சந்தானத்தின் ‘சர்வர் சுந்தரம்‘.. ஒரு வழியாக 31-ம் தேதி ரிலீஸ்!

Recommended Video

Server Sundharam Audio Launch | Santhanam | Santhosh Narayanan | Filmibeat Tamil

சென்னை : சர்வர் சுந்தரம் படத்தின் பாடல் வெளியிட்டு விழா பிரம்மாண்டமாக அரங்கேறியது. மேலும் படம் வரும் 31-ம் தேதி திரைக்கு வரும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள படம் சர்வர் சுந்தரம். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது. இவ்விழாவில் பழம்பெரும் நடிகர் நாகேஷ் அவர்களின் பேரன் மற்றும் படத்தில் நடித்த ஹீரோயின் வைபவி, சோனியா அகர்வால்,பாடலாசிரியர் விவேக்,இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் மனைவி மீனாட்சி இவர்களுடன் படத்தின் இயக்குனர் பால்கி பங்கேற்றனர்.

சர்வர் சுந்தரம் படம் பல தடைகளை தாண்டி வருகின்ற 31 ஆம் தேதி வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். இந்நாள் நடிகர் நாகேஷ் அவர்களின் நினைவு நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

server sundaram to be released on january 31

விழாவில் கலந்து கொண்டு பேசிய சோனியா அகர்வால் - நடிகர் நாகேஷ் உடன் நான் நடித்த காதல் கொண்டேன் படத்தை மறக்க முடியாது அவர் உடன் நடித்த அனுபவம் இன்னமும் நினைவில் உள்ளது என்றார். இயக்குனர் பால்கி இப்படத்தை துவங்கிய போது அவரது குழந்தை இரண்டாம் வகுப்பு தற்போது அந்த குழந்தை பெரிதாகி எட்டாம் வகுப்பு என்று சொன்னபோது, இந்த படத்திற்காக கடந்து வந்த பயணம் புரிந்தது .

பிரபல சமையல் செப் வெங்கடேஷ் பட் கலந்து கொண்டு பேசுகையில் படத்தின் இயக்குனர் எனக்கும் பல வருடங்களாக பழக்கம் என்று கூறினார். படத்தில் அவரும் பல உதவிகள் செய்து உள்ளார் என்பது மிகவும் முக்கியம்.

server sundaram to be released on january 31

இயக்குனர் பால்கி மணிரத்னம் அவர்களிடம் உதவி இயக்குனராக ஆயுத எழுத்து படத்தில் பணியாற்றி உள்ளார். நடிகை வைபவி நடித்த முதல் தமிழ் படம் இது தான் ஆனால் படம் ரீலிஸ் தாமதம். இந்த விழாவில் உணவே மருந்து பாடல் ஒளிபரப்பபட்டது, படத்தில் இந்த பாடல் காட்சிக்கு நிச்சயம் கைத்தட்டல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

server sundaram to be released on january 31

கடைசியாக இயக்குனர் ஹீரோயின் மற்றும் சோனியா அகர்வால் சேர்ந்து சந்தானத்தின் பிறந்த நாள் கேக்கை வெட்டினார்கள். இவ்விழாவில் படத்தின் இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பங்குபெற வில்லை ஒரு வீடியோ பதிவின் மூலம் பேசி இருந்தார். இந்த விழாவின் " ப்ரோ " பாடல் திரையிடப்பட்டது. ஆனால் சந்தானம் வரவில்லை , இசை அமைப்பாளர் வரவில்லை என்பது விழாவின் மைனஸ்.

server sundaram to be released on january 31

நிறைய நக்கலான கமெண்ட்ஸ் ஆடியன்ஸ் பக்கம் இருந்து வந்து கொண்டே இருந்தது . இவை எல்லாம் தாண்டி இந்த படம் வெற்றி பெற வேண்டும் என்பது தான் அனைவரது ஆசையும். சர்வர் சுந்தரம் எப்படி சர்வீஸ் செய்கிறார் என்பது விரைவில் திரையில் தெரியும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X