ஏம்மா படுக்க வேற இடம் கிடைக்கலையா .. சீரியல் நடிகையை கலாய்த்த ரசிகர்கள் !
சென்னை : கார் டிக்கியில் படுத்தபடி போட்டோ ஒன்றை வெளியிட்டு உள்ளார் சித்து. இதனை பார்த்த நெட்டிசன்ஸ் உனக்கு வேற இடமே கிடைக்கலையா என்று கலாய்த்து உள்ளனர்.
Recommended Video
மக்கள் தொலைக்காட்சியில் சட்டம் சொல்வது என்ன என்ற நிகழ்ச்சியின் மூலம் வி ஜேவாக பிரபலமான சித்ரா. பல முன்னணி தொலைக்காட்சிகளில் விஜேவாகவும் ,சீரியல்களிலும் நடித்து வருகிறார் .
தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியல் மூலம் மக்கள் மனதில் முல்லையாக இடம்பிடித்து உள்ளார்.

முல்லையாக மக்கள் மனதில் இடம்
மக்கள் தொலைக்காட்சியில் "சட்டம் சொல்வது என்ன "என்ற நிகழ்ச்சியில் வி.ஜேவாக தனது திரைப்பயணத்தை தொடங்கிய சித்து,சன் டிவியின் ஹிட் தொடரான சின்ன பாப்பா பெரிய பாப்பா, விஜய் டிவியின் பிரபல சீரியல்லான சரவணன் மீனாட்சி சீசன்2 மற்றும் சீசன் 3 போன்றவற்றில் நடித்தார். தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற தொடரில் முல்லையாக மக்கள் மனதில் நீங்க இடம் பிடித்துள்ளார் .

ஹிட் சீரியல் நடிகை
முல்லையாக இல்லத்தரசிகள் மனதில் மட்டும் இல்லாமல் இளசுகளின் மனதையும் கவர்ந்தார். குடும்பப்பாங்கான மனைவியாக நடிக்கும் இவரின் ட்ரெஸ்ஸிங் சென்ஸ் அழகாகவே இருக்கின்றது. சீரியல் நடிகைகளில் சிலர் மட்டுமே பெயர் சொல்லும் அளவிற்கு ஹிட் தருகின்றனர் அந்த வகையில் சித்துவும் பல ஹிட் சீரியல்கள் கொடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது .

போட்டோஷூட்டில் பிஸி
இப்போது ஊரடங்கு சமயம் என்பதால் படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்த பட்ட நிலையில் ,வீட்டில் இருக்கும் முல்லை சமூகவலைத்தளங்களில் பிஸியாகவே இருக்கிறார். அன்றாடம் வித விதமான புகைப்படங்களை எடுத்து வெளியிட்டுக் கொண்டு இருக்கிறார். அதனை பார்க்கும் ரசிகர்களும் பல பாசிட்டிவ் கமெண்ட்ஸ் கொடுத்துக்கொண்டே இருக்கின்றனர்.

பைக் மீது படுத்துக்கொண்டு போஸ்
வெப் தொடர்கள், படங்கள் என பார்த்துக்கொண்டு இருந்த இளசுகளை சீரியல் பார்க்க வைத்த ஜோடி இவர்கள் தான். பொதுவாகவே சீரியல்கள் என்றால் இல்லத்தரசிகள் தான் விரும்பி பார்ப்பார்கள், ஆனால் அதையும் தாண்டி பலரை இந்த சீரியலை பார்க்க வைத்தவர் தான் முல்லை. சமீபத்தில் ஹார்லே டேவிட்சன் பைக் மீது படுத்துக்கொண்டும் சாய்ந்துகொண்டும் இருந்த புகைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது .

கார் டிக்கியில் விதவித போஸ்
தற்போது இவர் வெளியிட்ட புகைப்படத்தில் கார் டிக்கியில் படுத்து கொண்டு விதவித போஸ் கொடுத்திருக்கிறார். இந்த புகைப்படத்தை பார்த்த பலர் உனக்கு வேற இடமே கிடைக்கலையா என்று நக்கல் அடித்துள்ளனர். இதனை கண்டுகொள்ளாத சித்து மறுபடியும் வேறு மாதிரியான போசில் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். அவர் வெளியிட்டு உள்ள புகைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது . சினிமா நடிகைகளுக்கு இணையாக போட்டோஷூட்ஸ் எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளிட்டு வைரலாக்கி உள்ளனர் சீரியல் நடிகைகள்.


Click it and Unblock the Notifications











