Marimuthu: என்னடா வாழ்க்கை இது.. கடைசி வரை நிறைவேறாமல் போன மாரிமுத்துவின் ஆசை!

சென்னை: நடிகர் மாரிமுத்துவின் ஆசை கடைசி வரை நிறைவேறாமல் போய்விட்டது என்று தயாரிப்பாளர் மணி கண் கலங்கி பேட்டி அளித்துள்ளார்.

இயக்குனரும் நடிகருமான மாரிமுத்து இன்று மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 57.

இயக்குநர் ஆகவேண்டும் என்ற ஆசையில், பேருந்து வசதிக்கூட இல்லாத கிராமத்தில் இருந்து வந்த மாரிமுத்து. கண்ணும் கண்ணும், புலிவால் ஆகிய இரண்டு படத்தை இயக்கி உள்ளார்.

Serial producer Mani explains what was the last wish of actor Marimuthu

இயக்குநர்,நடிகர்: மாரிமுத்து இயக்குநராக இருந்த போதும், சினிமாவில் நடிக்க வந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டார். இவர் மிஷ்கின் இயக்கிய யுத்தம் செய் என்ற படத்தில் நடிகராக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து, வாலி, உதயா, பரியேறும் பெருமாள், உள்பட சில படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஜெயிலர் படத்தில்: பரியேறும் பெருமாள் படத்தில் இவரது கதாபாத்திரம் பேசும்படி இருந்தது. இந்த படத்தைத் தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படத்தில் கறுப்பு வேட்டி சட்டையுடன் வில்லனுடன் நடித்திருந்தார். இந்த கதாபாத்திரத்திலும் தனக்கே உரிய பாணியில் நடித்திருந்தார்.

திடீர் மரணம்: கடந்த இரண்டு ஆண்டு காலமாக உச்சத்திற்கு வந்து கொண்டிருந்த மாரிமுத்து இன்று காலை 8.30 மணி அளவில் மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது உடல் வளசரவாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது மறைவுக்கு திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கடைசி ஆசை: இந்நிலையில் இவருடன் பணியாற்றிய சீரியல் தயாரிப்பாளர் மணி செய்தி சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், கடந்த 2 வருடத்தில் அவர் அடைந்த உச்சம் மிகப்பெரியது, வீடு கட்ட வேண்டும் என்பதே அவரது மிகப்பெரிய ஆசை, வீடு கட்டி கொண்டிருக்கும் போதே இப்படி ஒரு துயரம் நிகழ்ந்துள்ளது.இவரின் இந்த திடீர் இறப்பை பார்க்கும் போது நாம் நம் உடல் நலம் மீது அக்கறை செலுத்த வேண்டும் என்ற அச்சம் ஏற்படுகிறது என கண்கலங்கி வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X