ஓ மை கடவுளே… படத்தில் இணைந்த தெய்வமகள் வாணி போஜன்

சென்னை: அசோக் செல்வன் மற்றும் ரித்திகா சிங் இணைந்து நடிக்கும் ஓ மை கடவுளே திரைப்படத்தில் தற்போது, சின்னத்திரை நாயகியான வாணி போஜன் இணைந்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். வாணி போஜன் தற்போது தெலுங்கில் மீக்கு மாத்ரமே செப்தா படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்திற்கு பிறகு இப்படத்தில் நடிக்க ஒப்பந்தாமாகியுள்ளார்.

ராட்சசன் பட தயாரிப்பாளர் ஜி.டில்லி பாபு தயாரிப்பில், தற்போது ஓ மை கடவுளே எனும் படம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தில் அசோக் செல்வன் கதாநாயகனாக நடிக்கிறார் அவருக்கு ஜோடியாக இறுதிச்சுற்று நாயகி ரித்திகா சிங் நடிக்கிறார்.

ஓ மை கடவுளே பட தயாரிப்பு நிறுவனமான ஆக்ஸஸ், தற்போது புது தகவலை வெளியிட்டுள்ளது. அதாவது, சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் சீரியல் மூலமாக அனைத்து தமிழ் குடும்பத்திலும் உறுப்பினராக இணைந்து விட்ட, ரசிகர்களால் சின்னத்திரை நயன்தாரா என்று பிரியமாக அழைக்கப்படும் வாணி போஜன் இப்படத்தில் இணைந்துள்ளார்.

வாணி போஜன்

வாணி போஜன்

தற்போது வாணி போஜன் டிவி சீரியல்களில் நடிப்பதை முழுவதுமாக நிறுத்தி விட்டு, முழுவதுமாக சினிமாவில் கவனம் செலுத்த தொடங்கிவிட்டார். அவ்வப்போது பல்வேறு சினிமா மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் விருந்தினராக கலந்து கொண்ட வாணி போஜன், தெலுங்கில் மீக்கு மாத்ரமே செப்தா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தயாரிப்பது தெலுங்கு முன்னணி ஹீரோவான விஜய் தேவரகொண்டா.

ஓ மை கடவுளே

ஓ மை கடவுளே

இந்த படத்திற்கு பிறகு வாணி போஜன் ஓ மை கடவுளே படத்தில் நடிக்கவுள்ளார். மேலும், இப்படத்தில் பெல்லி சூப்லு பட இயக்குநர் தருண் பாஸ்கர் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதோடு முக்கிய வேடங்களில் அபினவ், நவீன் ஜார்ஜ் தாமஸ், அனுஷயா பரத்வாஜ், அவந்திகா மிஸ்ரா ஆகியோர் நடிக்கின்றனர்.

நாயகியாக வாணி போஜன்

நாயகியாக வாணி போஜன்

இந்த படத்தை இயக்கி வருகிறார் ஷமீர் சுல்தான். சிவக்குமார் இசையமைக்கும் இப்படத்திற்கு மதன் குணதேவா ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்ரீஜித் சாரங் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாக நல்ல வரவேற்பை பெற்றது. வரும் நவம்பர் 1ஆம் தேதி படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் வாணி போஜன் இந்தப்படத்தில் மற்றொரு நாயகியாக இணைந்துள்ளார்.

அசோக் செல்வன்

அசோக் செல்வன்

இந்தப் படத்தின் நாயகன் அசோக் செல்வன் ஏற்கனவே பில்லா 2, தெகிடி, சூது கவ்வும் படத்தில் நடித்துள்ளார். அதற்கு பிறகு நிஜமெல்லாம் காதல், ரெட் ரம், பிக்பாஸ் ஜனனியுடன் வேழம், மோகன்லால் நடிக்கும் மரைக்கார்:அரபிக்கடலிண்டே சிம்ஹாம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். தற்போது, ஓ மை கடவுளே படத்தில் நடித்து வருகிறார்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X