Actor Adade Manohar: நாடக -சீரியல் நடிகர் அடடே மனோகர் காலமானார்.. பிரபலங்கள் இரங்கல்!

சென்னை: பழம்பெரும் நாடக, டிவி நடிகர் அடடே மனோகர் வயது மூப்பு காரணமாக காலமானார். சின்னத்திரை மற்றும் நாடகங்களில் நடிகராக மட்டுமில்லாமல் கதாசிரியராகவும் இவர் செயல்பட்டுள்ளார். சென்னை குமரன் சாவடியில் வசித்துவந்த அடடே மனோகர் நேற்றிரவு உடல்நலக்குறைவு காரணமாக காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். தனியார் நிறுவனத்தில் பொறுப்பான பதவியில் பணியாற்றிக் கொண்டே, நாடகங்கள், டிவி சீரியல்களில் பணியாற்றி வந்தார். தொடர்ந்து 3500க்கும் மேற்பட்ட மேடை நாடகங்களில் நடித்துள்ளார்.

ஏராளமான டிவி, ரேடியோ நாடகங்களில் முக்கியமான கேரக்டர்களில் நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ள அடடே மனோகர். சில நாடகங்களை அவரே எழுதி இயக்கியுள்ளார். சினிமாவிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். எஸ்வி சேகர், கிரேசி மோகன் உள்ளிட்டவர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ள அடடே மனோகர், பெரும்பாலும் நகைச்சுவை கேரக்டர்களிலேயே அதிகமாக நடித்துள்ளார். சினிமாவிலும் இதையே பின்பற்றினார். சின்ன மாப்பிள்ளை பெரிய மாப்பிள்ளை, ரமணி வெர்சஸ் ரமணி உள்ளிட்ட பல டிவி சீரியல்களில் இவர் நடித்துள்ளார்

Serial and Stage Actor Adade Manohar passed away

நடிகர் அடடே மனோகர்: எஸ்வி சேகர், மறைந்த கிரேசி மோகன் போன்றவர்கள் ஏராளமான நாடகங்களை ரசிகர்களுக்காக கொடுத்துள்ளனர். இவர்களுடன் இணைந்து நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்த அடடே மனோகர் வயது மூப்பு காரணமாக நேற்றிரவு சென்னையில் காலமானார். சென்னை குமரன் சாவடியில் வசித்துவந்த அவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அவர் காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். தனியார் நிறுவனத்தில் பெரிய பொறுப்பில் இருந்தபோதிலும், மேடை நாடகங்களில் அதிகமான ஆர்வம் கொண்டு, அவர் செயல்பட்டு வந்தார்.

3500க்கும் மேற்பட்ட நாடகங்கள்: வயதான நிலையிலும் தொடர்ந்து மேடை நாடகங்களில் நடித்துவந்த அடடே மனோகர், 3500க்கும் மேற்பட்ட மேடை நாடகங்களில் நடித்துள்ளார். இது மட்டுமில்லாமல் டிவி சீரியல்கள், திரைப்படங்களிலும் நடித்துள்ளார். பெரும்பாலும் காமெடிக்கு முக்கியத்துவம் தரப்படும் கேரக்டர்களில் இவர் நடித்துள்ளார். ரேடியோ நாடகங்களிலும் மிகச்சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ள அடடே மனோகர், தானே எழுதி நாடகங்களை இயக்கியும் உள்ளார். சினிமாவில் 35 படங்களில் காமெடி கேரக்டர்களில் நடித்துள்ளார். தன்னுடைய இயல்பான நடிப்பால் சின்னத்திரையிலும் பெரியத்திரையிலும் ஏராளமான ரசிகர்களை பெற்றவர் அடடே மனோகர்.

சீரியல் நடிகர்: சின்னத்திரையில் சின்ன மாப்பிள்ளை பெரிய மாப்பிள்ளை, கையளவு மனசு, பிளைட் 172, நிம்மதி உங்கள் சாய்ஸ், ரமணி வெர்சஸ் ரமணி, பிரேமி, ரயில் சிநேகம், வண்ணக்கோலங்கள், உள்ளிட்ட 15 சீரியல்களில் இவர் முக்கியமான கேரக்டர்களில் நடித்துள்ளார். மேடையிலேயே பாடி நடிப்பது இவரது தனிச்சிறப்பாக இருந்தது. அடடே மனோகர் என்ற பெயரில் டிடியில் கடந்த 1986 மற்றும் 1993ம் ஆண்டுகளில் நாடகம் வெளியாகி வரவேற்பை பெற்றது. சினிமாவில் வடிவேலு, விவேக் உள்ளிட்ட முன்னணி காமெடி நடிகர்களுடன் இணைந்து அடடே மனோகர் நடித்துள்ளார். தற்போது இவரது மறைவுக்கு திரைப்பிரபலங்கள் நேரிலும் சமூக வலைதளங்களிலும் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

அடடே மனோகர் காலமானார்: மனோகரின் மனைவி கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு காலமானார். இவருக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். அவர்களுடன் வசித்துவந்த மனோகர், கடந்த சில தினங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றிரவு காலமானார். இந்நிலையில் குமரன் சாவடியில் அஞ்சலிக்காக இவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இறுதிச்சடங்குகள் திட்டமிடப்பட்டுள்ளன. நடிப்பின்மீது கொண்ட ஆர்வம் காரணமாக ஓயாமல் நடித்துவந்த அடடே மனோகர் மறைவு குறித்து அவரது ரசிகர்களும் சமூக வலைதளங்களில் வருத்தத்தை பதிவு செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X