சின்னத்திரை பிரபல நடிகைகளின் புத்தாண்டு வாழ்த்துக்கள்
சென்னை : புத்தாண்டு இன்று பிறந்ததையோட்டி பல பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதில் சின்னத்திரை நட்சத்திரங்கள் தங்களது வாழ்த்துக்களையும் மகிழ்ச்சியையும் தெரிவித்து வருகின்றனர்.
நட்சத்திரா நாகேஷ்
தன் நடிப்பின் மூலம் தமிழ் சீரியல் ரசிகர்களை கவர்ந்தவர் நட்சத்திரா நாகேஷ். பிரபல தனியார் தொலைக்காட்சியில் வரும் பிரபலமான சீரியலில் பாக்யலஷ்மி என்ற கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் உள்ளங்களை கவர்ந்தவர். தன் ரசிகர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி கலந்த புத்தாண்டு வாழ்த்து கூறியுள்ளார்.

நட்சத்திரா நாகேஷ்
தன் நடிப்பின் மூலம் தமிழ் சீரியல் ரசிகர்களை கவர்ந்தவர் நட்சத்திரா நாகேஷ். பிரபல தனியார் தொலைக்காட்சியில் வரும் பிரபலமான சீரியலில் பாக்யலஷ்மி என்ற கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் உள்ளங்களை கவர்ந்தவர். தன் ரசிகர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி கலந்த புத்தாண்டு வாழ்த்து கூறியுள்ளார்.

சங்கீதா
சின்னத்திரை ஆனாலும் சரி வெள்ளித்திரை ஆனாலும் சரி வில்லன் நடிகர் மற்றும் நடிகைகள் குறைவுதான். சின்னத்திரை வில்லி சங்கீதா. சங்கீதா என்றால் கூட எல்லோருக்கும் தெரியாது, பூர்னா என்றால் அனைவரும் தெரியும் அப்படி பெயர் வாங்கி கொடுத்தது அந்த கதாபாத்திரம். சின்னத்திரையில் வில்லியாக கலக்கி வரும் சங்கீதா அவர்கள் பிறந்துள்ள 2020 அனைத்து இன்பங்களை தரும் ஆண்டாக அமைய வாழ்த்துவதாக தெரிவித்துள்ளார்.

ஸ்ருதி ராஜ்
சின்னத்திரையில் பல வருடங்களாக ஹீரோயின் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ஸ்ருதி. தனது ஒற்றை மெகா தொடர் மூலம் தமிழ் சின்னத்திரை ரசிகர்கள் மனதில் இடம் பெற்றவர். தென்றலில் வரும் துளசியின் வாசம் இன்றளவும் விசுகிறது.

தொகுப்பாளர் பார்வதி
தனது உச்சரிப்பால் மக்களிடையே பிரபலமடைந்தவர் தான் பார்வதி. தொகுப்பாளினியாக பிரபல தனியார் தொலைக்காட்சியில் இருந்து வருகிறார். இவரின் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் தனது கேள்வி மற்றும் குறும்புதனத்தால் தனக்கென ஒரு இடம் பிடித்தார் பார்வதி. என் ரசிகர்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்து கூறி அனைத்து செல்வங்களும் அனைவரும் பெற மனமாற வாழ்த்துவதாக தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











