8 வருஷ கள்ளக்காதல்.. ஹீரோயின் ஆசைக்காட்டிய ரவி.. தொடர்ந்து தொல்லை.. நடிகையின் பகீர் வாக்குமூலம்!

சென்னை: துணை நடிகர் ரவியை கொன்றது ஏன் என சீரியல் நடிகை தேவி போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

சென்னை கொளத்தூரைச் சேர்ந்த சீரியல் நடிகையான தேவி, சினிமாவிலும் துணை நடிகையாக இருந்து வருகிறார். இந்நிலையில் தன்னுடைய கள்ளக்காதலனை கணவர் மற்றும் சகோதரியுடன் சேர்ந்து அடித்து கொலை செய்தார்.

இதனை தொடர்ந்து காவல் நிலையத்தில் சரணடைந்த தேவி மற்றும் அவரது கணவர், சகோதரி, சகோதரியின் கணவர் என 4 பேரையும் போலீசார் நேற்று கைது செய்தனர்.

8 ஆண்டுகளுக்கு முன்பு

8 ஆண்டுகளுக்கு முன்பு

இதைத்தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்களை கூறியிருக்கிறார் தேவி. அதன்படி தேவிக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு ரவியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இயக்குநராக முயற்சி

இயக்குநராக முயற்சி

இருவரும் ஜேகே ரித்திஷ் நடித்து வெளியான நாயகன் படத்தில் நடித்துள்ளனர். இதனால் இருவருக்கும் இடையிலான பழக்கம் அதிகரித்துள்ளது. துணை நடிகரான ரவி, சினிமாவில் இயக்குநராக முயற்சி செய்துவந்துள்ளார்.

நம்பிய ஹீரோயின்

நம்பிய ஹீரோயின்

தான் இயக்கும் படத்தில் தேவியை ஹீரோயினாக போடுவதாகவும் கூறியிருக்கிறார் ரவி. இதனை நம்பி அவருக்கு நெருக்கமாக பழகியுள்ளார் தேவி.

மதுப்பழக்கம்

மதுப்பழக்கம்

இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. ஆனால் ரவிக்கு வாய்ப்புகள் எதுவும் கிடைக்காததால் அவர் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார். அவ்வப்போது குடித்துவிட்டு தேவியின் வீட்டுக்கு வந்துள்ளார்.

தொடர்ந்து தொல்லை

தொடர்ந்து தொல்லை

ரவியுடனான பழக்கத்தை கைவிடுமாறு தேவியின் கணவர் சங்கர் கண்டிக்கவே, குழந்தைகளை எதிர்காலத்தை எண்ணி அவரை விட்டு விலகியிருக்கிறார் தேவி. ஆனாலும் போனில் தொடர்ந்து அவருக்கு தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

வீட்டை மாற்றிய தேவி

வீட்டை மாற்றிய தேவி

இதனால் போன் நம்பரை மாற்றியிருக்கிறார் தேவி. இதனை பொறுத்துக்கொள்ள முடியாத ரவி அடிக்கடி தேவியின் வீட்டிற்கு வர தொடங்கியிருக்கிறார். இதனால் யாருக்கும் சொல்லாமல் திடீரென வீட்டை கொளத்தூரிலிருந்து கொரட்டூருக்கு மாற்றியிருக்கிறார்.

ஆபாச பேச்சு..

ஆபாச பேச்சு..

இதனால் பழைய வீட்டிற்கு சென்று பார்த்த ரவி, அங்கு தேவி இல்லாததால் தேவியின் சகோதரி வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு சென்று ஆபாசமாக பேசி வம்பிழுத்துள்ளார் ரவி.

மகளை கொல்ல முயற்சி

மகளை கொல்ல முயற்சி

இந்த தகவலை லட்சுமி போனில் தேவியிடம் தெரிவிக்க, தேவி தனது கணவருடன் அங்கு சென்றுள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் தங்கையின் மகளை கொலை செய்ய முயன்றாராம் ரவி.

அடங்காத ரவி

அடங்காத ரவி

இதனால் ரவியை உருட்டுக்கட்டையால் அடித்து மகளை மீட்டுள்ளனர். அதன் பிறகும் அடங்காத ரவி, தேவியையும் அவரது தங்கையையும் ஆபாசமாக பேசியதோடு தவறாக நடக்க முயன்றுள்ளார்.

தலையில் காயம்

தலையில் காயம்

இதனால் கடுப்பான தேவி மற்றும் அவரது குடும்பத்தினர் மீண்டும் உருட்டுக்கட்டையால் தாக்கியுள்ளனர். ஏற்கனவே மதுபோதையில் இருந்த ரவி, தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

கள்ள உறவால் விபரீதம்

கள்ள உறவால் விபரீதம்

இதனை போலீசாரிடன் தெரிவித்த தேவி, தன்னுடைய தவறான உறவால் தனது சகோதரியின் குடும்பமும் நடுத்தெருவுக்கு வந்துவிட்டதாக தெரிவித்து கதறியிருக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை அண்ணா நகரில் துணை நடிகை ஒருவரின் கணவர் கள்ளக்காதலால் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X