போட்டோஷூட் மூலம் டைவர்சை கொண்டாடிய நடிகை..கழுவி ஊற்றிய நெட்டிசன்ஸ்!
சென்னை : சீரியல் நடிகையின் விவாகரத்து போட்டோஷூட் சோஷியல் மீடியாவில் பேசுபொருளாகி உள்ளது.
திருமண போட்டோஷூட், நிச்சயதார்த்த போட்டோஷூட், ப்ரீ வெட்டிங் போட்டோஷூட், பேபி பம்ப் போட்டோஷூட், மெஹந்தி போட்டோஷூட் என பல போட்டோஷூட்களை நாம் கேள்விப்பட்டு இருக்கிறோம்.
ஆனால், விவாகரத்து போட்டோஷூட்டை அறிமுகப்படுத்தி உள்ளார் சீரியல் நடிகை ஷாலினி.

நடிகை ஷாலினி : ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான முள்ளும் மலரும் சீரியலில் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஷாலினி. அந்த சீரியலைத் தொடர்ந்து பல ரியாலிட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆனநிலையில், ஒரு சில மாதங்களிலேயே இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர்.

ஏற்கனவே திருமணமானவர் : இதன் பின்னர் பெற்றோருடன் வசித்து வந்த ஷாலினிக்கு ரியாஸ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. முதலில் நண்பர்களாக பழகிய இவர்கள் நாட்கள் செல்ல செல்ல இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகள் இருக்கும் நிலையில், சமீபத்தில் பேட்டி அளித்த ஷாலினி, ரியாஸ் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்றும் அவர் மனைவியை விட்டு பிரிந்து இருந்தார். இந்த விஷயம் தெரிந்துதான் நான் திருமணம் செய்து கொண்டேன்.

பல பெண்களுடன் தொடர்பு : ரியாஸ் என்னை மிகவும் காதலித்தார் இதனால், என்னை நன்றாக பார்த்துக்கொள்வார் என்று நினைத்தேன். ஆனால், அவர் பலமுறை என்னை அடித்து துன்புறுத்தி இருக்கிறார், அது மட்டுமில்லை ரியாசுக்கு வேறு சில பெண்களோடு தொடர்பு இருக்கிறது. இது தெரிந்து நான் அவரைவிட்டு பிரிந்து என் மகளுடன் இருக்கிறேன் என்று கூறியிருந்தார். இதையடுத்து, ஷாலினிக்கு விவாகரத்து கிடைத்துவிட்டதை போட்டோஷூட் எடுத்து மகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.

விவாகரத்து போட்டோ ஷூட்: மேலும், அந்த போட்டோ ஷூட்டில், மோசமான திருமணத்தை விட்டு விலகுவது பரவாயில்லை. நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க தகுதியானவர். அந்த மகிழ்ச்சி ஒருபோதும் குறையாமல் இருக்க உங்கள் வாழ்க்கையை கட்டுப்படுத்தி உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் சிறந்த எதிர்காலத்தை உருவாக்க தேவையானதாக மாற்றுங்கள் என்றார். இந்த போட்டோஷூட்டைப் பார்த்து பலர் வியப்பு அடைந்தாலும், திருமண உறவு முறிந்து போவது கொண்டாடக்கூடியது அல்ல என்றும் உங்கள் மகளை நினைத்துப்பாருங்கள் என்றும் பலர் கருத்துக்களை பகிர்ந்து ஷாலினியை திட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











