“சீரியல் சோதனைகள்“..லாஜிக்கே இல்ல..எல்லாமே காப்பி.. முடியலடா சாமி!

சென்னை : இன்றைய காலகட்டத்தில் இல்லத்தரசிகள் மட்டுமல்லாது பெரும்பாலான இளைஞர்களையும் கவர்ந்து வருகிறது சீரியல். அதுவும் கொரோனா காலகட்டத்திற்கு பிறகு சீரியல்களை ஏராளமான ரசிகர்கள் பார்த்து வருகின்றனர்.

இப்படி சீரியல்கள் ரசிகர்களை குஷிப்படுத்தினாலும், சில சமயங்களில் பொறுமையை ரொம்பவே சோதிக்கும் வகையில் சில காட்சிகள் அமைந்து ரசிகர்களை கடுப்பாக்கி விடும்.

சரி இந்த சீரியல் தான் அப்படி, அடுத்த சீரியலை பார்க்கலாம் என்று பார்த்தால் அந்த சீரியல் அதுக்கும் போல லாஜிக்கை மீறி ருத்ரதாண்டவம் ஆடிக்கொண்டு இருக்கும். அப்படியான சில சீரியல் சோதனைகளை இப்போது பார்க்கலாம்.

தெய்வம் தந்த பூவே

தெய்வம் தந்த பூவே

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தெய்வம் தந்த பூவே இந்த சீரியல் திங்கள் முதல் சனி வரை மதியம் 2.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் கடந்த வாரம் நடந்த கொடுமை என்னென்னா. சீரியலில் வரும் நாயகனுக்கு தீராத நோய் என்ன நோய்னு கேட்காதீங்க அதை டைரக்டர் சொல்லல. இதனால், கணவனை காப்பாற்ற போராடுகிறார் நாயகி மித்ரா.

பரிகாரம்

பரிகாரம்

அதற்காக கோவில் கோவிலாக சென்று பரிகாரம் செய்கிறார். ஹைலைட்டே அந்த பரிகாரம் தான். அதாவது காரசட்னிக்கு அரைக்கிற மாதிரி கிலோ கணக்கில் காய்ந்த மிளகாயை அம்மியில் அரைந்து எடுத்து அந்த மிளகாயில் வடை சூடவேண்டுமாம், அதுவும் எப்படினா எண்ணை சட்டியில் வெறும் கையில் வடையை திருப்பி விடனுமாம். என்ன கொடுமை சார்னு கேட்க தோணுதா... இப்படி காய்ந்தமிளகாய் வடை பரிகாரத்தை இயக்குநர் எப்படி யோசிச்சி இருப்பாரோ தெரியால. அது அந்த கடவுளுக்குத்தான் வெளிச்சம்.

சிற்பிக்குள் முத்து

சிற்பிக்குள் முத்து

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் சிற்பிக்குள் முத்து. இதில், தங்கை காதலித்தவனைத் திருமணம் செய்து கொள்ள, தன்னுடைய வாழ்க்கையை தானே பாழாக்கிக்கொள்ளும் அக்காவின் கதை. தங்கைக்கு அவள் காதலனை திருமணம் செய்து வைக்க வேண்டுமானால், அக்கா மன நலம் பாதிக்கப்பட்ட ஒருவனை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பது தான் கண்டிஷன். அதற்கு ஏற்றுக் கொண்ட அக்கா திருமணம் செய்து கொள்கிறார்.

என்னடா பண்ணி வெச்சிருக்கீங்க

என்னடா பண்ணி வெச்சிருக்கீங்க

கதை எல்லாம் ஒகே தான், சிரியலும் டிஆர்பி ரேட்டிங்கில் நல்ல போய்ட்டுத்தான் இருக்கும். ஆனால், மனம் வளர்ச்சி பாதிக்கப்பட்டவராக நடிக்கும் கதாநாயகன் மற்ற நேரங்களில் பொம்மையை வைத்து விளையாடுகிறார். ஆனால், ஹீரோயின் கிட்டவரும் போது மட்டும் ரொமான்ஸ் லுக் விடுவது, பர்ஸ்ட் நைட் எப்போ.. எப்போனு கேட்பதை பார்க்கும் போது. டேய்.. என்னடா பண்ணி வெச்சிருக்கீங்க என கேட்கத் தோன்றுகிறது.

சத்யா 2

சத்யா 2

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிரியல் சத்யா 2. இதற்கு முன் ஒளிபரப்பான சத்யா சீரியலுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து சத்யா 2 ஒளிபரப்பாகி வருகிறது. அதில், ஆயிஷா இரண்டு விதமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஒரு கதாபாத்திரம் கிராமத்து பெண், மற்றொரு கதாபாத்திரத்தில் தடாலடி போலீஸ்.

ஈ அடிச்சான் காப்பி

ஈ அடிச்சான் காப்பி

மிரட்டலான போலீஸ் என்பதை காட்டுவதற்காக என்ன செய்யலாம் என்று யோசித்த இயக்குநருக்கு புதுசா ஐடியா எதுவும் வராததால், தெறி திரைப்படத்தில் விஜய் ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார் ரைம்சை சொல்ல சொல்லி ரவுடிகளை அடிப்பாரே அதே சீனை கொஞ்சம் கூட யோசிக்காமல் சீரியலில் சொருகி உள்ளார். படத்துலத்தான் காப்பினா.. சீரியலிலும் காப்பியா என கேட்டு ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

ரோஜா அலப்பறை

ரோஜா அலப்பறை

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா சீரியலில் இப்போது பேய் எபிசோடு ஓடிக்கொண்டு இருக்கிறது. கல்லை கட்டி கடலில் தூக்கிபோட்டாலும் கட்டுமரமாக மிதப்பேன் என்பது போல. நடுக்கடலில் வீசப்பட்ட ரோஜா சும்மிங்க போட்டு தப்பித்து வந்து செய்யும் அலப்பறை தாங்க முடியால. இது சந்திரமுகி பேயா? அருந்ததி பேயா? இல்லை அரண்மனை பேயா? என்று, கேட்டு ரசிகர் கிண்டலடித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X