மார்பக புற்றுநோய்.. சிகிச்சைக்கு பணம் இல்லை.. பரிதாபமாக உயிரிழந்த சீரியல் நடிகை!
சென்னை: பிரபல சீரியல் நடிகை வாஹினி கொடிய நோயான மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சைக்கு போதிய பணம் இல்லாததால், மருத்துவமனையில் உயிரிழந்தார். இவரது மறைவு பலரை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகை வாஹினி என்கிற பத்மக்கா அவருக்கு வயது 48. தொலைக்காட்சி தொடர்களில் வில்லியாக நடித்து பிரபலமானவர் தான் நடிகை வாஹினி. தெலுங்கு மற்றும் தமிழ் சீரியல்களில் நடித்து உள்ள இவர், சீரியல் மட்டுமில்லாமல் ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நடிகை வாஹினி மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரிந்து அதற்காக தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். நோயின் தாக்கம் அதிகரித்ததை அடுத்து அவரின் உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டன.

மார்ப்பக புற்றுநோய்: வாஹினி மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்த வாஹினிக்கு அறுவை , கீமோ தரப்பி என பல சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்ததால் மருத்துவ செலவு அதிகமாகி உள்ளது. மேலும் சிகிச்சை அளிக்க இன்னும் 35 லட்சம் ரூபாய் செலவு ஆகும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், அவருக்கு உதவ யாரும் முன் வராததால், அதை அவரது குடும்பத்தினரால் சமாளிக்க முடியவில்லை. கராத்தே கல்யாணியின் சமூக ஊடக வேண்டுகோள் மூலம் ஓரளவு நிதி திரட்டப்பட்டாலும், அது போதுமானதாக இல்லாததால் வீட்டிற்கு அனுப்பப்பட்ட வாஹினி கடந்த புதன்கிழமை உயிரிழந்தார். இளம் வயதிலேயே அவரது மரணம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மிகவும் மோசமானது: வாஹினியை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என போராடிய நடிகை கராத்தே கல்யாணி ஒருக்கமான பதிவு ஒன்றை ஷேர் செய்துள்ளார். அதில், 'உன்னைக் காப்பாற்ற நான் கடுமையாக முயற்சி செய்தேன், வாஹினி. அவள் தனது சொந்த ஊரில் காலமானாள். அவரது ஆன்மா சாந்தியடையட்டும். நாங்கள் உன்னை இழந்துவிட்டோம். அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள் என பதிவிட்டுள்ளார். சிகிச்சைக்கு பணம் இல்லாமல் நடிகை உயிரிழந்தது பலரை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. மருத்துவ செலவுக்கு பணமில்லாமல் உயிரிழப்பது மிகவும் மோசமான விஷயம் பலர் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











