twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கேஜிஎஃப் படம் பார்த்து 4 கொலை..வன்முறைப்படங்கள் உருவாக்கும் பாதிப்புகள்..நிழலும்..நிஜமும் ஒன்றா?

    |

    கேஜிஎஃப் படத்தைப்பார்த்து தொடர் கொலைகள் செய்த இளைஞர் கைதானார். கேஜிஎஃப் பாணியில் சுத்தியலால் அடித்து கொலை செய்து கைதாகியுள்ளார்.

    ஒருபுறம் போதைப்பொருட்களுக்கு எதிராக அரசு நிர்வாகம் போராடும்போது போதைக்கலாச்சாரத்தை ஆதரிக்கும் திரைப்படங்கள் இளம் தலைமுறையினர் மீது ஆதிக்கம் செலுத்துகிறது.

    வேகமாக பைக் ஓட்டும் ஹீரோவை மனதில் வைத்து தாங்களும் வேகமாக மோட்டார் சைக்கிளை போக்குவரத்து நெரிசல் மிக்க சாலையில் ஓட்டி விபத்தில் சிக்கும் இளம் தலைமுறையினர் உள்ளனர்.

    பாய்காட் பிரசாரத்தைக் கடந்து பிரம்மாஸ்திரம் வெற்றி? பரிதாபமான நிலையில் அமீர்கான், அக்சய்குமார்பாய்காட் பிரசாரத்தைக் கடந்து பிரம்மாஸ்திரம் வெற்றி? பரிதாபமான நிலையில் அமீர்கான், அக்சய்குமார்

    சினிமாவை சினிமாவாக பார்க்க வேண்டுமா?

    சினிமாவை சினிமாவாக பார்க்க வேண்டுமா?

    வன்முறை, மோசமான சினிமா காட்சிகளால் வரும் பாதிப்பு குறித்து யாராவது பேசினாலோ எழுதினாலோ சினிமாவை சினிமாவாக பாருங்கள், ஏன் சீரியசாக எடுத்துக்கொள்கிறீர்கள் என்று சிலர் ஓடி வருவார்கள். ஆனால் சினிமா புகழை வைத்து அரசியலுக்கு வருபவர்களை சினிமாவை சினிமாவாக பார்ப்போம் ஓட்டுப்போட மாட்டோம் என்று சொன்னால் அந்த வாதத்தை ஏற்பார்களா? சினிமாவின் தாக்கம் மக்கள் மனதில் குறிப்பாக இளம்தலைமுறையினர் மத்தில் கண்டிப்பாக உள்ளது என்பது நாம் சொல்லவில்லை, உளவியல் நிபுணர்கள், குழந்தைகள் நல நிபுணர்கள், சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

    மத்திய பிரதேசத்தில் கேஜிஎஃப் படத்தை பார்த்து தொடர் கொலை செய்த இளைஞர்

    மத்திய பிரதேசத்தில் கேஜிஎஃப் படத்தை பார்த்து தொடர் கொலை செய்த இளைஞர்

    இதற்கு சமீபத்திய உதாரணமாக மிகப்பெரிய சம்பவம் மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நடந்துள்ளது. போபாலில் சாலையில் உறங்கும் காவலாளிகள் தொடர்ந்து தலையில் கொடூரமாக தாக்கப்பட்டு கொலைச் செய்யப்பட்டு கிடந்தனர். இதையடுத்து விசாரணை நடத்திய போலீஸார் சிவபிரசாத் என்கிற 19 வயது இளைஞரை கைது செய்துள்ளனர். தொடர் கொலையாளி 19 வயது சிவபிரசாத் கொலை செய்வது சிசிடிவி காட்சியில் பதிவாகியிருந்ததை வைத்து தேடியதில், கொலைச் செய்யப்பட்டவரின் செல்போனை எடுத்துச் சென்று வைத்திருந்ததன் மூலம் டிராக் செய்ததில் சிக்கினார். தான் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்படும்போது கொஞ்சம் கூட குற்ற உணர்வு இல்லாமல் இரட்டைவிரலை காட்டி மகிழ்ச்சியுடன் சென்றார் சிவபிரசாத்.

    டான் ஆக நினைத்ததால் கொன்றதாக வாக்கு மூலம்

    டான் ஆக நினைத்ததால் கொன்றதாக வாக்கு மூலம்

    போலீஸ் விசாரணயில் ராக்கிங் ஸ்டார் யஷ் நடித்த கேஜிஎஃப் படத்தைப் பார்த்த சிவபிரசாத் தானும் டான் ஆகிவிட வேண்டும் என்று நினைத்ததாகவும், டான் போல கொலை செய்தால் பெரிய டான் ஆகி கைநிறைய சம்பாதிக்கலாம் என்று நினைத்து முதற்கட்டமாக தனியார் பாது காவலர்களை குறி வைத்து கொலை செய்ததாக தெரிவித்துள்ளார். அடுத்து போலீஸாரை அடித்து கொலை செய்யலாம் என நினைத்துள்ளதாக துளி கூட குற்ற உணர்ச்சி இல்லாமல் அவர் தெரிவித்துள்ளார். கொலை செய்த ஹீரோ தண்டனை எதுவும் இல்லாமல் பலராலும் போற்றப்படுவதும், பெரிய அளவில் வசதியாக இருப்பதும், மற்றவர்கள் ஹீரோவை பார்த்து அஞ்சி நடுங்குவதையும் யதார்த்த வாழ்க்கை நிலை உணராமல் எடுத்துக்கொண்டது அவர் மனதில் குரூர எண்ணம் தோன்ற காரணமாக அமைந்துள்ளது.

    சினிமா ஃபார்முலா ரசிக மனப்பான்மையில் பின்பற்றப்படுகிறது

    சினிமா ஃபார்முலா ரசிக மனப்பான்மையில் பின்பற்றப்படுகிறது

    தொடர்ந்து ஒரு பெண்ணை துரத்தினால் கடைசியில் அவள் காதலிப்பாள் என்பது சினிமா ஃபார்முலா. நண்பர்கள் பேசினாலே டாஸ்மாக் பாரில் அமர்ந்துதான் பேச வேண்டும். ஹீரோ எப்போதும் சிகரெட் பிடித்துக்கொண்டே இருக்கணும், சாகசம் செய்யும்போது கண்டிப்பாக சிகரெட் பிடிக்கணும் (சிறுவயதில் சிகாரெட் குடிக்க பழகி தற்போது விட முடியாத பலரும் சொன்ன காரணம் சினிமாவை பார்த்து என்பதே), உடனடியாக யாருடனும் சண்டை போட்டு தாக்க வேண்டும், வயதானவர்களை மரியாதை இல்லாமல் பேசவேண்டும் போன்ற காட்சிகளும் சினிமாவில் ஃபார்முலாவாக உள்ளது.

    உளவியல் நிபுணர்கள் எச்சரிக்கை

    உளவியல் நிபுணர்கள் எச்சரிக்கை

    நாங்க நல்லதை எடுக்கிறோம் நீங்க அதை ஃபாலோ பண்ணாமல் இதை மட்டும் எடுத்துக்கொண்டால் நாங்களா பொறுப்பு என்கிற வாதமும் வைக்கப்படுகிறது. ஆனால் எப்போது நல்ல விஷயங்களை விட இதுபோன்ற விஷயங்கள் தான் இளம் தலைமுறையினரை அதிகம் ஈர்க்கிறது என்கின்றனர் உளவியல் நிபுணர்கள். படம் பார்த்து கொலை செய்வது, அந்த பாணியில் கொலை செய்வது இன்று நேற்றல்ல ஆனால் சமீப படங்களில் குற்றம் சாகசமாக காட்டப்படுவதும், சட்டம் சடங்குக்கூட இல்லாமல் இருப்பதும் சட்ட அறிவு இல்லாத இளம் தலைமுறையினரை குற்றம் செய்தால் தப்பிக்கலாம் என்கிற தவறான புரிதலை நோக்கி நகர்த்துகிறது என்கின்றனர் காவல்துறையினர்.

    ஹீரோவைப்பார்த்து பைக் ரேஸில் ஈடுபட்டு சிக்கும் இளைஞர்கள்

    ஹீரோவைப்பார்த்து பைக் ரேஸில் ஈடுபட்டு சிக்கும் இளைஞர்கள்

    பைக் ரேஸ் செய்யும் ஹீரோவும் சென்னை நகருக்குள் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் பைக்கில் ஜர்கின் அணிந்து சாகச செயலில் ஈடுபடுவதும், மருந்துக்கூட போலீஸார் இல்லாததும், அவர்கள் அனைவரும் கஞ்சா, ஹெராயின் போன்ற போதைப்பொருட்களை விற்பதாகவும் ஒரு முன்னணி நடிகரின் படத்தில் காட்சி. ரேசுக்கென்றே பெயர் போன் அவர் சாலையில் 750 சிசி பைக்கில் சாகசம் செய்வதை பார்த்து தினமும் சென்னை சாலைகளில் மோட்டார் பைக் சாகசம் செய்யும் இளைஞர்களால் பொதுமக்கள் விபத்தில் சிக்கி காயமடையும், உயிரிழக்கும் அபாயமும் நடக்கிறது. நேற்று முன் தினம் அண்ணாசாலையில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.

    படமும், நிஜ வாழ்க்கையும் ஒரு ஒப்பீடு சட்டம் சொல்வதென்ன?

    படமும், நிஜ வாழ்க்கையும் ஒரு ஒப்பீடு சட்டம் சொல்வதென்ன?

    * சாதாரணமாக எதுவும் அறியாத ஹீரோ திடீரென துப்பாக்கியை எடுத்து சுடுவார். நிஜத்தில் துப்பாக்கியை கையாள பயிற்சி வேண்டும், இல்லாவிட்டால் சுட முடியாது. லைசென்ஸ் இல்லாமல் துப்பாக்கி வைத்திருந்தாலே ஆயுத தடைச் சட்டத்தில் தண்டனை.

    * சாதாரணமாக ஒருவரை அடித்து காயப்படுத்துவார் ஹீரோ அல்லது வில்லன். நிஜத்தில் செக்‌ஷன் 294 (பி). 506 (2), 307 என பல செக்ஷன்கள் பாயும் வாழ்நாள் முழுவதும் சிக்கல் அரசு வேலைக்கு போக முடியாது.

    * சாலையில் வேகமாக பைக் சாகசத்தில் ஈடுபடுவார் ஹீரோ. நிஜத்தில் இவ்வாறு நடந்தால் ரேஷ் டிரைவிங் என லைசென்ஸ் ரத்து, சிறை, அபராதம், விபத்தினால் காயம் என பல பிரச்சினைகள் நடக்கும்.

    * பெண்ணை துரத்தி துரத்தி காதல் செய்ய சொல்லி வற்புறுத்துவதால் அப்பெண் காதலிக்க தொடங்குவாள், பெண்ணை கண்டபடி திட்டுவது. ஆனால் நிஜத்தில் ஈவ் டீசிங் சட்டம் பாயும், 18 வயதுக்கு கீழ் உள்ள பெண் என்றால் போக்சோ சட்டமே பாயும்.

    * ரக்கட் பாய்ஸ் முரட்டுத்தனமான பாயாக ஹீரோ திரிவார். வேலைக்கு செல்லாமல் சோம்பேறியாக திரிவார், ஆனால் காதலிப்பார். நிஜத்தில் இப்படி திரிந்தால் அனைத்து பிரச்சினைகளும் வந்து சேரும். வறுமையில் வாட நேரிடும்.

    * ஹீரோ 5 கொலை 6 கொலை செய்துவிட்டு மறுநாள் சாதாரணமாக டீக்கடையில் உட்கார்ந்து டீ குடித்துக்கொண்டிருப்பார். நிஜத்தில் ஒரு கொலை அல்ல கத்தியை வைத்து காயம் விளைவித்தாலே தண்டனை சிறைவாசம், வழக்குச் செலவு இருக்கும். மீள முடியாது.

    * சினிமாவில் அலட்சிய ஹீரோக்கள், புள்ளிங்கோவை ஹீரோயின் விரும்புவார். நிஜத்தில் இப்படிப்பட்டவர் சமூகத்திற்கு எதிரானவர்களாக, பொறுப்பற்றவர்களாக இருப்பார்கள். இவர்களை விரும்பும் பெண்கள் மணமுடித்தால் பெரிய துன்பத்தை அனுபவிப்பார்கள்.

    சென்சார் போர்டு நடைமுறை இன்னும் சரியாக வேண்டுமா?

    சென்சார் போர்டு நடைமுறை இன்னும் சரியாக வேண்டுமா?

    இப்படி நிழலுக்கும் நிஜத்துக்கும் ஆயிரம் பிரச்சினைகள் இருக்கும்போது திரைப்படக்காட்சிகளில் உள்ளதை ரசிக மனோபாவத்தை தாண்டி தீவிரமாக பின்பற்றும் இளம் தலைமுறையினர் சிக்கலையே அனுபவிக்கிறார்கள். இதுபோன்ற குற்றச்செயல்களில் அவர்கள் மட்டுமல்ல அவர்களால் பொதுமக்களும் பாதிக்கப்படுகின்றனர் என்பதே உண்மை. இளைஞர் தாக்கியதால் உயிரிழந்த 4 காவலாளிகள் என்ன தவறு செய்தார்கள். அவர்களை நம்பி இருந்த குடும்பத்தின் நிலை? வன்முறை, ய்தார்த்ததுக்கு புறம்பான காட்சிகள் சமூகத்தை பாதிக்கும் காட்சிகளை நெறிப்படுத்த சென்சார் கொண்டுவரப்பட்டது. ஆனால் தற்போது வரும் ரத்தம் தெறிக்கும் கொடூர காட்சிகள் சென்சார் சட்டத்தை மீண்டும் விவாதத்துக்குட்படுத்த வேண்டிய தேவையை நமக்கு உணர்த்துகிறது.

    English summary
    Youth arrested for the serial murder case, after watching KGF movie He was killing security guards with KGF-style beating with a hammer he told his confession. On the one hand, while the government is fighting against drugs, movies supporting the drug culture dominate the younger generation.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X