குள் எனக்கு எல்லாம் புரிந்துவிட்டது. அவங்க எதிர்பார்த்தது போல நான் இல்ல, நான் எதிர்பார்த்தது போல அவரு இல்லை என்கிற புரிதல் வந்ததும். இதனால் மியூச்சுவல்லாகவே இருவரும் பிரிய முடிவு செய்துவிட்டோம். பிரிவிற்கு இந்த ஒரு காரணம் என்று சொல்ல முடியாது பல காரணம் இருக்கு என்று நடிகை சந்தியா அந்த பேட்டியில் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











