Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
சந்தானம் படத்திற்கு நீடிக்கும் சிக்கல்!
Recommended Video
சென்னை : அட்டகத்தி தினேஷ் நடித்த 'ஒருநாள் கூத்து' உட்பட பல படங்களைத் தயாரித்த 'கெனன்யா பிலிம்ஸ்' தயாரித்த படம் 'உள்குத்து'. கார்த்திக் ராஜு இயக்கத்தில் 'அட்டகத்தி' தினேஷ், நந்திதா நடித்துள்ள இந்த படத்தின் வேலைகள் முடிவடைந்த நிலையில் ஏற்கெனவே பல தடவை ரிலீஸ் தேதிகள் குறிக்கப்பட்டன.
நிதி சிக்கலில் சிக்கியிருந்த 'உள்குத்து' தயாரிப்பாளர் ஜெ.செல்வகுமார், இப்போது பல பிரச்னைகளை கடந்து இன்னொருவர் மூலமாக வருகிற டிசம்பர் 29-ம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய உள்ளார். இதே நிதி பிரச்சனையால் 'கெனன்யா ஃபிலிம்ஸ்' தயாரித்துள்ள மற்றொரு படமான 'சர்வர் சுந்தரம்' படத்துக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப்படத்தை அறிமுக இயக்குனர் ஆனந்த் பால்கி இயக்கியுள்ளார். 'சக்க போடு போடு ராஜா' ஹீரோயின் வைபவி சாண்டில்யா கதாநாயகியாக நடித்துள்ளார். 'உள்குத்து' வெளிவந்து அதன் ரிசல்ட்டை பொறுத்தே, தயாரிப்பாளர் சர்வர் சுந்தரம் பட ரிலீஸ் பற்றி அறிவிப்பார் என தெரிகிறது.
சந்தானம் நடித்திருக்கும் 'மன்னவன் வந்தானடி', 'ஓடி ஓடி உழைக்கணும்' ஆகிய படங்களும் ரிலீஸுக்கு காத்திருக்கின்றன. இந்நிலையில், அடுத்த படத்தில் நடிக்கவும் கமிட் ஆகிவிட்டார் சந்தானம். தயாரிப்பாளர் தரப்பில் பிரச்னைகள் தீர்ந்தால் ஒவ்வொன்றாக ரிலீஸ் செய்யப்படலாம் எனத் தெரிகிறது.