எனக்கு மட்டும் ஏன் இப்படி ஒரு கஷ்டம்.. கணவனை பறிகொடுத்த நடிகை கண்ணீர் பேட்டி!

சென்னை: சன் டிவியில் ஒளிப்பரப்பான நாதஸ்வரம்' சீரியல் மூலம் பிரபலமானவர் ஸ்ருதி சண்முகப்பிரியா. இவரது கணவர் கடந்த ஆண்டு மாரடைப்பால் உயிரிழந்த நிலையில், பல மாதங்களாக வெளியில் தலைக்காட்டாமல் இருந்த இவர் கணவர் மறைவு குறித்து கண்கலங்கி பேட்டி அளித்துள்ளார்.

சன் தொலைக்காட்சியில் 2010ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரை ஒளிபரப்பான இந்த தொடரில் ராகினி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஸ்ருதி சண்முகப்பிரியா. இவரின் கேரக்டர் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பினை பெற்றது. நாதஸ்வரம் சீரியலில் கோபியின் நான்கு தங்கைகளில் ஒருவராக நடித்திருந்தார்.

Serial actress Sruthi Shanmuga Priya emotional interview

இந்த தொடருக்கு கிடைத்த வரவேற்பினை தொடர்ந்து வாணி ராணி, கல்யாண பரிசு, பொன்னூஞ்சல், பொம்முக்குட்டி அம்மாவுக்கு, பாரதி கண்ணம்மா உள்ளிட்ட சீரியல்களில் நடித்து பிரபலமானார். கடந்தாண்டு இவருக்கும், அரவிந்த் சேகர் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பின் தனது கணவர் அரவிந்துடன் எடுத்த புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ் வீடியோக்களை அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருவார் ஸ்ருதி. இதையடுத்து, அரவிந்த் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்ருதி சண்முகப்பிரியா: இந்நிலையில், யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள ஸ்ருதி சண்முகப்பிரியா, அதில், நீண்ட இடைவெளிக்குப் பின், என் கணவரின் மரணத்துக்குப் பின் நான் ஒரு நேர்காணலில் பங்கேற்றுள்ளேன். நான் என் கணவர் அரவிந்த் இல்லை என நினைக்கவே இல்லை. என்னை சுற்றியுள்ளவர்களுக்கு நான் எப்படி இருக்கிறேன் என்பது தெரியும். அரவிந்த் மேல் இருக்கும் காதல் அப்ப இருந்ததை விட இப்ப அதிகமாகவே உள்ளது. நான் எங்கு சென்றாலும் அவர் என்னுடன் இருப்பதாகவே உணர்கிறேன்.

ரொம்ப கஷ்டம்: அரவிந்தின் மரணத்தை நிறைய பேர் ஆராய்ச்சி செய்தார்கள், மரணத்தை ஏன் ஆராய்ச்சி செய்ய வேண்டும். அந்த விஷயம் எனக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது. அதனால் தான் நான், கணவர் இறந்த சடங்கு முடிந்ததும், இன்ஸ்டாவில் தவறான தகவலை வெளியிடாதீர்கள் என்று வீடியோ வெளியிட்டேன். அது ரொம்ப கடினமாக இருந்தது. அவரின் மரணத்துக்கு என்ன காரணம் என தெரிந்து என்ன நடக்கப்போகிறது.

எனக்கு ஏன் இப்படி: அதனை எல்லாம் வெளியே காட்ட எனக்கு விருப்பமில்லை. ஒரு நாள் இரவு அரவிந்தின் புகைப்படத்தைப்பார்த்து எனக்கு மட்டும் வாழ்க்கையில் இப்படி எல்லாம் ஏன் நடந்தது என்று நினைத்துப் பார்த்து கோடி முறை அழுது இருக்கிறேன் என்று ஸ்ருதி சண்முகப்பிரியா அந்த பேட்டியில் உருக்கமுடன் பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X