twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சீரியல் பரிதாபங்கள்..கோர்ட்டு காட்சிகளை அபத்தமாக காட்டும் பிரபல சீரியல்..ஒரு நியாய தர்மம் வேண்டமா?

    |

    சீரியல்களில் வரும் காட்சிகள் நடைமுறைக்கு சம்பந்தமில்லாமல் எல்லையற்றுப் போகிறது.

    சீரியல்களின் இயக்குனர்கள் கதாசிரியர்கள் தங்கள் மனதுக்கு தோன்றியது நடைமுறை என பதிவு செய்வது சாதாரண மக்களை நம்ப வைக்கும் செயல் தவறாக நிலையில் வழிகாட்டும் செயல்.

    இதுபோன்று காட்சியமைப்பவர்கள் இல்லாத ஒன்றை பொதுமக்களுக்கு சொல்லி தவறான ஒன்றை பதிய வைக்கிறார்கள் என்று சட்டம் சார்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

    இவருக்கு பதில் இவர்... விஜய் டிவி டாப் சீரியல்களில் மாற்றப்படும் முக்கிய கேரக்டர்கள் இவருக்கு பதில் இவர்... விஜய் டிவி டாப் சீரியல்களில் மாற்றப்படும் முக்கிய கேரக்டர்கள்

     மிகைப்படுத்தும் சினிமா காட்சிகள்

    மிகைப்படுத்தும் சினிமா காட்சிகள்

    சாதாரணமாக ஒரு விஷயத்தைப் பற்றி சற்று மிகைப்படுத்தி சொல்வது சினிமாவின் வழக்கம் சாதாரண இளைஞர் 20 க்கும் மேற்பட்ட அடியாட்களை அடித்து துவம்சம் செய்வது, பயிற்சி இல்லாதவர் திடீரென மிஷின் கன் துப்பாக்கியை வைத்து சுடுவது போன்ற காட்சிகள் சுவாரஸ்யத்தை கூட்டுவதற்காக வைக்கப்படுத்தவதாக எடுத்துக்கொள்ளலாம். ஆனால் மிகைப்படுத்துதல் என்பது வரம்பு மீறி சென்று கொண்டிருப்பதை சினிமாவில் பார்க்கிறோம். அதையெல்லாம் எல்லாம் தூக்கி சாப்பிடும் அளவிற்கு சீரியலில் இயக்குனர்களுடைய நடவடிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

     நடைமுறைக்கு சம்பந்தமில்லாத சீரியல் இயக்குநர்கள், கதாசிரியர்கள்

    நடைமுறைக்கு சம்பந்தமில்லாத சீரியல் இயக்குநர்கள், கதாசிரியர்கள்

    வடிவேல் படத்தில் ஒரு வசனம் சொல்லுவார். 'எதற்கும் ஒரு நியாய தர்மம் வேண்டாமாடா' என்று கேட்பார் அப்படித்தான் சீரியல் இயக்குனர்கள், கதை ஆசிரியர்களை பார்த்து கேட்க தோன்றுகிறது. சீரியல் எடுப்பவர்கள் தமிழக மக்களின், குறிப்பாக தமிழக இல்லத்தரசிகளை பற்றி என்ன நினைக்கிறார்கள்? அவர்களை ஒன்றும் அறியாத எதற்கும் உதவாதர்கள் என்று நினைக்கிறார்களா? அல்லது இவர்களுக்கு அடிப்படை பற்றிய ஞானம் இல்லையா என்கிற அளவிற்கு சீரியல்களில் வரும் காட்சிகள் அதிர்ச்சி ஊட்டுகின்றன. இது சமூக வலைதள காலம். அனைத்து விஷயங்களும் உள்ளங்கையில் உள்ள காலம். இந்த காலத்தில் இது போன்ற காட்சிகளை எடுக்கும் இயக்குனர்கள், கதாசிரியர்கள் மற்றும் படத்தில் நடிப்பவர்கள் வெளி உலகில் உள்ள நடைமுறைக்கும் இதற்கும் சம்பந்தமே இல்லை என்பதை அறிவார்களா? இல்லையா? என்று தெரியவில்லை.

     அன்பே வா சீரியலி அபத்தம்

    அன்பே வா சீரியலி அபத்தம்

    நாம் பலமுறை சீரியல்களில் வரும் அபத்தமான காட்சிகளை 'சீரியல் பரிதாபங்கள்' என பதிவு செய்து வருகிறோம். அந்த வகையில் ஒரு பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'அன்பே வா' என்கிற சீரியலில் இன்று அபத்தத்திலும் அபத்தமான ஒரு காட்சியை இயக்குனரும், கதாசிரியரும் அமைத்துள்ளது பற்றி இங்கு பார்ப்போம். இதற்கு காரணம் இந்த காட்சியை பார்த்து சில வழக்கறிஞர்கள், சட்டத்துறையினர் இல்லாத ஒன்றை எதற்காக இது போன்று பதிவு செய்கிறார்கள் இது மக்களிடம் தவறான எண்ணத்தை ஏற்படுத்தும் அல்லவா? என்று சொன்னதால் இந்த பதிவு.

     நீதித்துறைப்பற்றி தெரிந்துக்கொண்டு எடுக்க வேண்டாமா?

    நீதித்துறைப்பற்றி தெரிந்துக்கொண்டு எடுக்க வேண்டாமா?

    காவல்துறை, நீதித்துறை மக்களிடம் எப்போதும் மதிப்பு மிகுந்த துறைகளாக உள்ளன. இதை காட்சிப்படுத்தும் பொழுது சரியான முறையில் காட்சிப்படுத்த வேண்டும். தனது கதை வசனத்திற்காக, உணர்ச்சிக்காக எதையாவது எழுதுகிறோம் என்று நடைமுறையில் இல்லாத ஒன்றை பதிவு செய்ய முடியாது. அம்மாவை அம்மா என்றும் அப்பாவை அப்பா என்றும் பதிவு செய்யும் பொழுது நீதிமன்றத்தில் உள்ள நீதிபதிகள் நடைமுறைகளை எதார்த்தம் மாறாமல் தான் பதிவு செய்ய வேண்டும், என்று சிலர் சுட்டிக்காட்டியதன் விளைவு இந்த பதிவு. 'அன்பே வா' சீரியலில் கதாநாயகனுக்கு பல தொல்லைகளை கொடுக்கிறார் அவருடைய சகோதரி. கதாநாயகன் அந்த துன்பங்களை எல்லாம் தாங்கி எதிர்கொண்டு வருகிறார்.

     கன்னித்தீவு கதை போல் நீளும் சீரியல்களின் பழிவாங்கும் படலம்

    கன்னித்தீவு கதை போல் நீளும் சீரியல்களின் பழிவாங்கும் படலம்

    அதற்கு பெரிதும் உதவியாக இருப்பது கதாநாயகி இந்த சீரியலில் முக்கிய நகர்வே கதாநாயகியை சுற்றித்தான். அவர் எப்படி எல்லாம் இது போன்ற சதிகளை முறியடிக்கிறார், விக்ரமாதித்தன் வேதாளம் கதை போல் சீரியல்களில் ஏன் தான் திரும்பத் திரும்ப ஒருத்தர் மற்றவருக்கு தொல்லை கொடுத்துக் கொண்டிருப்பதும், அவர் தொல்லைகளை முறியடிப்பதும்- மீண்டும் தொல்லை கொடுப்பதும் மீண்டும் முறியடிப்பது என சிந்துபாத் கன்னித்தீவு கதை போல் நீள்கிறதோ அவர்களுக்கே வெளிச்சம். அன்பே வா சீரியலிலும் தொல்லை கொடுக்கும் சகோதரியை அண்ணன் எப்படி சமாளிக்கிறார் அண்ணனின் மனைவி எப்படி சமாளிக்கிறார் என்பதே கதை.

     கணவனுக்காக மனைவி நீதிமன்றத்தில் வாதாடுகிறார்-அபத்தமோ அபத்தம்

    கணவனுக்காக மனைவி நீதிமன்றத்தில் வாதாடுகிறார்-அபத்தமோ அபத்தம்

    இதில் ஒரு காட்சியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒரு பக்கத்துக்கு ஆதரவாக பணத்தை வாங்கிக்கொண்டு கதாநாயகனை பிடித்து சிறையில் வைக்கிறார். அதற்கு ஜாமீன் கேட்டுநீதிமன்றத்தில் கதாநாயகியே வாதாடும் காட்சி. இதில் தான் பிரச்சனை. நீதிமன்ற காட்சிகளை எடுக்கிறேன் பேர்வழி என்று பெருத்த அபத்தமான காட்சிகள் எடுத்து வைத்துள்ளனர். நீதிமன்றத்தில் தனது கணவனுக்காக கதாநாயகி நேரடியாக இறங்கி வாதாடுகிறார். குறுக்கு விசாரணை வேறு செய்கிறார். விசாரணை அதிகாரி அதிகாரியை மடக்கி மடக்கி கேட்கிறார், அரசு வழக்கறிஞர் அவருடைய வாதத்திறமைக்கு முன் எதிர்வாதம் வைக்க முடியாமல் போகிறது. பின்னர் கணவருக்கு ஜாமீன் கிடைக்கிறது.

     மற்றவர்களுக்காக வழக்கறிஞர் மட்டுமே வாதாட முடியும்

    மற்றவர்களுக்காக வழக்கறிஞர் மட்டுமே வாதாட முடியும்

    குடும்பமே கதாநாயகி தூக்கி வைத்து கொண்டாடுகிறது சாதாரணமாக மேம்பாக பார்த்தால் இதில் என்ன இருக்கிறது என்று கேட்க தோன்றும். ஆனால் இவர்களுடைய அபத்தம் எந்த அளவுக்கு சென்றிருக்கிறது என்பதை பாருங்கள். ஒரு வழக்கிற்காக நீதிபதி முன் குற்றவாளிக்கு ஜாமீன் கேட்டு வாதாட வழக்கறிஞருக்கு மட்டுமே அனுமதி உண்டு. குற்றவாளியின் மனைவி என்ற காரணத்திற்காக எல்லாம் நீதிமன்றத்தில் போய் வாதாட முடியாது. முதல் அபத்தம் கதாநாயகி வழக்கறிஞரும் அல்ல. குற்றவாளியான கணவனுக்கு மனைவி என்பதை தவிர வேறு எந்த தகுதியும் இல்லாதவர் வழக்கில் வாதாடுகிறார். அடுத்து விசாரணை அதிகாரி சாட்சி சாட்சியளிக்க வரும்போது முழு யூனிபார்மில் வரவேண்டும். அவர் சாதாரண உடையில் சீருடை இல்லாமல் நீதிபதி முன் கூண்டில் ஏறி சாட்சி சொல்கிறார்.

     நீதிபதியே வழக்கை ஒத்தி வைத்தப்பின் ஜாமீன் அதுவும் நிபந்தனை ஜாமீன்

    நீதிபதியே வழக்கை ஒத்தி வைத்தப்பின் ஜாமீன் அதுவும் நிபந்தனை ஜாமீன்

    மற்றொருபுறம் வக்கீல்கள் அமரும் இடத்தில் ஏடிஜிபி ரேங்கில் உள்ள அதிகாரி உட்கார்ந்து இருக்கிறார். அப்படி எல்லாம் அமர முடியாது. இதில் நாலாவது அபத்தம் விசாரணையை நீதிபதி கேட்டுவிட்டு நீதிமன்றம் இத்துடன் முடிகிறது என்று சொல்லிவிட்டு போன பின்பு கணவருக்கு ஜாமீன் கிடைத்து விட்டதாக அவருடைய வழக்கறிஞர் வெளியில் அழைத்து வருகிறார். எப்படி நிபந்தனை ஜாமீன் கிடைக்கிறது. யார் கொடுத்தது, கோர்ட் குமாஸ்தாவா? இதையெல்லாம் அபத்தம் என்று நாம் சொல்வதை விட சம்பந்தப்பட்டவர்களை கேட்பது சிறந்தது என்று உயர் நீதிமன்ற வழக்கறிஞரிடம் இது குறித்து கேட்டு அதன் பதில் தனியாக பேட்டியாக தரப்படும்.

    English summary
    In recent days The scenes in Tv serials become ridiculous and irrelevant. The directors of the serials and the writers of the serials are misguiding the common people by recording what they think is practical. The law-related people said that people who show like this are telling the public something that is not there and posting something wrong.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X