நடிகையை சாக்கடை புழுவா பாக்குறாங்க.. கொந்தளித்த சாந்தி வில்லியம்ஸ்!

சென்னை: நடிகை சாந்தி வில்லியம்ஸ், டஜன் கணக்கான சீரியல்களிலும் 20க்கும் மேற்பட்ட படங்களிலும் நடித்துள்ளார். பல படங்களில் தாய் அல்லது மாமியாராக துணை வேடங்களில் நடித்துள்ள இவர் அளித்துள்ள பேட்டியில், சினிமாவில் நடிகைகளை சாக்கடை புழுவா தான் பாக்குறாங்க என்றும் அவர்களுக்கும் மனசு இருக்கு குடும்பம் இருக்கு என்பதை புரிந்து கொள்ளவேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

சாந்தி வில்லியம்ஸ்: ஹேமா கமிஷன் அறிக்கை குறித்து பேசிய சாந்தி வில்லியம்ஸ், மலையாள சினிமாவில் நிறைய பாலிடிக்ஸ் இருக்கு. அதுமட்டுமில்லாமல், பெண்களுக்கு அங்கு பாதுகாப்பு இல்லை, 16 வயசாக இருந்தாலும் 90 வயசு கிழவியாக இருந்தாலும், இரவில் கதவை தட்டும் நபர்கள் தான் அங்கு இருக்கிறார்கள். ஆனால், தமிழ் சினிமாவில் நான் இதுவரை பல படத்தில் நடித்துவிட்டேன். இங்கு யாரும் என்னை தப்பா பேசியதே இல்லை. அதற்காக நான் கையெடுத்து கும்பிடுகிறேன். இங்கு இருப்பவர்கள் எல்லாம் உணர்வு பூர்வமானவர்களாக இருக்கிறார்கள். இதையும் மீறி தவறு நடக்கிறது என்றால், அது அவர்களின் தனிப்பட்ட விஷயம் அதில் நாம் தலையிட முடியாது.

shanthi williams malayalam cinema hema commission

யோசித்து பேசுங்கள்: ஆனால், பல பெண்கள் என்னை அட்ஜெஸ்ட்மெண்டுக்கு அழைத்தார்கள் என்று பொதுஇடத்தில் சொல்லுகிறார்கள். விருப்பம் இல்லை என்றால் நேரடியாக சொல்லிவிட்டு சென்றுவிடலாம். ஆனால், அதை பொது இடத்தில் சொல்லுகிறார்கள். இப்படி சொல்லக்கூடிய பெண்கள் தான் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்கிறார்கள். இதனால், அந்த பெண்களுக்கு வாய்ப்பு இல்லாமல் போய்விடுகிறது. இதனால், சில விஷயத்தை சொல்லும் போது யோசித்துத்தான் சொல்ல வேண்டும்.

நடிகைகள் சாக்கடை புழுவா: சினிமாவில் நடிகைகளை சாக்கடை புழுவா தான் பாக்குறாங்க, அவர்களுக்கும் மனசு இருக்கு குடும்பம் இருக்கு, அவங்க மனசுவிட்டு அழவேண்டும் என்று நினைத்தால் கூட அவர்களால் அழ முடியாது. ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து ஏன் பேச வேண்டும். இவர்களின் மனதிற்குள்ளும் ரத்தம், சதைத்தான் இருக்கும் அதை ஏன் குத்தி மேலும் ரணமாக்க வேண்டும் என்ற நடிகை சாந்தி வில்லியம்ஸ் அந்த பேட்டியில் பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X