twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    படப்பிடிப்பில் பங்கேற்ற 10 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு.. ஷூட்டிங் திடீர் நிறுத்தம்!

    By
    |

    ஐதராபாத்: கொரோனா பாதிப்பு காரணமாக அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தின் ஷூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளது.

    அல வைகுந்தபுரம்லோ படத்தின் ஹிட்டுக்கு பிறகு அடுத்து அல்லு அர்ஜுன் நடிக்கும் படம், புஷ்பா.

    இதில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயின். சுகுமார் இயக்குகிறார். தேவிஶ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார்.

    பான் இந்தியா

    பான் இந்தியா

    இதன் ஷூட்டிங் தொடங்கிய நிலையில் கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டது. பான் இந்தியா முறையில், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாள மொழிகளில் உருவாகிறது. இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியாகி வரவேற்பை பெற்றது.

    பாலிவுட் வில்லன்

    பாலிவுட் வில்லன்

    இதில் விஜய் சேதுபதி, வன அதிகாரியாக நடிக்கிறார் என்று முதலில் தெரிவிக்கப்பட்டது. பின்னர் அவர் விலகினார். நடிகர் பாபி சிம்ஹாவும் நடிப்பதாக தகவல் வெளியானது. ஆனால் எதுவும் உறுதியாகவில்லை. இந்நிலையில், பாலிவுட் நடிகர் ஒருவர் வில்லனாக நடிக்க இருக்கிறாராம்.

    செம்மரக் கடத்தல்

    செம்மரக் கடத்தல்

    அவர் யார் என்பதை படக்குழு தெரிவிக்கவில்லை. விரைவில் அதுபற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்தப் படம் செம்மரக்கட்டை கடத்தல் தொடர்பான கதையை கொண்டது. கொரோனாவால் தடைபட்ட இந்தப் படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் மீண்டும் தொடங்கியது.

    Recommended Video

    நந்தா படத்துல நான் மட்டும் தான் திட்டு வாங்கல |ACTOR VINOD KISHAN CHAT | FILMIBEAT TAMIL
    கூட்டம் காரணமாக

    கூட்டம் காரணமாக

    ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள மரேடுமிலி காடுகளில் படப்பிடிப்பு தொடங்கியது. கொரானோவைக் கட்டுப்படுத்த பாதுகாப்பு வழிமுறைகளை படக்குழுவினர் பின்பற்றியும் அதிக கூட்டம் காரணமாக, சுமார் 10 பேருக்கு கொரானோ பாதிப்பு ஏற்பட்டது. அதை உறுதி செய்த பின் உடனடியாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

    English summary
    Allu Arjun starrer Pushpa shoot postponed to January after team members test COVID 19 positive
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X